விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 15, 2014

டைபாய்ட் சுரம், குடற் காய்ச்சல், குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்


 typhoid fever homeopathy specialist doctor senthil kumar  Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,



டைபாய்ட் சுரம், குடற் காய்ச்சல், குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்

இது   SALMONELLA TYPHI  என்ற  நுண்  உயிரியால்  ஏற்படும்   ஒரு வியாதி ஆகும் . இது  மனிதர்களை மட்டுமே தாக்கும் .

எங்கு எல்லாம்  சுத்தம்  குறைவாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த வியாதி வரும் .

குழந்தைகளுக்கு  பொதுவாக   1 -5 வயது வரை  எதிர்ப்பு சக்தி குறைவதால் வர வாய்ப்பு  அதிகம் .

கிருமி தாக்கிய 7 நாட்களிலிருந்து 15 நாட்களுக்குள் நோயின் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும்

 அதாவது   அசுத்தமான  நீர் , உணவு ( பால் , ஐஸ்  கிரீம் , அரை வேக்காடு முட்டை , சாலட், மோர் ,)   சாப்பிட்ட    பின் ஒரு வாரத்தில் இருந்து  இரண்டு வாரங்களுக்குள்  இதன் அறிகுறி  தெரிய ஆரம்பிக்கும் .


அறிகுறிகள் :

ஒரு வாரத்திற்கு மேல்பட்ட  ஜுரம் . வைத்தியம்  செய்யவில்லை என்றால்   ஒரு  மாதம்        வரை ஜுரம் இருக்கும் .

முதல் வாரம்:
Ø  ஜுரம் , உடல் வலி , குளிர் நடுக்கம்
Ø  மலசிக்கல்  அல்லது வயிற்று போக்கு  .
Ø  குறைந்த  இருதய துடிப்பு ( சாதாரணமாக  சுரம் வந்தால்  இருதய துடிப்பு அதிகமாகும் , ஆனால்  TYPHOID FEVER  வந்தால்  அந்த அளவு  அதிகரிக்காது.RELATIVE BRADYCARDIA ) 
Ø  நாக்கின்  மேலே வெள்ளை  நிறத்தில்  படிந்து இருக்கும் (TONGUE COATING)
Ø  ROSE SPOTS:சுரம் வந்த ஆறாவது  நாள்  உடலில் சிறு சிறு  சிகப்பு  புள்ளிகள் தோன்றும்

இரண்டாம் வாரம் :
ü  மிகவும்  சோர்ந்த  நிலை ,
ü  வயிறு வலி , வயிறு உப்புதல் , மண் ஈரல்  வீக்கம்
ü  WIDAL TEST POSITIVE .(WIDAL TEST என்பது  டைபோய்ட்   சுரத்தை  கண்டுபிடிக்க உதவும்  ஆய்வக பரிசோதனை . இதனை  சுரம் ஆரம்பித்த  ஏழு  நாட்களுக்கு  பிறகே செய்ய  வேண்டும் . ஏழு நாட்களுக்கு  முன்பே செய்தால் நெகடிவ்  என்றே  வரும் .)

மூன்றாம் வாரம் :
v  மிகவும் மோசமான நிலை ,
v  எடை குறைவு , வேகமாக மூச்சு  விடுதல் ,
v  வயிற்று வலி  அதிகமாதல், வயிற்றில் இரத்த கசிவு  ,
v  குழப்பமான மன நிலை

நான்காவது  வாரம் :
Ø  சிறுது சிறிதாக  உடல் நிலை   தேறும் . உடலில்  போதுமான எதிர்ப்பு சக்தி  இருந்தால்  பழையபடி  குணமாகலாம் .

டைபாய்ட் நோயின் பின்விளைவுகள்
சரியான நேரத்தில்  கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வில்லை என்றால் கீழே காணும்  மோச விளைவுகள்  ஏற்படலாம்

Ø  குடலில் ஓட்டை
Ø  கணைய அழற்சி
Ø  நிமோனியா
Ø  எலும்புகளில்  அழற்சி
Ø  விரை அழற்சி

உணவு கட்டுப்பாடு :
ü  காரம் இல்லாத  எளிதில் செரிக்க  கூடிய  உணவை மட்டுமே  தரவேண்டும்
ü  பட்டினி  போடவே கூடாது , வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே  குடல் புண்  சீக்கிரம் ஆறும் .
ü  நீர் சத்து உடலில் குறையாமல்  பார்த்துகொள வேண்டும் .
ü  வயிறு வலி வந்தால் உடனே  மருத்துவரை  பார்க்க வேண்டும்

சரியாக  கண்டுபிடித்து  மருந்து சாப்பிட ஆரம்பித்தால்  நாலு  முதல் ஆறு நாட்களுக்குள் சுரம் குறைய ஆரம்பிக்கும் . அனாலும் சுரம் விட்ட பிறகு  ஐந்து நாட்களுக்கு  தொடர்ந்து  மருந்தை  சாப்பிட்டு  வர வேண்டும் .

தடுப்பு முறை :
கை சுத்தம் ,நீர்  சுத்தம் ,உணவு  சுத்தம்,


”சுத்தம் சுகம் தரும்”




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்