விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, April 10, 2012

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் - GLOSSARY OF MODERN TAMIL -D




D - வரிசை
DAFFODIL - பேரரளி
DAGGER - பிச்சுவா
DAHLIA - சீமையல்லி
DANCE, DANCER - நடனம், நடனர்
DANDRUFF - சொடுகு, பொடுகு
DAILY (NEWSPAPER) - நாளிகை
DAILY ALLOWANCE - அகவிலைப்படி
DAIRY - பால் பண்ணை
DAISY - வெளிராதவன், வெளிராதவப்பூ
DARN (v.), DARNER, DARNING - ஒட்டத்தை (வினைச்சொல்), ஒட்டத்தையலாளர், ஒட்டத்தையல்
DATUA - ஊமத்தை
DATE - திகதி, தேதி
DEADLINE - கெடு
DEATH ROW, DEATH ROW PRISONER - மரணச்சிறை, மரணக்கைதி
DEDUCTION (SALARY) - பிடித்தம்
DEBIT (DEDUCTION) - பற்று (தமிழ்க் குறி "")
DEBIT CARD - பற்றட்டை
DECADE - பத்தாண்டு
DECAF(FINATED COFFEE) - வெறியம் நீக்கியக் குளம்பி
DECOCTION - வடிசாறு
DECREE - தீர்ப்பாணை
DEBENTURE - கடனியம்
DEBT COLLECTOR - கடன்மீட்பர்
DEBT INSTRUMENT - கடன் பத்திரம்
DECEMBER - நளி-சிலை
DECENCY - தகைமை
DEFAULT - முன்னிருப்பு, கொடா நிலை
DEFENDANT - பிரதிவாதி
DEFIBRILLATION - குறுநடுக்கநீக்கம்
DEFIBRILLATOR - அதிர்வுப்பெட்டி/குறுநடுக்கமெடுப்பி
DEGREE (EDUCATION) - பட்டம்
DEGREE (TEMPERATURE, ANGLE) - பாகை
DEMAND DRAFT - வரைவு காசோலை, வரைவோலை
DEMAND NOTICE - கோரிக்கை அறிவிப்பு
DEMENTIA - மூளைத்தேய்வு
DEMOCRACY - ஜனநாயகம், மக்களாட்சி
DEMOGRAPHY, DEMOGRAPHER - மக்கள் கணிப்பியல், மக்கள் கணிப்பியலர்
DEMONSTRATION (OF AN EQUIPMENT ETC.) - தெரியக்காட்டல்
DEMURRAGE - சுணக்கக் கட்டணம்
DENGUE FEVER - எலும்பு முறிக் காய்ச்சல்
DENIM - உரப்புப்பருத்தி
DENTURE - பற்தொகுதி
DENSE, DENSENESS/DENSITY - அடர்த்தியான, அடர்த்தி
DEODOURANT - நாற்றநீக்கி
DEPARTMENT (GOVERNMENT, COLLEGE ETC) - துறை, திணைக்களம்
DEPARTMENTAL STORE - பலசரக்கு அங்காடி
DEPORT - நாடுகடத்து
DERIVATIVE - சார்பியம்
DESERVE - அருகதைப்படு
DETERGENT - சலவைக்காரம்
DETERMINE - உறுதிபடுத்து
DETERMINED (MENTALLY) - மன உறுதியான
DETONATOR - வெடிதூண்டி
DEVIL FIG - பேயத்தி
DIAL (A PHONE NUMBER) - சுழற்று, அழை
DIAL TONE - இயங்கொலி
DIALECT - கிளைமொழி
DIAPHRAGM - உதரவிதானம்
DIARRHOEA - பேதி, வயிற்றுப்போக்கு
DIARY - நாட்குறிப்பு, நினைவேடு
DICTATION - சொல்வதெழுதுதல்
DICTATOR - சர்வாதிகாரி
DICTATORSHIP - சர்வாதியாட்சி, வல்லாட்சி
DIE (GAME) - பகடைக்காய், கவறு
DIE (INTEGRATED CIRCUIT) - வகுமம்
DIE (COLOUR) - சாயம்
DIESEL - வளியெண்ணை, வளிநெய்
DIGIT - இலக்கம்
DIGITAL -இலக்க, எண்ணியல்
DIGITAL AUDIO TAPE - எண்ணியல் ஒலிநாடா
DIGITAL CAMERA - எண்ணியல் (புகப்/நிழற்)படக்கருவி
DIGITAL WATCH - எண்கடிகை
DIGNIFIED - கண்ணியமான
DIGNITY - கண்ணியம்
DINOSAUR - தொன்மா
DIPHTHERIA - தொண்டை அடைப்பான் நோய்
DIPLOMAT - விரகர்
DIRECT - நேரடி(யான)
DIRECT-TO-HOME (DTH) - இல்ல‌நேர‌டித் தொலைக்காட்சி
DIRECTOR - இயக்குநர்
DISCOMFORT - உபாதை
DISCUSS - சந்தித்துப் பேசு, கலந்தாராய்
DISCUSSION - கலந்தாய்வு
DISORDER - சீர்குலைவு
DIVIDEND - ஈவுத்தொகை
DISC - வட்டு
DISCLAIMER - மறுதலிப்பு, உரிமைத் துறப்பு
DISH ANTENNA - அலைக்கும்பா
DISTILLATION - துளித்தெடுப்பு
DISTILLED WATER - ஆவிநீர்
DISTILLRERY - வடிமனை, வடிசாலை
DISTRACTION - கவனச்சிதைவு
DIVERT, DIVERSION - கவனமாற்று, கவனமாற்றம்
DIVIDEND - பங்காதாயம், ஈவுத்தொகை
DOCTOR - வைத்தியர், மருத்துவர்
DOG - நாய், நடையன்
DOG IN THE MANAGER - அலுப்பன், அலுப்பத்தனம்
DOLPHIN - கடல்பன்றி, கடற்பன்றி
DOLPHINFISH - பதாலன், பாதாளன்
DOMAIN - எல்லையம்
DOME - கலசம், குவிமாடம்
DOOR-LENS - புறநோக்கி
DOOR-MAT - சவுட்டி
DOT MATRIX PRINTER - புள்ளியணி அச்சுப்பொறி
DOUGH - மேல்தயிர்
DOVE - புறா
DOWRY - மணப்பரிசம்/மணக்கொடை/மணக்கூலி
DRAGON - பறவைநாகம், வலுசர்ப்பம்
DRAIN - வடிகால்
DRAIN PIPE - தூம்பு
DRAW BRIDGE - தூக்குப்பாலம்
DRAWEE - பெயரவர்
DRILL-BIT - துரவாணி
DRIILLING MACHINE - துரப்பணம்
DRINKING WATER - குடிநீர்
DRINKING WATER POND - ஊருணி
DRIVER - சாரதி, ஓட்டுநர், ஓட்டி
DRY LAND - புஞ்செய் (தமிழ்க் குறி "")
DRUM - பறை
DUGONG - அவில்லியா
DUMB BELL - கர்லாக்கட்டை
DUNG - சாணம், சாணி
DURIAN - முள்நாரிப்பழம்
DUTY-FREE - தீர்வையற்ற
DUTY-FREE SHOP - தீர்வையில்லகம், தீர்வையில்லங்காடி
DYNAMITE - வேட்டு
DYNAMO - மின்னாக்கி
DYSENTARY - சீதபேதி
















---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்