மயக்கம் அகல.
மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.
வாதம் குணமாக:-
சாம்பிராணியை எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தடவ குணமாகும்.
தசைகள் வலுப்பெற :
அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.
அலர்ஜிக்கு :
அரை எலுமிச்சம்பழம் சாரும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரும் கலந்து அருந்திவந்தால் அலர்ஜி துணமடையும்.
நச்சுத் தன்மை அகல :
தினமும் காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடித்து வர, இரத்தத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், ஊளைச் சதை குறையும்
சுளுக்கு:-
கை, காலில் சுளுக்கு ஏற்பட்டால் சுளுக்கு உள்ள இடத்தில் நல்ல எண்ணையை தேய்த்துவிட்டு மசாஜ் செய்தால்போதும் சுளுக்கு சரியாகிவிடும். சதைப்பிடிப்புக்கும் இம்முறையை செய்யலாம். மேலும் புளியை அவித்து சூட்டுடன் சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுக்கவும். ஒத்திடம் கொடுத்துவிட்டு அந்த இலையை சுளுக்கு உள்ள இடத்தில் வைத்து காட்டவும்.
மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--==--