விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, January 24, 2015

மலச்சிக்கல் ஏற்படுவதன் காரணங்களும், தடுக்கும் முறைகளும் சிகிச்சையும். Constipation: Reasons to get constipation, Preventive methods and Constipation Treatment,



 மலச்சிக்கல் ஏற்படுவதன் காரணங்களும், தடுக்கும் முறைகளும் சிகிச்சையும்.  Constipation: Reasons to get constipation, Preventive methods and Constipation Treatment,





மலச்சிக்கல் ஏற்படுவதன் காரணங்களும், தடுக்கும் முறைகளும் சிகிச்சையும்.  Constipation: Reasons to get constipation, Preventive methods and Constipation Treatment,

காலையில் மலச்சிக்கல் இன்றி அன்றைய நாள் தொடங்க வேண்டும். மலச்சிக்கல் இன்றி அன்றைய நாளின் மாலை, இரவுப் பொழுது விடிய வேண்டும். அப்படி விடிந்தால் தான் அந்த நாள் இனிமையான நாளாக இருக்கும்

மலச்சிக்கலின் வகைகைள்: Types of Constipation
¬  மலம் நாள்தோறும் கழிக்க முடியும். ஆனால் இறுகிப் போய் கட்டியாக இருக்கும். முக்க வேண்டிய அவசியம் இருக்கும்.
¬  மலம் சாதாரணமாக இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் செல்லும்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்: Reasons for Constipation
Ø  நார்ச்சத்து உள்ள உணவை குறைவாக உட்கொள்தல், அல்லது நார்ச்சத்து உள்ள உணவை சாப்பிடாமல் இருத்தல். Low fiber intake
Ø  உடற்பயிற்சி செய்யாதிருத்தல். உடல் உழைப்பின்மை, Lazyness, Lack of Exercise,
Ø  குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், அடைப்பு, Abscess in Gut,
Ø  நீண்ட காலக் குடலிறக்கம், Hernia,
Ø  மூலநோய், Piles
Ø  குதத்தில் ஏற்படும் வெடிப்பு Fissure
Ø  தைராய்டு சுரப்பி குறைவாக சுரத்தல், Hypothyroidism
Ø  உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகுதல், பொட்டாசியம் குறைதல், Increased level of calcium and decreased level of Potasium,
Ø  மனச் சோர்வு.
Ø  நிறையபேர் அதிகம் தண்ணீர்  அருந்துவதில்லை. இதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகிறது. அதிலும் பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க இதை அதிகம் செய்கின்றனர். Low intake of water
Ø  அலுமினியம் சேர்ந்த வயிற்றுவலி மாத்திரை, சிறுநீர் வெளியேற பயன்படுத்தும் மாத்திரை, தூக்க மாத்திரையை அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படலாம். Using of Sleeping pilles, Aluminium antacid tablets,
Ø  இடுப்பு, முழங்கால் வலியால் அவதிப்படும் வயதானவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். Pain in limbs, hips, Avoidance of passing stool

மலச்சிக்கல் நோயின் அறிகுறிகள்: Signs of Constipation
ü  மலச்சிக்கல் – Difficult to pass stool,
ü  ஆசனவாய் எரிச்சல், வலி, pain and burning sensation in anus,
ü  மலத்துடன் ரத்தம் போகுதல், Bleeding with motion,
ü  தனியாக ரத்தம் சிவப்பு நிறத்தில் போகுதல், dark red Bleeding in anus,
ü  வாய்ப்புண் mouth ulcer,
ü  ஊறல், ஆசனவாய் நமச்சல், Itching in anus,  போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

