விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, April 23, 2014

சளித்தொல்லை நீங்க எளிய வீட்டுமுறை சிகிச்சை முறைகள்.



 சளிகட்டு நீங்க:  தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.   சளித்தொல்லை நீங்க:  • ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டு புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித்தொல்லை நீங்கும்.  • மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.  • தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.  • அருகம்புல் சாறு பருகிவர சளித்தொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.   சளி கபம் ஏற்படாமல் தடுக்க:  சுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.   சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:  நத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கல்கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட, சளி இருமல் வராமல் தடுக்கலாம்.   மார்புசளி நீங்க:-  ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.   சளி மூக்கடைப்பு தீர:  கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.   மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:  முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.   ஜலதோஷம்:- ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.   தும்மல் நிற்க:  தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.   இருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த:  ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.   ஜலதோஷம்:  மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.   ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க :  காய்ச்சல்விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டுகொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.   ஜலதோசம்:   டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.   துளசிச்சாறு, இஞ்சி சம அளவு கலந்து குடித்தால் ஜலதோஷம் நீங்கும்.   மூக்கடைப்பு:  ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.   சளி:   ஓமவள்ளி, வெற்றிலி, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும்.   பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து அதில் டீத்தூளைப் போட்டு வடிகட்டி அப்படியேவோ அல்லது பால் சர்க்கரை கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.   வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.   நெஞ்சு சளி:- தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.   வறட்டு இருமலுக்கு:  கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு அருந்திவரப் பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.   கக்குவான் இருமல்  வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.



சளிகட்டு நீங்க:
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

சளித்தொல்லை நீங்க:
  • ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டு புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித்தொல்லை நீங்கும்.
  • மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.
  • தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.
  • அருகம்புல் சாறு பருகிவர சளித்தொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.

சளி கபம் ஏற்படாமல் தடுக்க:
சுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:
நத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கல்கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட, சளி இருமல் வராமல் தடுக்கலாம்.

மார்புசளி நீங்க:-
ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

சளி மூக்கடைப்பு தீர:
கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:
முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.

ஜலதோஷம்:- ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

தும்மல் நிற்க:
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

இருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த:
ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.

ஜலதோஷம்:
மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.

ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க :
காய்ச்சல்விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டுகொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.

ஜலதோசம்:
Ø  டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும்.
Ø  துளசிச்சாறு, இஞ்சி சம அளவு கலந்து குடித்தால் ஜலதோஷம் நீங்கும்.

மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

சளி:
ü  ஓமவள்ளி, வெற்றிலி, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும்.
ü  பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து அதில் டீத்தூளைப் போட்டு வடிகட்டி அப்படியேவோ அல்லது பால் சர்க்கரை கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
ü  வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது.

நெஞ்சு சளி:-
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

வறட்டு இருமலுக்கு:
கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு அருந்திவரப் பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும்.

கக்குவான் இருமல்

வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.






குறிப்பு
இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.





==--==




Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்