விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, January 23, 2015

மாதவிடாய் சுழற்சியும் சினைப்பை நீர்க்கட்டியும் - Menses Cycle and Poly Cystic Ovarian Diseases PCOD / PCOS
 menstrual problem, obesity, irregular menses, painful menses, specialty treatment hospital in chennai
மாதவிலக்கு – Menses Cycle
மாதவிடாய் என்பது, கர்ப்பபையின உட்சவ்வில் ஏற்படும் (எண்டோமெட்ரியம்) இரத்தகசிவு வெளியேருவதுதான். ஒரு பெண் கருத்தரிக்க வாய்ப்புள்ள காலம் முழுவதும், ஏறக்குறைய மாதசுழற்சியாக இது நடக்கிறது, கருத்தரித்த காலம் தவிர. மாதவிடாய் ஒரு பெண் பூப்படையும்போது தொடங்குகிறது, (மெனார்கே -  Menarche), மற்றும் மெனோபாஸில்- Menopause  நிரந்தரமாக நின்றுவிடுகிறது.


மாதவிடாய் சுழற்சி - Menses Cycle
மாதவிடாய் சுழற்சி, முதல் நாள் உதிரபோக்குடன் தொடங்குகிறது. அது தான் முதல் நாளாக எடுத்துகொள்ளப்டுகிறது. அடுத்த மாதவிடாய் தொடங்கும் சில காலத்திற்கு முன்பு இந்த சுழற்சி முடிவடைகிறது. மாதவிடாய் சுழற்சி சாதாரனமாக சுமார் 25 முதல் 36 நாட்கள் நீடிக்கிறது. 10 முதல் 15% பெண்களுக்கு மட்டும் தான் மாத சுழற்சி சரியாக 28 நாட்களாக இருக்கும். சாதாரனமாக சுழற்சிகள் மாறி மாறி வரும். மேலும் மாதவிடாய்களுக்கு இடயே உள்ள இடைவெளி பூப்படைந்தவுடனும் மற்றும் மெனோபாஸிற்கு முன்பும் நீண்டதாக இருக்கும்.

மாதவிடாயின் உதிரபோக்கு, 3 முதல் 7 நாட்கள், சராசரியாக 5 நாட்கள் இருக்கும். ஒரு சுழற்சியின் போது உதிரத்தின் இழப்பு ½ முதல் 2 1/2 ஔன்சுகள் இருக்கும். ஒரு நாப்கின் அதன் வகைக்கு ஏற்ப, ஒரு ஔன்சு உதிரத்தை உறிஞ்சும். மாதவிடாயின் உதிரம், காயத்தினால் ஏற்படும் இரத்தபோக்கு போல், உடனே உரைவதில்லை. அதிகமாக இரத்த போக்கு இருந்தால் தான் உரைந்துகொள்ளும்.

மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களால் சீராக்கப்படுகிறது. பிட்யுட்டரி சுரப்பியால்- Pituitary Gland சுரக்கப்படும் லியுடினைஸிங் – Luteinizing மற்றும் ஃபோலிகில் தூண்டும் Follicular Stimulating Hormones  ஹார்மோன்கள், கருமுட்டை வெளிவருவதை ஊக்குவிப்பதுடன், சினைப்பையை – Ovaries, ஈஸ்ட்ரொஜன்- Estrogen மற்றும் புரொஜெஸ்டிரோன் Progesterone Hormone ஹார்மோனை சுரக்கவைக்கவும் தூண்டுகிறது. ஈஸ்ட்ரொஜென் மற்றும் ப்ரொஜெஸ்டிரோன், கருவடைதல் ஏற்பட சாத்தியமாக, கருப்பையையும், மார்பகங்களையும், தூண்டுவிக்கின்றது.


