விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோய்கள் - தடுக்கும் முறைகள் - சிகிச்சைகள், - Female Cancers, Preventive Methods and Treatments




 பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோய்கள் - தடுக்கும் முறைகள் - சிகிச்சைகள், - Female Cancers, Preventive Methods and Treatments




பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோய்கள்

பெண்ணுருப்பு புற்று நோய்கள் – Gynecological Cancers

புற்று நோய்
Ø  இது எந்த வயதிலும் ஏற்படலாம் எனினும் ,அதிகளவில் நடுத்தர வயதினரிடையேயும் வயதானவர்களிடையேயும் பொதுவாக வரலாம்.

பெண்களுக்கு வரக்கூடிய புற்று நோய் வகைகள் என்ன?
¬  மார்பக புற்று நோய் – Breast Cancer,
¬  கருப்பை கழுத்து புற்று நோய் – Cervical Cancer,
¬  சூலகப் புற்று நோய் – Ovarian cancer
¬  கருப்பைச்சுவர் புற்று நோய் – Endometrial Cancer

கருப்பை கழுத்து புற்று நோய்  - Cervical Cancer
இது கருப்பையின் வாயில் ஏற்படும் புற்று நோயாகும்; கருப்பை கழுத்து, கருப்பையின் கீழ்பாகத்தில் காணப்படும்.இது மெதுவாக வளரும் ஒரு புற்று நோயாகும்.எனவே அறிகுறிகள் காணப்படாது.ஆனல்,PAP பரிசோதனை மூலம் இதனை முன்கூட்டி அறியலாம்.

யாரை தாக்கலாம்?
ü  HPV எனும் வைரஸ் நோய், இதில் HPV 16/18 கருப்பை கழுத்து புற்று நோயுடன் தொடர்புள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
ü  உடலுறவின் மூலம் பரவும் தொற்று நோய்கள் STI காணப்படுதல்.
ü  முன்கூட்டியே உடலுறவில் ஈடுபடுவோர் ( வயது 20க்கும் குறைவு)
ü  பல உடலுறவு துணைகள் Multi Sexual Partners.
ü  புகைத்தல். Smoking
ü  நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்.- Low Immunity

பொதுவான அறிகுறிகள் – Common Symptoms
¬  உடலுறவின் பின் யோனி வழியாக இரத்தம் வருதல்- Bleeding after Sexual Intercourse.
¬  யோனி வெளியேற்றம்அதிகமாக,இரத்தம் கலந்த,மணமுடைய
¬  மாதவிடாய் இடையேஇரத்தம் வெளியேறுதல் – Vaginal Discharges with foul smell,
¬  மாதவிடாய் நிறுத்தத்தின் பின் குருதி பெருக்கு.- Post menopausal Bleeding

கருப்பை கழுத்து புற்று நோய் எவ்வாறு கண்டுபிடிப்பது
ü  PAP ஸ்மியர் பரிசோதனை.
ü  Colposcopy [கருப்பை கழுத்தை பெரிதாக்கி காட்டும்]
ü  Cervical biopsy [கருப்பை கழுத்து நுன் சதை பரிசோதனை]

சிகிச்சை முறைகள்
•       அறுவை சிகிச்சை (கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை)
•       கதிரியக்க சிகிச்சை முறை – Radiation Therapy
•       இரசாயன முறை சிகிச்சை - Chemotherapy


சூலகப் புற்று நோய்  - Ovarian Cancer
ஒரு சூலகத்திலோ அல்லது இரண்டிலோ அசாதாரண வளர்ச்சி சூலக புற்று நோய் ஆகும்.இது முன்கூட்டியே அறியப்பட்டால் குணமாக்கலாம்;எனினும் பொதுவாக காலதாமதமாகவே இவை கண்டு பிடிக்கப்படும்.

யாரை தாக்கலாம்?
¬  50 வயதினை தாண்டியவர்கள்.
¬  குடும்பத்தில் மார்பக, சூலக அல்லது பெருங்குடல் புற்று நோய் உள்ளவர்கள்.
¬  முன்கூட்டி பூப்படைதல், காலதாமதமான மாதவிடாய் நிறுத்தம்.
¬  பிள்ளை பேறற்ற பெண் அல்லது முதல் பிள்ளை கிடைக்கும் போது வயது >30
¬  அதிகளவிலான கொழுப்பு , குறைவான நார் உணவுகள்.

