விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, April 24, 2014

முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. - Fear about First night



 கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 24 வயது பெண் நான், எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 2 மாதங்களில் திருமணம். முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. அவருக்கும் இதுதான் முதல் அனுபவம் என்கிறார். இந்த பயத்தை போக்கவும் முக்கியமாக பின்பற்ற வேண்டியவைகளையும் தயவு செய்து கூறுங்கள்  பதில்: முதலில் வாழ்த்துக்கள், முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் அது முதன்முறையாக மட்டும் இருக்கும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பின்வரும் தகவல்கள் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.   முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதியஇடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.    மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.   முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.   அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.   முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.   உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.   நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.   காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட் தடவிக் கொள்ளுங்கள்.   உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.   கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.   படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.   முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம்தெரிவியுங்கள்.   முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்றுஅவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.   அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொருமாதிரியாக இருக்கும்.   உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.   முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிகமாக்கத்தான் செய்யும்.   பெண்ணுறுப்பில் வலியையும், வறட்சியையும் ஏற்ப்பட்டால் அதைக்குறைக்க குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.   உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.   பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால், தாராளமாக - பக்குவமாக அதை உங்கள் கணவரிடம் எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் அவர் ஓ.கே. சொல்லிவிடுவார்.   முதலிரவு மணமகன் வீட்டில் நடப்பதுதான் நல்லது. ஸ்டார் ஹோட்டல் என்றால் உஷாராக இருங்கள். அங்கே உங்களுக்கு தெரியாமல் கேமரா இருக்கலாம்.   உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக துவங்க வாழ்த்துகள்.



கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 24 வயது பெண் நான், எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 2 மாதங்களில் திருமணம். முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. அவருக்கும் இதுதான் முதல் அனுபவம் என்கிறார். இந்த பயத்தை போக்கவும் முக்கியமாக பின்பற்ற வேண்டியவைகளையும் தயவு செய்து கூறுங்கள்

பதில்: முதலில் வாழ்த்துக்கள், முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் அது முதன்முறையாக மட்டும் இருக்கும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பின்வரும் தகவல்கள் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

Ø  முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதியஇடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.

Ø  மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடமோ உளவியல் ஆலோசகரிடமோ திருமணத்திற்க்கு முந்தைய கவுன்சிலிங் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

Ø  முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

Ø  அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

Ø  முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.

Ø  உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.

Ø  நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

Ø  காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட் தடவிக் கொள்ளுங்கள்.

Ø  உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.

Ø  கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

Ø  படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

Ø  முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம்தெரிவியுங்கள்.

Ø  முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்றுஅவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Ø  அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொருமாதிரியாக இருக்கும்.

Ø  உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.

Ø  முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிகமாக்கத்தான் செய்யும்.

Ø  பெண்ணுறுப்பில் வலியையும், வறட்சியையும் ஏற்ப்பட்டால் அதைக்குறைக்க குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

Ø  உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.

Ø  பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால், தாராளமாக - பக்குவமாக அதை உங்கள் கணவரிடம் எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் அவர் ஓ.கே. சொல்லிவிடுவார்.

Ø  முதலிரவு மணமகன் வீட்டில் நடப்பதுதான் நல்லது. ஸ்டார் ஹோட்டல் என்றால் உஷாராக இருங்கள். அங்கே உங்களுக்கு தெரியாமல் கேமரா இருக்கலாம்.


உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக துவங்க வாழ்த்துக்கள்.

திருமணத்திற்கு முந்தைய உளவியல் ஆலோசனை பெற - For Pre Marital Counseling  & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்

விவேகானந்தா உளவியல் / மனோதத்துவ மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவ ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


==--==


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்