மாதவிடாய் சுழற்சியின் நிலைகள். Stages of Menstrual Cycle
இந்த சுழற்சியில் மூன்று நிலைகள் உண்டு:
v  பாலிகுலார் – Follicular Phase (கருமுட்டை வெளிவருவதற்கு முன்)
v  ஓவுலேடரி Ovulatery Phase (கருமுட்டை வெளிவருவது)
v  லூடியல் Luteal Phase  (கருமுட்டை வெளியேறிய பின்)

                         
பாலிகுலார் கட்டம் - Follicular Phase:
இந்த நிலை, மாதவிடாய் தொடங்கும் முதல் நாள் ஆரம்பிக்கின்றது (முதலாவது நாள்). ஆனால் இந்த நிலையில் நடக்கும் முக்கியமான நிகழ்வு, சினைப்பைகளில் ஃபோலிகில்ஸ் வளருவது தான்.

பாலிகுலார் கட்டத்தின் ஆரம்பத்தில், கருப்பையின் படிவமானது (என்டோமெட்ரியம்), கருவுக்கு ஊட்டம் தரக்கூடிய திரவங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளால் தடிமனாக இருக்கின்றது. முட்டை கருவடைதல் நடைபெறாவிட்டால், ஈஸ்ட்ரொஜன் மற்றும் ப்ரொஜெஸ்டிரோன்களின் அளவுகள் குறைவாகவே இருக்கின்றது. இதன் விளைவால், என்டொமெட்ரியத்தின் மேல்படிவங்கள் வெளியேறி, மாதவிடாய் உதிரபோக்கு நடைபெருகின்றது. இதே காலகட்டத்தில், பிட்யுட்டரி சுரப்பி, ஃபாலிகில் தூண்டும் ஹார்மோனின் உற்பத்தியை இலேசாக அதிகரிக்கின்றது. இந்த ஹார்மோன், 3 முதல் 30 ஃபாலிகில்களின் வளர்ச்சியை தூண்டுவிக்கின்றது. ஒவ்வொரு ஃபாலிகிலிலும் ஒரு முட்டை இருக்கிறது. இக்கட்டத்தின் பிற்பகுதியில், இந்த ஹார்மோனின் அளவு குறையும் போது, இந்த பாலிக்கில்களில் ஒன்று மட்டும் (ஓங்கிய ஃபாலிக்கில் என்று அழைக்கப்படும்) வளர தொடங்குகிறது. விரைவில் அது ஈஸ்ட்ரொஜனை சுரக்க தொடங்குகிறது, மேலும் மற்ற தூண்டுவிக்கப்பட்ட ஃபாலிக்கில்கள் உடைய துவங்குகின்றன.

சராசரியாக இந்த பாலிகுலார் கட்டம் சுமார் 13 அல்லது 14 நாட்களுக்கு நீடிக்கின்றது. மூன்று நிலைகளில், இந்த கட்டமானது, அதிக கால அவகாசத்தால் இந்த கட்டம் வித்தியாசம் கொண்டது. மெனோபாஸ் நெருங்கும்போது, இதன் கால அவகாசம் குறையகூடும். லுயுடினைசிங் ஹார்மோனின் அளவு துரிதமாக அதிகரிக்கும்போது இந்த நிலை முடிவடைகின்றது. இந்த துரிதமான அதிகரிப்பு தான் கருமுட்டை (ஓவுலேஷன்) வெளிவருவதற்கு காரணமாகின்றது.


ஒவுலேட்டரி நிலை - Ovulatery Phase
லுயுடினைசிங் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது இந்த நிலை துவங்குகிறது. லுயுடினைசிங் ஹார்மோன், ஓங்கிய பாலிக்கில்லை சினைப்பையின் மேல் புறத்திலிருந்து உப்ப செய்து, கடைசியாக கருமுட்டையை, வெளியாக்குகிறது. பிறகு பாலிக்கில் தூண்டும் ஹார்மோனின் அளவு சற்று குறைவாகவே கூடுகிறது. பாலிக்கில் தூண்டும் ஹார்மோனின் அதிகரிப்புக்கான பங்கு இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை.

ஒவுலேட்டரி நிலை வழக்கமாக 16 முதல் 32 மணி நேரம் நீடிக்கின்றது. கருமுட்டை வெளிவந்தவுடன் இக்கட்டம் முடிவடைகிறது.