அறிகுறிகள்
சூலகப் புற்றுநோய் அறிகுறிகள் முன்கூட்டி அறிவது கடினமாகும்.
பொதுவானவை:
Ø  வயிற்று பகுதியில் கட்டி. Mass in abdomen,
Ø  வயிறு பெருத்தல். Abdominal Enlargement
Ø  வயிற்று சுற்றளவு அதிகரித்தல். Increasing Waist size
Ø  எடை குறைதல்.- Lowering Weight,
Ø  அதிக தடவை சிறுநீர் கழித்தல் ,தன்னிச்சையாக சிறுநீர்  - வெளியேறுதல். Frequent or Involuntary Urination,
Ø  வயிற்று வலி. Abdominal Pain
Ø  பின்புற வலி. Back Ache,

இவ்வாறான நோய் அறிகுறிகள் வேறு நோய்களுக்கும் பொதுவானது என்பதால் புற்று நோய் என ஊர்ஜிதப்படுத்துவது கடினமாகும்.

எவ்வாறு கண்டு பிடிப்பது
ü  சாதாரனமாக மருத்துவர் பரிசோதிக்கும் போது, கட்டி கண்டுபிடிக்கப்படலாம்;
ü  அல்லது வயிற்று பகுதி ஸ்கேன் செய்யும் போது கண்டு பிடிக்கப்படலாம்.
ü  எல்லா கட்டிகளும் புற்று நோய் அல்ல.
ü  அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்படும் நுன்சதை பரிசோதனையே சூலகப்புற்று நோயை ஊர்ஜிதப்படுத்தும்.
ü  CA-125 எனும் குருதி பரிசோதனை செய்யலாம்;

சிகிச்சை முறைகள்
Ø  அறுவை சிகிச்சையே பிரதான சிகிச்சை முறையாகும். இது சூலகங்கள், குழாய்கள் மற்றும் கருப்பையை அகற்றுவதன் மூலம் செய்யப்படும்.
Ø  அறுவை சிகிச்சையின் பின் பல மாதங்களாக இரசாயன முறை சிகிச்சை வழங்கப்படும்.
Ø  புற்று நோய் மீண்டும் ஏற்படலாம்இதனால் வாழ்க்கை முழுவதும் தொடர் கண்காணிப்பு தேவை.
Ø  இதனால் CA-125 , ஸ்கேன் என்பவை தொடர்ச்சியாக செய்யப்படவேண்டும்.

கருப்பை சுவர் புற்று நோய்  - Endometrial cancer
இது கருப்பை சுவர் செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படும்.
இது 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களிலே பொதுவாக ஏற்படும்.இது முன்கூட்டியே கண்டு பிடிக்கப்பட்டால் குணமடையலாம். இப்புற்றுநோய் அதிகம் பரவுவதற்கு முன் கண்டு பிடிக்கப்படும்.
சாத்தியக்கூறு மிகுந்தவர்கள்
ü  வயது >50
ü  கருப்பை சுவர் புற்றுநோய் குடும்பபிண்ணணி – Heriditory Endometrial cancer,
ü  தாமாதமான மாதவிடாய் நிறுத்தம் – Delayed Menopause
ü  முன்கூட்டிய பூப்படைதல் – Early Puberty
ü  பிள்ளை பேறற்ற பெண்கள் Nullipara Womens -
ü  ஹார்மோன் சிகிச்சை பெற்றவர்கள் –Hormone Medications,
ü  அதிக பருமன் – Over Weight
ü  உயர் கொழுப்பு உணவுகள் – High Fatty food intake,

அறிகுறிகள்
மாதவிடாய் நிறுத்தத்தின் பின் இரத்தம் வெளியேறுதல். – post Menopausal Bleeding,
இரு மாதவிடாய் சுழற்சிகளிடையே இரத்தம் வெளியேற்றம்.  Intermittent Bleeding between  the menses cycles

