விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, April 10, 2012

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் - GLOSSARY OF MODERN TAMIL -C




C - வரிசை
CAB - வாடகைச் சீருந்து
CABBAGE - முட்டைக் கோசு
CABLE - வடம்
CABLE CAR - கம்பிவட ஊர்தி
CABIN - சீற்றறை
CACTUS - சப்பாத்திக் கள்ளி
CADMIUM - நீலீயம்
CAECIUM - சீரிலியம்
CAFFEINE - வெறியம்
CAKE - இனியப்பம்
CAKE SHOP - இனியப்பகம்
CALCIUM - சுண்ணம்
CALENDAR - நாள்காட்டி
CALIPER - நழுவிடுக்கி
CALL OPTION - வாங்கல் சூதம்
CALL TAXI - அழைப்பூர்தி
CALCIUM - சுண்ணம்
CALCULATOR - கணிப்பான்
CALUMNY - வசை
CAMCORDER - நிகழ்பதிவி
CAMEL - ஒட்டகம்
CAMERA - நிழற்படக்கருவி/நிழற்படவி
CAMPHOR - கற்பூரம்
CANAL- கால்வாய்
CANINE - கோரைப்பல்/நாய்ப்பல்
CANNIBAL, CANNIBALISM - தன்னினத்தின்னி, தன்னினத்தின்னல்
CANNON - பீரங்கி
CANOE - வள்ளம்
CANOPY - கவிகை
CANTONMENT - பாளையம், படையிடம்
CANVAS - கித்தான்
CANVAS SHOE - கித்தான் சப்பாத்து
CANYON - ஆற்றுக்குடைவு
CAPE - கடல்முனை, நிலமுனை, கரைக்கூம்பு
CAPSTAN - நங்கூரவுருளை
CAPTAIN (FLIGHT) - குழுத்தலைவர்
CAPTAIN (SHIP) - மீகாமர்
CAPTAIN (SPORT) - அணித்தலைவர்
CAR - சீருந்து
CAR RENTAL - சீருந்து இரவல், சீருந்து இரவலகம்
CAR VACUUM - சீருந்து தூசி உறிஞ்சி/சீருந்து வெற்றிடவுறிஞ்சி
CARAMEL - எரிசர்க்கரை
CARBURETOR - காற்றுக்கலக்கி
CARBOHYDRATE - மாவுச்சத்து
CARBON - கரிமம்
CARBON PAPER - கரிப்படித்தாள்
CARBORUNDUM - தோகைக்கல்
CARD READER - அட்டைப் படிப்பி
CARDAMOM - ஏலக்காய்
CARETAKER GOVERNMENT - காபந்து அரசு
CAROL - ஞானகீதம்
CARPENTER - தச்சர்
CARPET - தரைப்பாய்
CARRIER TRUCK - தாங்குந்து
CARROM (BOARD) - சதுப்பலகை
CARROT - மஞ்சள் முள்ளங்கி/செம்மங்கி/
CARTILEGE - குடுத்தெலும்பு
CARTOON - கருத்துப்படம்
CAROUSAL (AMUSEMENT) - குதிரை ராட்டிணம்
CAROUSAL (CONVEYOR) - சக்கரவியூகம்
CASUARINA - சவுக்கு
CASH - காசு, ரொக்கப்பணம்
CASHIER - காசாளர்
CAST IRON - வார்ப்பிரும்பு
CASTING - வார்ப்படம்
CASTLE IN THE AIR - மனக்கோட்டை
CAT - பூனை
CAT'S EYE - வைடூரியம்
CAT FISH - கெளுத்தி
CATALYST - வினையூக்கி
CATALYTIC CONVERTER - மாசகற்றி
CATARACT - கண்புரை
CATERING - ஊட்டநெறி
CAT'S EYE - வைடூரியம்
CAT FISH - கெளுத்தி
CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு
CAUSTIC SODA - சாடாக் காரம்
CAVALRY - குதிரைப்படை
CAYENNE PEPPER - சீமைப்பச்சைமிளகாய், பேய்மிளகாய்
CEDAR - தேவதாரு மரம்
CEILING - உட்கூரை
CEILING FAN - கூரை விசிறி
CELERY - சிவரிக்கீரை
