விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, November 29, 2013

ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்? - How Many times can do Sex
கேள்வி: வணக்கம் டாக்டர். எனக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. ஆனால் என் மனைவிக்கு அதில் விருப்பமில்லை. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.

பதில்: ஒரு நாளைக்கு எத்தனை முறை உறவில் ஈடுபடலாம் என்று  மருத்துவ பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமணமானவர்களில் நான்கு சதவீதமானவர்கள் ஒவ்வொரு நாளும்
உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஆவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள் வருடத்திற்கு 150  முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.

நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது மருத்துவர் தீர்மானிப்பதல்ல. எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும் என்பது நீங்கள் உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்க வேண்டியது. இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை.


பெண்களின் உடல் ஆண்களின் உடலைப்போல அல்ல.. மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும். இதனால் அவர்களின் உடல் நிலையும் காம உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே  இருக்கும்.

ஆண்களுக்கு அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் எளிதாக உறவில் ஈடுபட்டு விட முடியும். ஆனால் பெண்களுக்கு அது அவ்வளவு சாத்தியமில்லை. இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்.

பெண்களின் இந்த உடல் நிலை, மனநிலை மாற்றம், கடவுள் & இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.

அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை  வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இது கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும்.

அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை, உடலுறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும்.

இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் மிக முக்கியமானதாகும்.

இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மனநிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு  உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.

அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை  ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கற்பழிப்புக்கு கூட சமமானது..

ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம்  இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு சமமான குற்றமாகவே கருதப்படும்.


எனவே தினம் உடலுறவு என்பதை தவிர்த்து உங்களின் மனநிலையும் துனைவியின் மனநிலையும் ஒத்துபோகும்போது செயல்பட்டால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடையலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்