கருப்பை சுவர்புற்று நோய் எவ்வாறு கண்டுபிடிப்பது
¬  அசாதரண யோனி இரத்த வெளியேற்றம் சம்பந்தமான பரிசோதனைகள்,.
¬  ஸ்கேன் செய்து கருப்பை சுவரின் தடிப்பு, மற்றும் நிலை அறியப்படும்
¬  Pipel’s biopsy
¬  Dilation and Curettage D& C

சிகிச்சை முறைகள்
ü  அறுவை சிகிச்சை
ü  கருப்பை மற்றும் குழாய்கள், சூலகங்கள் சேர்த்து அகற்றப்படும்.
ü  கதிரியக்க சிகிச்சை
ü  இரசாயன முறை சிகிச்சை கீமோதெராபி- இது மிகவும் பரவலடைந்த புற்று நோய்களுக்கு மட்டுமே தேவைப்படும்.


மார்பக புற்றுநோய் - Breast Cancer)

மார்பக புற்று நோய் என்றால் என்ன?
மார்பக செல்கள் கட்டுப்பாடு இன்றி வளர்ச்சியடைதல். இது பால் சுரப்பிகளையும் அணுக்களையும் பாதிக்கலாம்.ஆண், பெண் இருபாலுக்கும் ஏற்படலாம். ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிக  குறைவு.

யாருக்கு வரலாம்
¬  மாதவிடாய் நிறுத்தத்தின் பின் உடல் பருமன் அதிகரித்தல்.
¬  மாதவிடாய் நிறுத்தத்தின் முன் ஈஸ்ட்ரஜன் சூலகத்தில் சுரக்கப்படும் . ஈஸ்ட்ரஜன் அதிகரித்தல் மார்பக புற்று நோய் வாய்ப்பை அதிகரிக்கும்.
¬  உணவுஅதிக கொழுப்பு உணவுகள்,
¬  அதிக மாமிச உணவுகள் மார்பக புற்று நோயை அதிகரிக்கலாம்.
¬  மது அருந்துதல்-ஆராய்ச்சிகள் மூலம் மது அருந்துதல், மார்பக புற்று நோயும் அதிகரிப்பதாக முடிவுகள் காணப்பட்டுள்ளன.
¬  புகைத்தல்மார்பக புற்று நோய் ஏற்பட சிறிய ஒரு சாத்தியக்கூறு உள்ளது.
¬  ஈஸ்ட்ரஜன்  – பெண்ணின் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் மார்பக கலங்களின் வளர்ச்சியை தூண்டுவதால் வாய்ப்பு அதிகரிக்கும்.
¬  குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் அதிக காலம் (>10 வருடம்) சாப்பிட்டாலும் மார்பக புற்று நோய் சாத்திய கூற்றை அதிகரிக்கும்.
¬  பிள்ளை பேறற்ற பெண்
¬  தாய்ப்பாலூட்டாத பெண்

உங்களால் கட்டுப்படுத்தமுடியாத கரணிகள்:
v  வயதுஅதிகரிக்க சாத்திய கூறு அதிகரிக்கும். மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன் புற்று நோய் ஏற்படுவது குறைவு.
v  மார்பக புற்று நோய் ஒரு முறை ஏற்பட்டிருத்தல்  – இது சாத்திய கூற்றை அதிகரிக்கும்.
v  குடும்பத்தில் மார்பக புற்று நோய் காணப்படுதல் . தாய், சகோதரி அல்லது மகளுக்கு புற்று நோய் ஏற்பட்டிருந்தால்இது சாத்திய கூறு அதிகம். 40 வயதிற்கு முன் ஏற்பட்டிருந்தால் சாத்தியகூறுகள் மேலும் அதிகரிக்கும்.
v  பிறப்புரிமை அணுக்களில் மாற்றங்கள் – BRCA1,BRCA2 எனும் பிறப்புரிமை அணுக்களில் ஏற்படும் மாற்றங்களே மார்பக புற்று நோய்க்கு காரணம்.
v  இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய்முன் கூட்டி பூப்படைதல் மூலம் அதிக மாதவிடாய் சக்கரங்கள் ஏற்படும். எனவே ஈஸ்ட்ரஜன் மார்பக கலங்களை தூண்டும் காலம் அதிகரிக்கும். இது புற்று நோய்க்கான சாத்திய கூற்றை அதிகரிக்கும்.
v  12 வயதிலும் குறைந்த பெண் பூப்படைதலும் ,55 வயதிற்கு பின் மாதவிடாய் நிறுத்தமும் ஏற்பட்டால் மார்பக புற்று நோய்க்கான சாத்திய கூறுகள் அதிகம்.