CELL PHONE (MOBILE PHONE) - கைபேசி, நகர்பேசி, அலைபேசி
CELLULOSE - மரநார்
CEMENT - சீமைக்காரை, பைஞ்சுதை
CENTIGRADE SCALE - சதாம்ச அளவு
CERAMIC TILE - வனையோடு
CERAMIC - வனைபொருள்
CEREMONY - சடங்கு, சடங்காச்சாரம், வினைமுறை
CERTIFY, CERTIFICATE - சான்றளி, சான்றிதழ்
CESIUM - சீரிலியம்
CESS - தீர்வை
CEYLON PLUM - சொத்தைக்களா
CHAIR - கதிரை, நாற்காலி
CHALK - சுண்ணங்கட்டி
CHALLENGE - அறைகூவல்
CHAMOMILE - சீமைச்சாமந்தி
CHAOS - கசகு
CHARGER - மின்னூட்டி
CHAUVINISM - குறுகியவாதம்
CHAUVINIST - குறுகியவாதி
CHAYOTE - சௌச்சௌ, சவுச்சவ்
CHECK-IN - பயண் ஆயத்தம்
CHECK-IN (LUGGAGE), CHECKED LUGGAGE - சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)
CHECK-POST - சோதனைச் சாவடி
CHECQUE - காசோலை
CHECQUE-BOOK - காசோலை ஏடு
CHEESE - பாலாடைக்கட்டி
CHEESE SPREAD - பாலாடைத் தடவை
CHEETAH - சிறுத்தைப்புலி
CHEMIST - வேதியியலர்
CHERRY - சேலா(ப்பழம்)
CHESS - சதுரங்கம்
CHICADA - சிள்வண்டு
CHICKEN-POX - சின்னம்மை, சிச்சுலுப்பை
CHICKPEA - கொண்டைக்கடலை
CHICORY - காசினிவிரை
CHIKUNGUNYA - மூட்டுக்காய்ச்சல்
CHIMNEY - புகைப்போக்கி
CHIPS (EATABLE) - சீவல்
CHISEL - உளி
CHIVES - உள்ளித்தழை, பூண்டுத்தழை
CHLORINE - பாசிகை, லவணசாரம்
CHLORINATION - பாசிகவூட்டல்
CHLOROFORM - ஒருக்கொள்ளிய முப்பாசிகம்
CHOCOLATE - காவிக்கண்டு
CHOKER (NECKLACE) - அட்டிகை
CHOLOROPHYL - பச்சையம்
CHOLERA - வாந்திபேதி
CHOLESTROL - ரத்தக் கொழுப்பு
CHRISTMAS - நத்தார்
CHROMIUM - நீலிரும்பு
CHRONOMETER - காலமானி
CIGAR - சுருட்டு
CIGARETTE - தம், வெண்சுருட்டு
CINNAMON - லவங்கப் பட்டை
CIRCUIT BREAKER - சுற்று முறிப்பான்
CIRCULAR - சுற்றரிக்கை
CIRCULATE - சுற்றனுப்பு
CIRCUS - வட்டரங்கு (PLACE), வட்டரங்கு வித்தை (TRICKS)
CITIZEN - குடிமகள் (f), குடிமகன் (m), குடிநபர்
CITIZENSHIP - குடியுரிமை
CIVET CAT - புனுகுப்பூனை
CIVIL SUPPLIES - குடிமைப்பொருள்
CLAIRVOYANCE - தெளிவுக்காட்சி
CLAMP - இறுக்கி, கவ்வி, பற்றி
CLARINET - காகளம்
CLARITY - தெளிமை, தெளிவு
CLAUSE (OF A LAW) - உறுப்புரை
CLERK - எழுத்தர்
CLIENT - வாடிக்கையர், வாடிக்கையாளர்
CLIFF - ஓங்கல்
CLINIC - மருத்துவகம்
CLIP - பிடிப்பி
CLONE - போலிகை
CLOSED CIRCUIT CAMERA - நெருங்கி சுழலும் நிழற்படக்கருவி/நிழற்படவி
CLOSED CIRCUIT TELEVISION (CCTV) - சுற்று மூட்டத் தொலைக்காட்சி
CLOVE - கிராம்பு
CLOVER - சீமைமசால்
CLUB - மன்றகம்
CLUB (RECREATIONAL) - மனமகிழ் மன்றம்
CLUTCH - விடுபற்றி
CO-ORDINATE - ஒருங்கியக்கு (act.), ஒருங்கியங்கு (pas.)
