விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, November 30, 2013

காமத்தின் நிலைகள் என்ன? செக்ஸ் உணர்வு ஆரம்பித்து முடிவது வரை நம் உடலிலும் உள்ளத்திலும் நடக்கும் மாற்றம் பற்றி முழுதாக விளக்க முடியுமா?கேள்வி: காமத்தின் நிலைகள் என்ன? செக்ஸ் உணர்வு ஆரம்பித்து முடிவது வரை நம் உடலிலும் உள்ளத்திலும் நடக்கும் மாற்றம் பற்றி முழுதாக விளக்க முடியுமா?

பதில்: ஒரு மனிதனுக்கு காம வேகம் வந்து விட்டால் உடம்பில் என்ன நடக்கும்? இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறதா?

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ காம இச்சை தோன்றினால், அது நான்கு நிலைகளை அடையும். இதை மொத்தமாக ஆங்கிலத்தில் ” “Human Sexual Response Cycle” என்று சொல்லுகிறார்கள்.

அந்த நிலைகள்:
1. துண்டப்படுதல் நிலை (Excitement Stage)
2. சம நிலை (Plateau Stage) இந்த நிலையில் நீங்கள் சீராக உடலுறவு செய்து கொண்டிருப்பீர்கள்.
3. உச்ச கட்டம் (Orgasm Stage)
4. முடிவுற்ற நிலை (Resolution Stage). இந்த நிலையில் உங்கள் உடல் காம இச்சை தீர்ந்து, சகஜ நிலைக்கு திரும்பி வந்து விடும்.அடிப்படைக் காரணங்கள்:
ü  முதல் நிலை ஆரம்பிக்க ஒரு காரணம் இருக்கும். அவை:
ü  பார்வை மூலமாக காம வயப்படலாம், உதாரணமாக அழகான கவர்ச்சியான பெண்களை பார்ப்பது.
ü  தொடுதல் மூலமாக காம வயப்படுவது. உதாரணமாக, தொடுவது, முத்தம் கொடுப்பது, தடவுவது.
ü  செவி மூலமாக காம வயப்படுவது. உதாரணமாக பக்கத்து வீட்டில் உடலுறவு நடப்பதை கேட்பது போன்றவை.


சரி, இப்போது நான்கு நிலைகளையும் விரிவாகப் பார்ப்போம்:

1. துண்டப்படுதல் நிலை (Excitement Stage)
Ø  உங்கள் காம நிலைகளில் இதுதான் முதல் நிலை. இதனால் உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
Ø  ஆண் பெண் இருவருக்குமே, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, வியர்வை வெளியேறல், மூச்சு வாங்குவது, தசை முறுக்கேறல் ஆகியவை அதிகரிக்கும்.
Ø  பெண்களுக்கு, அவர்களின் முலைக் காம்புகள், கடினமாகி, விறைப்பாகி விடும்.
Ø  பெண்களின் மார்பகம் சற்றே பெரிதாகி, மேலுடம்பில் உள்ள ரத்தக் குழாய்கள் புடைத்துக் கொண்டு விடும்.
Ø  பெண்களின் புணர்புழையில் உள்ள தசைகள் பெரிதாகி, உறுப்புக்கு உள்ளே வழவழப்புத் தன்மை கூடும்.
Ø  ஆண்களுக்கு, ஆணுறுப்பு பாதி நிலையிலேயோ, அல்லது முழுமையாகவோ விறைத்துக் கொள்ளும்.
Ø  ஆண்களின் விதைப் பைகள் மேல் நோக்கி ஏறி காணப்படும்.
Ø  அதே போல விதைப்பைகள் இறுகி, ஒரு பந்து போல ஆகி விடும்.

2. சம நிலை (Plateau Stage):
v  இந்த நிலை தூண்டப்படுதல் நிலை முடிந்ததும் தொடங்கி விடும். இந்த நிலையில் நீங்கள் சீராக உடலுறவு செய்து கொண்டிருப்பீர்கள். இந்த நிலையில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ:
v  உங்களை அறியாமல் நீங்கள் வாய் மூலமாக சத்தம் போடுவீர்கள்.
v  பெண்களின் கிளர்ச்சி மொட்டு (clitoris) உள்ளே அடங்கி விடும்.
v  ஆண்களின் உறுப்பில் இருந்து விந்து முந்து திரவம் (Pre -ejaculation ) வெளியேறும்.


3. உச்ச நிலை (Orgasm Stage) :
மற்ற எல்லா நிலைகளை விட, இந்த நிலை ரொம்ப குறுகிய நேரமே நடக்கும். பெண்களுக்கு பல உச்சகட்டங்கள் தொடர்ந்து நேரலாம்.
ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. ஆண்களுக்கு ஒரே முறை தான் உச்சம் ஏற்படும், அது விந்து வெளியேறும் போது தான் நடக்கும். இந்த நிலையில்:
  • உங்கள் மூச்சு, இதயத் துடிப்பு, வியர்வை சுரத்தல் போன்றவை மிக அதிகமான அளவில் இருக்கும்.
  • பெண்ணின் உறுப்பும், உள்ளே இருக்கும் கருப்பையும் (Uterus) இரண்டுமே குறுகும் (கருத்தரிப்பதற்காக) .
  • ஆண்களுக்கு விந்து வெளியேறும். இந்த விந்து வெளியேறுவது ஒரே முறையில் இல்லாமல், விட்டு விட்டு வெளியேறும். இதனை ஆங்கிலத்தில் (Waves Of Ejaculation) என்று சொல்லுவார்கள்.
  • சாதாரணமாக ஆணுக்கு மூன்று முறை விட்டு விட்டு விந்து பீய்ச்சி அடிக்கும். முதல் இரண்டு முறையில் தன் மிக அதிகமாக விந்து வெளியேறும்.
  • தசைகள் உங்களை அறியாமல் முறுக்கேறி (Involuntary Contraction), தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
  • நீங்கள் கத்தவோ, முனகவோ வாய்ப்பு அதிகம் உண்டு.


4. முடிவுற்ற நிலை (Resolution Stage):
v  இது தான் கடைசி நிலை. உங்களுக்கு உச்ச கட்டம் முடிந்ததும், ஒரு சாந்தமான, சுகமான உணர்வில் இருப்பீர்கள்.
v  ஆண்களுக்கு, குறி விறைப்புத் தன்மை நீங்கி, தொங்கும் நிலைக்கு வந்து விடும்.
v  பெண்களுக்கு, பெண்ணுறுப்பு புடைப்பு நீங்கி, சாதாரண நிலைக்கு வந்து விடும்.
v  இருவருக்குமே, மூச்சு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை சகஜ நிலைக்கு வந்து விடும்.
v  ஆண்களால் உடனே காம நிலைக்கு திரும்ப முடியாது, மறுபடி காம நிலைக்கு திரும்ப கொஞ்ச நேரம் பிடிக்கும் (Refractory time). ஆனால்
v  பெண்களால் , உடனே காம நிலைக்கு திரும்பி, காமத்தோடு செயல்பட முடியும்.

இது தான் காமத்தினால் உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்==--==Please Contact for Appointment

பிரபல பதிவுகள்