பாலுணர்வு என்பது இயற்கையே.
காமம்
என்பது இயல்பே, அதனை பயன்படுத்துகின்ற மனிதனின் மனம்தான் குற்றமுடையதாக இருக்கின்றது. காரணம்? பாலுணர்வை பற்றிய அறியாமைதான். நாம்பாலுணர்வை முறையான உறவில் பயன்படுத்துகின்றபோது ஆரோக்கியமானதாகிவிடும். முறையற்ற உறவில் பயன்படுத்துகின்ற போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது.
இவ்விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, நமது இந்திய மண்ணிலுள்ள முன்னோர்கள், மனித வாழ்வியல் ரகசியங்களை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களிலும், கஜூராஹோ கோவில் சிற்பங்களிலும், கிருஷ்ணபுரத்து ரதிமன்மதன் சிலைகளிலும் வடித்துள்ளார்கள். அறத்துப்பால்-பொருட்பால்- காமத்துப்பால் என்கிற முப்பாலையும் உள்ளடக்கிய உலக பொதுமறையான திருக்குறளில்கூட, மலரினும் மெல்லிது காமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக காமம் அல்லது பாலுணர்வு என்பதனை நாம் ஆராய முயற்சித்தால், மனிதர்கள் வாழும் நில அமைப்பு அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் மற்றும் கடவுள்-மதம்- மதங்களிலுள்ள சாதிபிரிவுகள், இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறோம் என்பது புலனாகும்.
உண்மையிலேயே, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான். இந்த அடிப்படையில் ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல்.ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனித உணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் மனிதசமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தனது மனதிலே காம வக்கிரங்களை சுமந்து கொண்டுதான் உலவி கொண்டிருப்பார்கள் அல்லது போராடி கொண்டிருப்பார்கள். இதுதான் அறிவியல் பூர்வமான உண்மையாகும் என பலஉளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள்.
மனித இனத்தில் ஆண்-பெண் என இரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.
அந்த நேரம் அறிந்து கலவியில் ஈடுபடுவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமானதாகும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது, பெண் முழு இன்பத்தைபெற்றால்தான் ஆணும் முழு இன்பத்தை பெற இயலும், அதற்குண்டான செயல்திறன் ஆடவனின் தன்மையை பொறுத்ததாகும்.
இந்த அடிப்படையில், தாம்பத்ய கலவியின்போது பெண்ணுடலுடன் இணைந்து இருக்க வேண்டும். பெண்ணுடலுக்குள் நுழைந்த ஆண்,வேகமாக செயல்படுவதை தவிர்த்து, பதற்றமின்றி தனது தாது சக்தியை வெளியேற்ற நினைக்கலாம். ஆணுக்கு தாது சக்தி விரைவில்வெளியேறிவிட்டால் அவனது உடலில் கதகதப்பு (வெப்பம்) குறைந்துவிடும். ஆதலால் அவன் பெண் உடலை விட்டு வெளியேறி விடுவான்.
==--==