CO-ORDINATION - ஒருங்கியக்கம்
CO-ORDINATOR - ஒருங்கியக்குநர்
COAT - குப்பாயம்
COBALT - மென்வெள்ளி
COBBLER - சக்கிலியர்
COCKPIT - விமானியறை
COCOON - கூட்டுப்புழு
COCONUT - தேங்காய், கோம்பை (empty, without husk/உமியகற்றப்பட்ட)
COCONUT SHELL - சிரட்டை, கொட்டாங்குச்சி
COD - பன்னா
CODE (OF LAW) - சட்டக்கோவை
COFFEE - குழம்பி, கொட்டை வடிநீர்
COKE - கற்கரி
COLLAR (SHIRT) - கழுத்துப் பட்டி
COLLAR BONE - காறையுலும்பு
COLLATERAL - பிணையம், பிணையத் தொகை
COLLEGE - கல்லூரி
COLLOID - கூழ்மம்
COLON - முன் சிறுகுடல்
COLOUR PENCIL - வண்ண விரிசில்
COLUMBIUM - களங்கன்
COMET - வால்வெள்ளி
COMMANDER - படைத்தலைவர்
COMMANDO - அதிரடிப்படையர்
COMMISSION - ஆணைக்குழு
COMMISSION (PAYMENT) - பணிப்பாணை
COMMITTEE - செயற்குழு
COMMODITY - பண்டம்
COMMOMORATIVE - ஞாபகார்த்தம்
COMMUTATOR - திசைமாற்றி
COMPASSION - ஈவிறக்கம்
COMPACT DISK - குறுவட்டு, குறுந்தட்டு
COMPANY (ESTABLISHMENT) - குழுமம்
COMPASS - கவராயம்
COMPLACENCY - பொய்யின்பம்/தன்மகிழ்ச்சி
COMPLAINT - புகார்
COMPLIANT, COMPLIANCE - இணக்கமான, இணக்கம்
COMPUTER - கணிப்பொறி, கணினி
COMPUTERIZED NUMERICAL CONTROL (C.N.C.) MACHINE - கணிமுறை கடைப்பொறி/கணிக்கடைப்பொறி
CONCENTRATE, CONCENTRATION - கவனி, கவனம்
CONCENTRATION (ACID, CHEMICALS) - செறிவு
CONCERN (BOTHERATION) - இடர்ப்பாடு
CONCERT - கச்சேரி
CONCOCTION - கியாழம்
CONCRETE - கற்காரை
CONDENSED MILK - குறுகியப் பால்
CONDITION (TERMS) - அக்குத்து
CONFECTIONARY - பணிகாரம்
CONFECTIONER - பணிகாரர்
CONFERENCE - கருத்தரங்கு
CONFERENCE CALL - கலந்துரையாடல் அழைப்பு. கலந்தழைப்பு
CONIFER, CONIFEROUS FOREST - ஊசியிலை மரம், ஊசியிலைக் காடு
CONFIDENCE - தன்னம்பிக்கை
CONFIDENTIALITY, CONFIDENTIAL - மந்தணம், மந்தணமான
CONIFEROUS FOREST - ஊசியிலைக் காடு
CONJUCTIVITIES - வெண்விழி அழற்சி, விழிவெண்படல அழற்சி
CONSCIENCE - மனசாட்சி
CONSCRIPTION - படையாட்சேர்ப்பு
CONSTITUENCY - தொகுதி
CONSUMER - பாவனையாளர், நுகர்வர்
CONSISTENCY, CONSISTENT - ஒருதரம், ஒருதரமான/ஒருதரமாக
CONTACT - தொடர்பு
CONTACT (TOUCH) - தொற்று
CONTACT LENS - விழிவில்லை
CONTAINER - சரக்குப் பெட்டகம்
CONTAINER - கொள்கலன்
CONTEXT - இடஞ்சொற்பொருள்
