கேள்வி: சுகப்பிரசவத்தில்
குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?
பதில்: இது பொதுவாக நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம்.
குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று கால எல்லை இல்லை. எப்போது பெண்ணின் மனதும் உடலும் அதற்குத் தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.
சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வார்கள். சில பெண்கள் உடல் உறவுக்குத் தயாராவதற்கு சில மாதங்கள் கூடச் செல்லலாம்.
ஆகவே இது பற்றி கணவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து இருவரும் மனம் மற்றும் உடல் ரீதியாக உடலுறவுக்குத் தயாரான பிறகு உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும்.
முக்கியமாக உடலை உறவை ஆரம்பிக்கும் போது மருத்துவ ஆலோசனை மூலம் தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை தேர்வு செய்து பின்பற்றுவது மிக அவசியமாகும்.
உடலுறவில் ஈடுபடுவதால் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும்
சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please
Call us or Mail Us
==-=-==