விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

புரதச்சத்து குறைபாடும் அதனால் வரும் நோய்களும், - Diseases Due to Protein Deficiency and Treatments



 புரதச்சத்து குறைபாடும் அதனால் வரும் நோய்களும், - Diseases Due to Protein Deficiency  and Treatments



புரதச்சத்து குறைபாடும் அதனால் வரும் நோய்களும்,
புரதச்சத்துக் குறைவால் மராஸ்மஸ் (வளர்ச்சி குறைவு மற்றும் வளர்ச்சி இழப்பு ஏற்படுவது) மற்றும் குவாஷியாக்கர் (உடல் வீக்கம் ஏற்படுவது, திசுக்களில் பாதிப்பு ஏற்படுவது) ஆகிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. புரதச்சத்துக் குறைவால், நிமோனியா, அம்மை போன்ற நோய்த்தாக்கத்தினால் இறப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

காரணங்கள்
¬  உணவில் சேர்த்துக் கொள்ளும் அமினோ அமிலங்களின் குறைபாட்டினால் குவாஷியாக்கர் மற்றும் மராஸ்மஸ் பாதிப்பு ஏற்படுகிறது,
¬  முக்கியமாக குவாஷியாக்கர் குழந்தையின் ஒரு வயதிற்குள் ஏற்படுகிறது.
¬  சிறு குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவதை நிறுத்தி மற்ற உணவுகளை உண்ணத் தொடங்கும்போது, அதில் போதுமான அளவு புரதச்சத்து இல்லாமல், மாவுச்சத்து மட்டும் அதிகம் உள்ள கஞ்சி மற்றும் சிறுதானிய உணவுகளை உண்ணும் போது இக்குறைபாடு ஏற்படுகிறது.
¬  இப்பிரச்சினை சிறுவயதின் எந்த காலகட்டத்திலும் ஏற்படலாம். ஆனால் மராஸ்மஸ், குழந்தையின் 6 முதல் 18 மாத காலகட்டத்திற்குள் ஏற்படுகிறது.
¬  தாய்ப்பால் சரியான அளவிற்கு இல்லாத போதும், வயிற்றுப்போக்கு ஏற்படும் போதும் மராஸ்மஸ் ஏற்படுகிறது.

அறிகுறிகள்
Ø  புரதச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் சராசரி உடல் வளர்ச்சியை விட வளர்ச்சி குன்றி காணப்படுவர். உடல்ரீதியாக சுறுசுறுப்பின்றி காணப்படுவார்கள்.
Ø  அதிக அளவில் தொற்று நோய்த்தாக்கம் மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாவார்கள்.
Ø  புரதச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வளர்ச்சி குன்றியும், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமலும் காணப்படுவர். உலர்ந்த சருமத்துடனும், செந்நிற முடியுடனும் காணப்படுவர்.
Ø  உடல் சூடு, நாடித்துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவைகளும் குறைந்து காணப்படும்.
Ø  சோர்வு, பசியுணர்வு, வாந்தி மற்றும் மயக்கம் கூட ஏற்படலாம்.
Ø  மராஸ்மஸ் போல் இல்லாமல், குவாஷியாக்கரினால் பாதிக்கப்பட்டவர்கள் உயரத்தில் வளர்ச்சி ஏற்படும். ஆனால் அடிபோஸ் திசு வளர்ச்சி குறைந்து காணப்படும்.
Ø  உடல் உலர்ந்த, வெடித்த சருமம் இதன் பொதுவான அறிகுறியாகும். இரண்டாம் நிலை புரதச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்  மராஸ்மஸ் போன்ற அறிகுறிகள் - திசுஇழப்பு, சோர்வு மற்றும் வீக்கம் ஆகியவை காணப்படும்.



சிகிச்சை

புரதச்சத்து அதிகமுள்ள உணவுவகைகள், நோயின் அறிகுறிகளுக்கேற்ற சத்து மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையின் படி உட்கொள்ளவேண்டும்.



==--== 

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்