விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, November 30, 2013

குதிகால் வலி - Heal Pain


குதிகால் வலி,
குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள் போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் இது போன்ற வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று "எக்ஸ்-ரே" எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியைப் பொறுத்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். .

பொதுவாக, பலருக்கு காலையில் எழுந்ததுமே பாதங்களை கீழே வைத்தால் சட்டென வலிக்கும். ஆனால், கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும். பாதங்களின் தசைகள் இறுகி போனாலும், சரியான காலணிகளைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஏற்படும் வலி இது. வெகு சிலருக்கு உடம்பில் உப்பு சத்து அதிகமானாலும் இப்படிப்பட்ட வலி உண்டாகும்.

சுய  சிகிச்சைகள்
வெந்நீர் ஒத்தடம். ஒரு பெரிய பாத்திரத்தில், தோலில் சூடு தாங்கும் பதத்தில் - பாதங்கள் மூழ்கும் அளவுக்கு - வெந்நீர் ஊற்றி அதில் பாதங்களை பத்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள். இதே போன்று காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்து வந்தால் ஒரளவு குணம் தெரியும்.

மெழுகு ஒத்தடம்! ஒத்தடம் கொடுப்பதற்கென்றே கடைகளில் தேன் மெழுகு கிடைக்கும். இந்த மெழுகை வாங்கி வந்து காய்ச்சி ஒரு துணியை அதில் நனைத்தால், மெழுகு அதில் ஒட்டிக் கொள்ளும். அதை அப்படியே எடுத்து குதிகாலில் ஒத்தடம் கொடுத்தல் வலி குறையும்.

வயதுக்கு அதிகமான எடை இருந்தால் அதைக் குறைக்க வேண்டும் அதற்கான முறையான பயிற்சியை மேற்கொண்டாலும் வலி நீங்க வாய்ப்பிருக்கிறது.


காலணிகள்
குதிகால் வலிக்கு காலணிகளின் பங்கு அதிகம் என்பதால் மென்மையான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக குதிகால் வலியுள்ளவர்கள் "மைக்ரோ செல்லுலார் ரப்பர்"  எனப்படும் MCR Chapels அணிவது அவசியம். இதை வீட்டிற்குள் நடக்கும் போதும் அணிய வேண்டும்.

அப்படியும் உங்கள் வலி சரியாகவில்லையென்றால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us


==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்