மண், சாம்பல் தின்னும் குழந்தைகட்கு மருத்துவம்:
மிளகு 10
கிராம், ஓமம் 10 கிராம், துளசி இலை 35
கிராம், கீழாநெல்லிவேர் 17 கிராம், கடுக்காய்த்தோல் 17
கிராம், இவைகளை ஒன்று சேர்த்து அம்மியில் அரைத்து, சுண்டக்காய் அளவு மாத்திரையாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு சங்கின் அளவு புளித்த மோரில் மேற்படி மாத்திரையை கரைத்து, கொடுக்கவேண்டும். தினமும் காலையில் மட்டும் ஐந்து தினங்கட்கு கொடுக்க வேண்டும். குழந்தையின் வயிற்றிலிருந்து சாம்பல் மண் முதலியன வந்து விடும். பிறகு குழந்தைகட்கு எந்த வியாதியும் வராது. சிறு குழந்தையாக இருந்தால் தாய் புளி நீக்கி உணவு உட்கொள்ளவேண்டும். சோகைபாண்டு முதலிய வியாதிகள் குணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக:
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக கண்டங்கத்தரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் நோய்களுக்கு
குழந்தைகளுக்கு சொறி, தேகம் மெலிந்து இருந்தால் அடிவயிற்றில் புண் இருந்தால் இவற்றிற்கு கோரசினை என்ற மருந்து பொருளை தாய்ப்பாலுடன் கலந்து ஒரு சங்கு கொடுக்கவேண்டும். குழந்தை நல்ல உடல் அமைப்புடன் அழகுடன் நல்ல நிலையில் வளரும். இந்த மருந்தினை தொடர்ந்து 40 நாட்கள் கொடுக்கவும்.
கணைச் சூடு குறைய..
கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
மிளகு 10
கிராம்
ஓமம் 10
கிராம்
துளசி இலை 35 கிராம்
கீழாநெல்லிவேர் 17ண கிராம்
கடுக்காய்த்தோல் 17ண கிராம்
இவைகளை ஒன்று சேர்த்து அம்மியில் அரைத்து, சுண்டக்காய் அளவு மாத்திரையாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு சங்கின் அளவு புளித்த மோரில் மேற்படி மாத்திரையை கரைத்து, கொடுக்கவேண்டும். தினமும் காலையில் மட்டும் ஐந்து தினங்கட்கு கொடுக்க வேண்டும். குழந்தையின் வயிற்றிலிருந்து சாம்பல் மண் முதலியன வந்துவிடும். பிறகு குழந்தைகட்கு எந்த வியாதியும் வராது.
சிறு குழந்தையாக இருந்தால் தாய் புளி நீக்கி உணவு உட்கொள்ள வேண்டும். சோகை பாண்டு முதலிய வியாதிகள் குணமாகும்.
குறிப்பு
இவை எல்லாம் முதலுதவி போன்ற
வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல்
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
==--==