விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, April 24, 2014

மூலிகைகளின் சிறப்புகள்



 மூலிகைகளின் சிறப்புகள்  சித்த மருத்துகள் செய்வதற்று மூலிகைகள் மிக மிக இன்றியமையாத ஒன்றாகப் பயன்படுகிறது. மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி சிறு சிறு நோய்களை எளிய முறையில் சிகிச்சைகள் மேற்கொள்வது மூலிகை மருத்துவத்தின் சிறப்பாகும். மேலும் மருந்து செய்யவும் மருந்தாகவும் பயன்படும் தாவரங்களே மூலிகைகள் எனப்படும்.இயற்கையோடு இசைந்த மருத்துவமாகும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து பாதுகாப்பளிக்க வல்லது. மரபுவழி மருத்துவ முறைகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகும். எல்லா மக்களுக்கும் பொதுவான அனுபவ வைத்திய முறை இம்மருத்துவத்தில் கையாளப்படுகிறது.  மஞ்சள் காமாலை ஆஸ்துமா போன்ற நாள்பட்ட கொடிய நோய்களையும் தீர்க்க வல்லது.  ஓரே மூலிகை பல்வேறு வகையான நோய்களைப் போக்குகின்ற அற்புத சக்தி வாய்ந்ததாகும்.  நம் வீட்டைச் சுற்றிலும் வயல் வரப்புகளிலும் சாலையோரங்களில் இம் மூலிகைகள் எளிதாகச் கிடைக்கக் கூடியது.  இயற்கையாகவே மூலிகைகள் காடுகளிலும் வறட்சியான நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படும்.  எந்த மூலிகை மருந்துக்கும் இந்நாள் வரை எந்தவிதமான பக்க விளைவுகளும் கண்டறியப்பட வில்லை.  சித்த மருந்து செய்ய மூலிகைகளை பெரும் பங்கில் பயன்படுத்தி வருகின்றார்கள்.  படிப்பறிவில்லாத பாமரர் கூட மூலிகை மருத்துவத்தை அனுபவ முறையில் கற்றுக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மருத்துவம் செய்ய முடியும்.  மூலிகை மருத்துவம் செய்ய சிறப்பான கல்வித் தகுதி தேவையில்லை என்றாலும் சற்றேரக்குறைய எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  மூலிகை மருந்து உண்ணும் போது கூட்டியோ குறைத்தோ உண்பதில் தீங்கில்லை என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழிக்கேற்ப அளவோடு உண்பது சாலச் சிறந்ததாகும்.  உணவே மருந்து மருந்தே உணவு எனும் அடிப்படைத் தத்துவத்தில் இம் மூலிகை மருத்துவம் அமைந்துள்ளதால் சிறப்பான பத்திய முறை ஒன்றும் கிடையாது. நோய் விரைவில் குணமாக உணவுக் கட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். இதைப் பத்தியம் என்று நினைத்து பயப்பட வேண்டியதில்லை. பத்தியம் என்பது மருந்துக்கு அல்ல நோய்க்குத் தான் என்பதை உணர வேண்டும். ஒன்றிரண்டு வேளை பத்தியம் சரிவரக் கடைபிடிக்கவில்லை என்றால் நோய் குணமாவதில் தாமதமாகும். வேர் பார் ; தழை பார் என்பதைப் போல மூலிகை இலைகளைப் பறித்து கழுவி சத்தம் செய்த பச்சையாகப் பயன்படுத்தும் போது அதிக பயன் கிடைக்கிறது.  மூலிகை மருத்துவத்தை எளிமையான முறையிலும் சிக்கனமான முறையிலும் கையாளலாம். அவை அரைத்துத் தடவுதல் சாறெடுத்துப் பூசுதல் வதக்கிக் கட்டுதல் மென்று சாப்பிடுதல் கசக்கிப் பிழிதல் பாலெடுத்துப் பூசுதல் வாயிலிட்டு சுவைத்தல் தலைக்குத் தேய்த்துக் குளித்தல் வறுத்துச் சாப்பிடுதல் நசியம் செய்தல் பல் துலக்குதல் வேது பிடித்தல் வாய் கொப்பளித்தல் பற்று போடுதல் துவையல் செய்து சாப்பிடுதல் கஷாயம் செய்து அருந்துதல் போன்ற பல்வேறு முறைகளாகும்.  நோயாளியின் நோய் அளவிற்கேற்ப நமக்கு நாமே மருந்து தயாரித்து கொடுப்பது வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும்.  மூலிகைகளின் தோற்றத்தையும் அவற்றின் பெயர்களையும் கொண்டே குறிப்பிட்ட நோய்களை நீக்க வல்லது என்பதை அறியலாம். குறிப்பாக  அருகம்புல் - அறுகாத வேர் செம்பரத்தை - இதய நோய் பிரண்டை - பிறண்ட எலும்புகளைச் சரிசெய்யவும் குப்பைமேனி - குப்பை போன்ற மேனியை (சொறி சிரங்கு) நன்மேனியாக்கும். வாத நாராயண் - வாத நோய் கரிசாலை - கருமையான கூந்தல் வளர தேற்றான் கொட்டை - தேராத உடலைத் தேற்ற   ==--==