CONTINENT - கண்டம்
CONTRACEPTIVE - கருத்தடையி
CONTRAST - உறழ்பொருவு, மலைவு
CONTROVERSY - சர்ச்சை
CONVENOR - அவைக்கட்டுநர், அழைப்பர்
CONVEYOR BELT - கொண்டுவார்
CONVICTION - திடநம்பிக்கை
CONVINCE (v.) - நம்பவை (வினை வேற்சொல்)
COOKY - ஈரட்டி
COOLANT - குளிர்பொருள்
COPPER - செம்பு, செப்பு, தாமிரம்
COPPERNICKEL - கல்வெள்ளி
COPPER SULPHATE - மயில்துத்தம்
CORAL - பவழம், முருகைக்கல்
COREL TREE - கல்யாணமுருங்கை
CORK - தக்கை
CORMORANT - காரண்டலம்
CORN - மக்காச் சோளம்
CORN FLAKES - சோளத்துருவல்
CORNEA - விழிவெண்படலம்
CORNICE - கொடுங்கை
CORROSION - அரிப்பு
COTTAGE - குடில்
COTTAGE CHEESE - பால்கட்டி
COUNTER - முகப்பு
COUPE - பதுங்கறைச் சீருந்து
COURIER - தூதஞ்சல்
COURTESY - பணிவன்பு
COVERAGE (NETWORK, TEST ETC.) - துழாவுகை
CRAB - நண்டு
CRACK - வெடிப்பு
CRAFTSMAN - கைவினைஞன்
CRAYON - வண்ணக்கட்டி, மெழுகு விரிசில்
CRANE (BIRD) - கொக்கு
CRANE - பளுதூக்கி
CRATER - கிண்ணக்குழி
CREDIT (LOAN) - கடன்
CREDIT (ADDITION INTO BANK ACCOUNT) - வரவு (தமிழ்க் குறி "")
CREDIT CARD - கடனட்டை
CREAK(ING SOUND) - கீரிச்சொலி
CREMATORIUM - சுடுகாடு, சுடலை
CRICKET - துடுப்பாட்டம், மட்டைப்பந்து
CRICKET (INSECT) - சீரிகை
CRITIC - திறனாய்வாளர்
CROTCH - கவட்டை
CRUISE (v.) - சீரியங்கு (வினை)
CRUISE CONTROL - சீர்வேகக்கருவி
CRUISING SPEED - சீரியங்கு வேகம், சீர்வேகம்
CRUST (EARTH) - (புவி)ஓடு
CRYSTAL - பளிங்கு
CUBICLE - குறுவறை
CURRENT (PRESENT, INSTANT, EG. CURRENT MONTH) - நாளது (எ.க. நாளது மாதம்)
CURRICULUM - பாடவிதானம், பாடத்திட்டம்
CURTAIN - திரைச்சீலை
CUTICLE - புறத்தோல்
CUMIN - ஜீரகம்
CUP - கோப்பை
CURFEW - ஊரடங்கு
CURRENT (ELECTRICITY) - மின்னோட்டம் (மின்சாரம்)
CURRENT (SEA) - நீரோட்டம்
CURD - தயிர்
CURIUM - அகோரியம்
CUSTOMS (IN AIRPORT, BORDER ETC) - சுங்கம், ஆயம்
CUTTER (VESSEL) - கத்திக் கப்பல்
CUTTLEFISH - கணவாய்
CYCLE - மிதிவண்டி
CYCLE-RICKSHAW - மிதியிழுவண்டி
CYCLOSTYLE - படிப்பெருக்கி
CYLINDER (AUTOMOBILE) - கலன்
CYLINDER (GAS) - வாயூகலன்
CYLINDER (SHAPE) - உருளை
CYANIDE (GENERAL) - ருசக்கரிமம்
















---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்