உடல் பருமன் குறைய...
Ø
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
Ø
தேன் உடல்
பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
Ø
மோரில் வெந்தய
பொடி கலந்து குடிக்கவும். வெந்தயம் குளிர்ச்சியானது, தலைவலி, சைனஸ்,குளிர்ச்சியான உடம்பு காரர்கள் பார்த்து சாப்பிடுங்கள்.
Ø
கொள்ளு சாப்பிட்டால் கூட வெயிட் குறையும். கொள்ளு ரசம்,கொள்ளு இனிப்பு சுண்டல்,கொள்ளு சூப் போன்றவைகள் சாப்பிடலாம்.
Ø
வாழைத்தண்டை சிறு
துண்டுகளாக்கி இஞ்சி, எலுமிச்சம்பழச் சாறு, பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
Ø
இரண்டு டம்ளர்
மோருடன் இரண்டு காரட்டையும் நன்கு அரைத்து குடித்து வர ஒரு வாரத்திலிருந்து உடல் இளைக்கத் துவங்கிவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
Ø
சோற்றுக்கற்றாழையை எடுத்து
அதன்மேல் தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை சேகரித்து தினமும் 100 கிராம் அளவுக்கு அதில் நன்றாகத் தண்ணீர் விட்டு கழுவி சர்க்கரை சேர்த்து 3 வார காலம் சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு இளைக்கும்.
Ø
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
Ø
காரட் தினசரி
சமையலில் சேர்த்துக் கொள்வதுடன் இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும்போட்டு மைய அரைத்துக்குடித்து வர ஒரு வாரத்தில் இருந்து உடல் இளைக்க ஆரம்பித்துவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
உடல் பெருக:
ü
கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
ü
பொன்னாங்கண்ணிக் கீரையை
உணவில் தினசரி சேர்த்து வர உடலில் சதை பிடிப்பு ஏற்படும்.
ü
பறித்த பச்சை
நிலக்கடலை நூறு கடலையும் நேத்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.
உடற் சூடு தணிய:-
v
ரோஜா இதழ்கள்,
கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
v
புளியங்கொட்டையை வறுத்துப்பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடவும்
உடலில் மருக்கள் மறைய :
Ø
சிலருக்கு முகம்
மற்றும் உடலில் மருக்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் எலுமிச்சை சாற்றை இரவில் மருக்களின் மீது தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் மருக்கள் மறையும்.
இரத்த பித்தம் குணமாக:-
v
கடுக்காயைப் பொடி
செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து காலையிலும் மாலையிலும் உட்கொள்ள குணமடையும்.
v
பித்தம் தலைக்கேறினால் தலைசுற்றல் வரும். பித்தம் தெளிய, ஒரு கைப்பிடி கொத்தமல்லியை வேகவைத்து, அதன் சாறினை பனைவெல்லம் சேர்த்து பருகினால் பித்தம் சத்தம் இல்லாமல் ஓடும்.
==--==