மலச்சிக்கல் பின்விளைவுகள்: Bad effect of constipation
மலச்சிக்கலை கவனிக்காவிட்டால் பல விளைவுகள் ஏற்படும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஏற்படும் மலச்சிக்கலால் தொல்லைகள் இல்லை. ஆனால் பல மாதங்கள், பல ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால் அதனால் பல விளைவுகள் ஏற்படலாம். அவற்றில் சில:
v  பொதுவாக எல்லா நோய்களுக்குமே மலச்சிக்கல் அறிகுறி என்று சொல்லி விடலாம்.
v  உச்ச கட்டமாக மலச்சிக்கல் அதிகமாக இருந்தால், நாள்பட்டதாக இருந்தால் அது மூல நோயில் முடியலாம்.
v  வயதானவர்கள் மலச்சிக்கலினால் கஷ்டப்படும்போது நெஞ்சு வலியும், மயக்கமும் வர வாய்ப்பு உண்டு,
v  மலம் சரிவர கழிக்காததால் மனதில் ஒருவித துன்பம், ஒருவித பதட்டம் பற்றிக் கொள்ளும்.
v  மலம் கட்டியாகப் போவதால் குதத்தில் விரிசல் ஏற்பட்டு அதனால் ரத்தக் கசிவு ஏற்படும்.
v  மலச்சிக்கலினால் சில நேரங்களில் திடீரென்று சிறுநீர் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
v  மலம் சிறுகுடலில் தேங்கி நிற்பதால், சிறு குடலில் அடைப்பு ஏற்படலாம்.
v  மலம் பெருங்குடலில் தேங்கி, சில சமயம் முழுமையாய் பெருங்குடலை அடைத்துவிடும். அப்படி முழுமையாய் பெருங்குடலை அடைத்து விடுவதால் அவ்விடத்தில் தேங்கியுள்ள அசுத்த நீர் மட்டும் கசிந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். அது வயிற்றுப் போக்குப் போல காணப்படும்.
v  மலமிளக்கி மாத்திரைகளைத் தொடர்ந்து உண்ணும் தீய பழக்கம் உண்டாகும்.
v  மலச்சிக்கலுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருந்தால் அந்த நோய்க்குரிய சிகிச்சையை முதலில் செய்துகொள்ள வேண்டும். அதைத் தவிர சில விதிமுறைகளை கடைப்பிடித்தால் முதுமையில் மட்டுமல்ல, இளமையிலும் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க: How to prevent Constipation
  • ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து டம்ளர் (2-3 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்கு மேலேயும் குடிக்கலாம். Drink more water to avoid constipation,
  • அன்றாடம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். – do exercise regularly,
  • தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும் – avoid to take unwanted tablets,
  • முக்கியமாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய உண்ண வேண்டும். Take fiber rich diet foods,
  • கேழ்வரகு, கோதுமை, திணை, வரகு போன்ற உணவு வகைகள் நார்ச்சத்து மிகுந்தவை. தவிட்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Wheat, raggi, thinai, varagu, helps to avoid constipation
  • கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், காளிபிளவர், புடலங்காய், பாகற்காய் முதலிய காய்களிலும் பேரீச்சம் பழம், அத்திப் பழம், மாம்பழம் ஆகிய பழங்களிலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
  • நம்மில் பலர் வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு மிக நல்லது என எண்ணுகிறார்கள். ஆனால் அதில் மாவுச்சத்து தான் நிறைய உள்ளது. நார்ச்சத்து மிக குறைவுதான். அந்த மாவுச்சத்து மலத்தைப் பெருக்க வைத்து இளக்கி விடதான் உதவும்.
  • மிளகு, ஓமம், கொத்தமல்லி, மிளகாய் வற்றல் போன்ற பொருட்களிலும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.
  • இம்முறைகளினால் பயனில்லை என்றால் மலமிளக்கி மாத்திரைகளை இடைவிட்டோ, தொடர்ந்தோ முதியவர்கள் உண்ணலாம். ஆனால் அதையும் ஒரு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உட்கொள்வதே நல்லது. நோய் வாய்ப்பட்ட முதியவர்கள், மிக வயதான முதியவர்கள் இனிமாவை மேற்கொண்டோ,
  • மலமிளக்கி மாத்திரைகளை ஆசனவாயில் நுழைத்தோ மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஆனால் முடிந்த அளவிற்கு இவற்றை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

மலச்சிக்களுக்கான சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி  மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர்ந்து உட்கொண்டால் மலச்சிக்கலிளிருந்து விடுபடலாம்.


மலச்சிக்கல் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற மலச்சிக்கல், ஆசன வாய்வெடிப்பு, மூலம், பெளத்திரம், ஆசன வாயில் அரிப்பு, இரிடபிள் பவல் சின்ரோம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com







மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மலச்சிக்கல் – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--==--



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்