கருமுட்டை வெளியாகி சுமார் 12 முதல் 24 மனி நேரத்திற்கு பிறகு, லுயுடினைஸிங் ஹார்மோனின் அதிகரித்த அளவுகளை, சிறுநீரில் உள்ள இதன் அளவுகளை வைத்து கண்டுகொள்ள முடியும். இந்த அளவுகளை வைத்து பெண்கள் எப்போழுது கருவுற தயாராக இருகின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். வெளியேறிய பிறகு கருமுட்டையுடன் விந்தனு சேர்க்கை சுமார் 12 மணி நேரத்திற்குள்ளாக தான் நடைபெறமுடியும். கருமுட்டை வெளியேரும் முன்பே கருப்பை வாயினுள் விந்தணுக்கள் – Sperm இருந்தால் கருவடைதல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.
ஓவுலேஷன் நடைபெரும் சமயத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்று பகுதியின் ஒருபுறம் இலேசான வலியை உணரலாம். இந்த வலிக்கான பெயர் (எழுத்துபூர்வமாகவே, மத்திய வலியாகும்). இந்த வலி சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம். எந்த பக்கத்தின் சினைப்பயிலிருந்து கருமுட்டை வெளியேற்றபடுகிறதோ அந்த பக்கம்தான் வலி உணரப்படுகிறது, ஆனால் வலி ஏற்படுவதற்கான சரியான காரணம் அறியப்படவில்லை. ஃபாலிக்கில் உடையும் முன்போ அல்லது பிறகோ வலி ஏற்படலாம், மேலும் எல்லா மாதவிடாய் சுழற்சிகளிலும் இந்த வலி ஏற்படுவதில்லை. கருமுட்டையின் வெளியெற்றம், இரு கரு முட்டை உற்பத்தி பைகளிலிருந்தும் மாறி மாறி ஏற்படுவதில்லை, தன்னிச்சையாக நடைபெருவதுபோல் தோன்றுகிறது. ஒரு கரு முட்டை உற்பத்தி பையை நீக்கி விட்டாலும், மீதம் இருக்கும் கரு முட்டை உற்பத்தி பை, மாதம் ஒரு கருமுட்டையை உருவாக்குகிறது.


லூடியல் நிலை - Luteal Phase  :
ஓவுலேஷன் – Ovulation ஆன பிறகு இந்த நிலை தொடங்குகிறது. இது 14 நாட்கள் நீடிக்கின்றது (கருவுறுதல் நடைப்பெறாவிட்டால்), மற்றும் இக்கட்டம் மாதவிடாய் தொடங்குவதற்கு சற்று முன்பு முடிவடைகிறது. இந்த நிலையில், உடைந்த ஃபாலிக்கில் கருமுட்டையை வெளியேற்றியவுடன் மூடி, கார்பஸ் லூடியம் எனும் உருவமாக மாறுகின்றது. இதிலிருந்து ப்ரொஜஸ்டிரோன் அதிக அளவு சுரக்கப்படுகிறது. விந்தனுசேர்க்கை நடக்கும் பட்சத்தில், இந்த கார்பச லுடியம், கர்பபையை தயாராக வைக்கிறது. கார்பச லுடியத்தால் சுரக்கபடும் ப்ரொஜஸ்டிரோன், எண்டோமெட்ரியத்தை தடியாக்குகிறது, மேலும் அங்கே வந்தடையகூடிய கருவிற்கு சக்தியளிப்பதற்காக, அதை திரவங்கள் மற்றும் ஊட்டசத்தால் நிரப்புகிறது. விந்தணுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கர்பப்பையினுள் வராமலிருக்க, கர்பப்பையின் வாயில் உள்ள மியூகஸை ப்ரொஜஸ்டிரோன் அதிகரிக்கின்றது. ப்ரொஜஸ்டிரோன், உடலின் வெப்பத்தை, லுடியல் கட்டத்தில் சற்று அதிகரிக்க செய்து, அடுத்த மாதவிடாய் துவங்கும் வரை அவ்வாறே வைக்கிறது. இந்த வெட்பத்தின் அதிகரிப்பை வைத்து, ஓவுலேஷன் நடைபெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும். லூடியல் கட்டத்தின் அதிகபட்ச சமயத்தில் ஈஸ்ட்ரொஜென் அதிகமாக உள்ளது. ஈஸ்ட்ரொஜெனும் எண்டோமெட்ரியம் - Endometrium தூண்டுகின்றது.