அறிகுறிகள்
ஆரம்பத்தில் எந்தவொரு அறிகுறியையும் ஏற்படுத்தாது. X-ரே படம் பிடித்தலின் போது அல்லது ஸ்கேன் செய்யும் போது தற்செயலாக கண்டுபிடிக்கப்படலாம்.
Ø  மார்பக கட்டி – Mass in Breast
Ø  மார்பக வீக்கம் – Swelling in Breast
Ø  தோலில் வலி – Pain in Shoulder.
Ø  மார்பக வலி – Pain in Breast
Ø  மார்பக காம்பில் வலி அல்லது மாற்றம் – Pain or Changes in Nipples
Ø  மார்பக காம்பிலிருந்து வெளியேற்றம் – Discharges from Nipples,
Ø  அக்குள் பகுதியில் கட்டி – Mass in Auxiliary Region

இவை மார்பக புற்று நோய் அல்லாத நிலைமைகளிலும் ஏற்படலாம். எனவே , இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் எனின் உடன் ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

முன்கூட்டி அறிதல்
மார்பக புற்று நோயை முன்கூட்டி அறிதலின் மூலம் , அதை குணமடையச்செய்யலாம். இது மார்பக அகற்று சிகிச்சையிலிருந்து பாதுகாக்கும்.

பெண்களுக்கு தன் மார்பகங்களை தானே பரிசோதித்தல் மூலம் கட்டிகளை முன்கூட்டியே அறியலாம்.
ü  மம்மோகிராம் Mammogram   – இது மார்பகத்தின் X – கதிர் படமாகும்.இவை வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படுவது நல்லது. இது பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டோர் மீது செய்யப்படும், இது பாதுகாப்பானது மற்றும் நம்பதகுந்தது .
ü  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்(USG)
ü  தற்பரிசோதனை ( Self Examination)

 breast enlargement treatment specialist dr.senthil kumar, panruti, velachery, chennai


சுய மார்பக பரிசோதனை ( Self Breast Examination)
¬  மாதத்திற்கு ஒரு முறையாவது, தற்பரிசோதனை செய்து வர வேண்டும். மாதவிடாய் முடிவடைந்து சில நாட்களில் தற்பரிசோதனை செய்வது உகந்தது.
¬  கண்ணாடி முன் நின்று உங்கள் மார்பகங்களை பார்க்கவும். தோள்கள் நேராகவும் கைகள் இடுப்பிலும் இருக்க வேண்டும்
¬  இப்போது, மார்பக பருமனில் அல்லது வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நிற மாற்றங்கள், வீக்கம், மார்பக காம்பில் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை கவணிக்கவேண்டும்.
¬  கைகளை தலைக்கு மேலாக தூக்கி, மார்பக தோலில் மாற்றங்கள் ஏற்படுகின்றதா என பார்க்க வேண்டும்
¬  இப்போது, மார்பகங்களை முதலில் நின்ற நிலையில் அல்லது உட்கார்ந்த நிலையில் பரிசோதிக்க வேண்டும், இடப்புற மார்பகம் வலது கையினாலும் வலப்புற மார்பகம் இடக்கையினாலும் பரிசோதிக்க வேண்டும்.
¬  மார்பக காம்பில் ஆரம்பித்து, பின் வட்டமாக வெளி எல்லை வரை செல்ல வேண்டும். பின் அக்குள் பகுதி பரிசோதிக்கப்படவேண்டும்.
¬  மார்பக காம்பு அழுத்தப்பட்டு பரிசோதிக்கப்படவேண்டும்.


சிகிச்சை முறைகள்
அண்மை காலங்களில் மார்பக புற்று நோய் சிகிச்சை முறைகளில் முன்னேற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன. தற்போது அறுவை சிகிச்சை , ஹார்மோன் சிகிச்சை மற்றும் இரசாயன சிகிச்சை முறைகள் செய்யப்படுகிறது.






==--==


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்