மூலிகைகளின் சிறப்புகள்


சித்த மருத்துகள் செய்வதற்று மூலிகைகள் மிக மிக இன்றியமையாத ஒன்றாகப் பயன்படுகிறது. மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி சிறு சிறு நோய்களை எளிய முறையில் சிகிச்சைகள் மேற்கொள்வது மூலிகை மருத்துவத்தின் சிறப்பாகும். மேலும் மருந்து செய்யவும் மருந்தாகவும் பயன்படும் தாவரங்களே மூலிகைகள் எனப்படும்.இயற்கையோடு இசைந்த மருத்துவமாகும்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து பாதுகாப்பளிக்க வல்லது. மரபுவழி மருத்துவ முறைகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகும். எல்லா மக்களுக்கும் பொதுவான அனுபவ வைத்திய முறை இம்மருத்துவத்தில் கையாளப்படுகிறது.

மஞ்சள் காமாலை ஆஸ்துமா போன்ற நாள்பட்ட கொடிய நோய்களையும் தீர்க்க வல்லது.

ஓரே மூலிகை பல்வேறு வகையான நோய்களைப் போக்குகின்ற அற்புத சக்தி வாய்ந்ததாகும்.

நம் வீட்டைச் சுற்றிலும் வயல் வரப்புகளிலும் சாலையோரங்களில் இம் மூலிகைகள் எளிதாகச் கிடைக்கக் கூடியது.

இயற்கையாகவே மூலிகைகள் காடுகளிலும் வறட்சியான நிலங்களிலும் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படும்.

எந்த மூலிகை மருந்துக்கும் இந்நாள் வரை எந்தவிதமான பக்க விளைவுகளும் கண்டறியப்பட வில்லை.

சித்த மருந்து செய்ய மூலிகைகளை பெரும் பங்கில் பயன்படுத்தி வருகின்றார்கள்.

படிப்பறிவில்லாத பாமரர் கூட மூலிகை மருத்துவத்தை அனுபவ முறையில் கற்றுக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மருத்துவம் செய்ய முடியும்.

மூலிகை மருத்துவம் செய்ய சிறப்பான கல்வித் தகுதி தேவையில்லை என்றாலும் சற்றேரக்குறைய எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மூலிகை மருந்து உண்ணும் போது கூட்டியோ குறைத்தோ உண்பதில் தீங்கில்லை என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழிக்கேற்ப அளவோடு உண்பது சாலச் சிறந்ததாகும்.

உணவே மருந்து மருந்தே உணவு எனும் அடிப்படைத் தத்துவத்தில் இம் மூலிகை மருத்துவம் அமைந்துள்ளதால் சிறப்பான பத்திய முறை ஒன்றும் கிடையாது. நோய் விரைவில் குணமாக உணவுக் கட்டுப்பாடு இருக்கத்தான் செய்யும். இதைப் பத்தியம் என்று நினைத்து பயப்பட வேண்டியதில்லை. பத்தியம் என்பது மருந்துக்கு அல்ல நோய்க்குத் தான் என்பதை உணர வேண்டும். ஒன்றிரண்டு வேளை பத்தியம் சரிவரக் கடைபிடிக்கவில்லை என்றால் நோய் குணமாவதில் தாமதமாகும். வேர் பார் ; தழை பார் என்பதைப் போல மூலிகை இலைகளைப் பறித்து கழுவி சத்தம் செய்த பச்சையாகப் பயன்படுத்தும் போது அதிக பயன் கிடைக்கிறது.

மூலிகை மருத்துவத்தை எளிமையான முறையிலும் சிக்கனமான முறையிலும் கையாளலாம். அவை அரைத்துத் தடவுதல் சாறெடுத்துப் பூசுதல் வதக்கிக் கட்டுதல் மென்று சாப்பிடுதல் கசக்கிப் பிழிதல் பாலெடுத்துப் பூசுதல் வாயிலிட்டு சுவைத்தல் தலைக்குத் தேய்த்துக் குளித்தல் வறுத்துச் சாப்பிடுதல் நசியம் செய்தல் பல் துலக்குதல் வேது பிடித்தல் வாய் கொப்பளித்தல் பற்று போடுதல் துவையல் செய்து சாப்பிடுதல் கஷாயம் செய்து அருந்துதல் போன்ற பல்வேறு முறைகளாகும்.

நோயாளியின் நோய் அளவிற்கேற்ப நமக்கு நாமே மருந்து தயாரித்து கொடுப்பது வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத ஒரு தனிச் சிறப்பாகும்.

மூலிகைகளின் தோற்றத்தையும் அவற்றின் பெயர்களையும் கொண்டே குறிப்பிட்ட நோய்களை நீக்க வல்லது என்பதை அறியலாம். குறிப்பாக

அருகம்புல் - அறுகாத வேர்
செம்பரத்தை - இதய நோய்
பிரண்டை - பிறண்ட எலும்புகளைச் சரிசெய்யவும்
குப்பைமேனி - குப்பை போன்ற மேனியை (சொறி சிரங்கு) நன்மேனியாக்கும்.
வாத நாராயண் - வாத நோய்
கரிசாலை - கருமையான கூந்தல் வளர
தேற்றான் கொட்டை - தேராத உடலைத் தேற்ற



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்