ஈஸ்ட்ரொஜென் மற்றும் ப்ரொஜஸ்டிரொனின் அதிகரிப்பால், மார்பகங்களிலுள்ள பால் சுரப்பிகள் விரிவடைகின்றன. இதன் விளைவால் மார்பகங்கள் வீக்கம் மற்றும் தொட்டால் வலியும் ஏற்படலாம்.

முட்டைகருவடையாவிட்டால், கார்பஸ் லூடியம் – Corpus Luteum  14 நாட்களுக்கு பிறகு சுருங்கிவிடுகிறது, மேலும் ஒரு புதிய மாதவிடாய் சுழற்சி துவங்குகிறது. கருவடைதல் நடைபெற்றால், வளர்ந்து வரும் கருவை சுற்றியுள்ள அணுக்கள், ஹியுமன் கோரியோனிக் கொனடோட்ரோபின் - Human Chorionic Gonadotropic HCG எனும் ஹார்மோனை சுரக்க துவங்குகிறது. இந்த ஹார்மோன் கார்பஸ்லூடியத்தை பராமரிப்பதால், அது வளரும் கரு தன் சொந்த ஹார்மோன்களை உருவாக்கிகொள்ளும் வரை தொடர்ந்து ப்ரொஜஸ்டிரோன் சுரக்கின்றது. ஹ்யுமன் கோரியோனிக் கொனெடொட்ரோபினின்  Human Chorionic Gonadotropic HCG அதிகரித்த அளவுகள் அடிப்படையில் செய்யப்டும் பரிசோதனை கர்பம் அடைந்துள்ளதா என்ற சோதனைக்கான ஆதாரமாக உள்ளது.


 sinai pai neer katti, pcod, pcos, மாதவிடாய் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தையின்மை, சிறப்பு சிகிச்சை மருத்துவமனை,சினைப்பை (சூலக) நீர்க்கட்டி சிறப்பு சிகிச்சை

Poly (பாலி) என்பது பல
Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.
OVARY (வேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease (டிஸீஸ்)என்பது நோய்.

ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது.

ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.

Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome) உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள்  Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்
Ø  குழந்தையின்மை - சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

Ø  ஹார்மோன் குறைபாடு - சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை  ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

Ø  ஒழுங்கற்ற மாதவிடாய் - சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது. 2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும். சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மிகுதியாக இருக்கும்.

Ø  முகத்தில் முடி வளர்தல் - ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.

Ø  எடை அதிகரித்தல் - மாதவிடாய் தள்ளிப்போவதால் உடல் எடை அதிகரிக்கிறது..

Ø  முகப்பரு வரலாம்.

Ø  நிற மாற்றம் - உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும்.

இந்த அறிகுறிகள்  பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை.  சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதே குழந்தைகள் பல பெற்ற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள் வரலாம்

காரணம்
சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

ü  நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ü  பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

ü  வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

ü  கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

ஆய்வக பரிசோதனைகள்
ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

ஆலோசனைகள்
Ø  உடல் எடையை குறைத்தல் - உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

Ø  உணவு கட்டுப்பாட்டு - அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும், தவிர்த்தல் நல்லது. காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

Ø  புகை - புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும்.

மருத்துவம்
மாதவிடாய் சீராக வெளிப்படுதலைத் தூண்ட நவீன மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

நோயின் அறிகுறிகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள் உட்கொள்வதின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் ஹோமியோபதி சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்கவேண்டும்
ü  14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.

ü  ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய் ஏற்படுகிறது என்றால்.

ü  மார்பு , முகம் போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால்.

ü  உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்

ü  அளவுக்கு அதிகமாக முகப் பரு ஏற்பட்டால்.

ü  கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமை நிறமாற்றம் காணப்பட்டால்.

PCOD – PCOS மாதவிடாய் கோளாறுகள் சிகிச்சைக்கு தொடர்பு  கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள், கருப்பை வீக்கம், பெண்களுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சி, உடல் பருமண், போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்