விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, June 1, 2012

டெங்கு காய்ச்சல் - வருமுன் காக்க வழிகள் - தடுப்பு முறைகள்







டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...?
டெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன. பிடித்து வைத்துள்ள நீரில் அவை உண்டாகிப் பெருகுகின்றன. டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை இந்த வகை கொசு கடிக்குபோது வைரஸ் அதன் உடலுக்குள் செல்கிறது. அந்தக் கொசு நலமாயுள்ள ஒருவரைக் கடிக்கும்போது வைரஸ் அவரது உடலுக்குள் புகுந்து டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது.இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.


டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
  • டெங்கு காய்ச்சல் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் பாதிக்கும். திடீரென்று அதிகமான காய்ச்சல்,
  • தலைவலி,
  • உடம்பில் தற்காலிகமாக தோல் பாதிப்பு,
  • தொண்டைவலி,
  • கண் வலி,
  • இருமல் ஆகியவை முதல் அறிகுறிகளாகத் தோன்றுகின்றன.
  • கடுமையான உடல்வலி,
  • பசியின்மை குமட்டல், வாந்தியும் ஏற்படக்கூடும்,
  • சாதாரண இன்ஃபுளூயன்சா காய்ச்சல் மாதிரி இருந்து 4 அல்லது 6 நாட்களில் காய்ச்சல் குறைந்து உடம்பு முழுவதும் பொறிப்பொறியாக காணப்படலாம்.
  • கடுமையான வலி ஏற்படுவதால் இதை எலும்புடைக்காய்ச்சல் என்றும் அழைக்கிறார்கள்.


மற்றொரு வகை மிகவும் தீவிரமானது. இதை டெங்கு இரத்த ஒழுக்கு காய்ச்சல் (Dengue hemorrhagic fever அல்லது Dengue shock syndrome) என்றும் அழைக்கப்படுகிறது.
    • நல்ல காய்ச்சல்
    • தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
    • கடும் தலைவலி
    • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
    • வாந்தி
    • தோல் சிவத்தல் (rash)
    • வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்
    • மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள் -- petechiae)
    • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்

நான்கு நிலைகள்

  • அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை
  • ஆரம்ப நிலை டெங்குக் காய்ச்சல் நிலை
  • இரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கிக் காய்ச்சல் நிலை
  • டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை
தவிற்க்கும் வழிகள்
  • டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்க வீடுகளை சுற்றி மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • காய்ச்சிய குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
  • யாருக்காவது காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்கள் இருந்தால் உடனடியாக தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் இருந்தாலும் தாமதம் செய்யாமல் டாக்டர்களிடம் காட்டவேண்டும்.


--==--

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்