விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, November 30, 2013

காதல் ஆரம்பமாகிவிட்டதா??? காதலில் விழுவதை கண்டுபிடிக்க சில தருணங்கள்காதல் ஆரம்பமாகிவிட்டதா??? காதலில் விழுவதை கண்டுபிடிக்க சில தருணங்கள்1.அந்த முக்கியமான நபருடன் இருக்கும்போது அவரைக்கண்டு கொள்ளாததுபோல் இருக்கிறீர்களா? அவர் இல்லாதபோது அவரை உங்கள் கண்கள் தேடுகிறதா? அப்படியாயின் காதல் ஆரம்பிக்கப்பார்க்குதுங்க!

2.
உங்க கிட்டதான் இவ்வளவு பேசுகிறேன்! வேற யாருக்கிட்டயும் நான் பேசிப்பழக்கம் இல்லைன்னு சொல்கிறாரா?... ரூட் ஆரம்பமாகுதுங்கோ!!!

3.
நண்பர்கள் கூட்டத்தில் உங்களை சிரிக்க வைக்க மாறிமாறி ஜோக்கா அடிப்பானுங்க. அதையெல்லாம் கண்டுக்காம ஒரு ஆசாமியையே நோட்டம் விடுகிறீர்களா? மேட்டர ஆரம்பிக்கவேண்டியதுதான்!!

4.
வெளியூர் போனவன்/ள் வந்து சேர்ந்துவிட்டேன் என்று போன் பண்ணவில்லை, போன் மணியோ அடிக்கவே இல்லை. வேலைவெட்டிக்கு சாக்கு சொல்லிட்டு போன் பக்கத்திலேயே காத்துக்கிட்டு இருக்கீங்களா? போன் வருதோ இல்லையோ! காதல் வந்து விட்டதுங்கோ!!

5.
பேசிக்கொண்டு இருக்கும்போது உங்கள் நண்பி/ நண்பருடன் உங்கள் நபர் அதிக கடலை வறுப்பதைக் கண்டு உங்கள் மனம் கொதிக்கிறதா?

6.
அந்த நபருடன் பேசும் போது உங்கள் இருவர் கண்களும் சந்தித்தால் ஷாக் அடிப்பதுபோல் இருக்கா!! காதல் கரண்டுதான் அது!!

7.
பேசிக்கொண்டிருக்கும் போதே உங்கள் கைக்கடிகாரம் மிக வேகமாக ஓடுவது போல் தெரியுதா!! 

8.
பெரிய பெரிய ஈமெயிலெல்லாம் கண்டுக்காம அந்த நபர் அனுப்பிய சின்ன ஈமெயில் பார்க்கப் பார்க்க ஆனந்தமா இருக்கா!!!அப்புறம் என்ன! அதுதான்!

9.
அந்த ஈமெயிலை அழிக்க விரும்பாத காரணத்தை மறைக்க எல்லா ஈமெயிகளையும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்களா?

10.
ஏதாவது புதுப்படத்துக்கு டிக்கெட் இலவசமாகக் கிடைத்தால் அந்த நபரின் ஞாபகம் வருகிறதா... வந்தாலே அதுதாங்கோ!!

11.
உங்கள் மனதுக்கே நீங்க அல்வா குடுக்கிற கணக்கா நாங்கள் ரெண்டுபேரும் சாதாரண நண்பர்கள்தான்னு உங்க மனசுக்கு சமாதானம் சொல்லுவீங்க. ஆனாலும் உங்க ரெண்டுபேருக்கும் நடுவில் அதுக்கும் மேலே ஏதாவது ஒன்னு ஓடுதா?..... ஓகே! ஓகே!
==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்