விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

வளர்ப்பு விலங்குகள் & மற்ற விலங்குகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் - First Aid for Animal Bits



 வளர்ப்பு விலங்குகள் & மற்ற விலங்குகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் - First Aid for Animal Bits




வளர்ப்பு விலங்குகள் & மற்ற விலங்குகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மிருகங்களின் கடி சாதாரணமாக காயங்களை ஏற்படுத்தும் அல்லது வாழ்க்கையை அச்சுறுத்தக்கூடிய  தொற்றுக் காயங்களை ஏற்படும்.
மிருகக்கடிக்கான காரணங்கள்

முதலாவது மிருகக்கடி எனும் போது பெரும்பாலானவை நாய்கள் கடிப்பதினால் ஏற்படுகிறது. இரண்டாவதாக பூனைகள் கடிப்பதால் ஏற்படுகிறது. பூனைக்கடிப்பதினால் ஏற்படும் பயங்கரம் என்பது நாய் கடியினால் ஏற்படுவதைவிட மோசமானது. மற்ற மிருகங்கள் எனும்போது பாம்புக்கடி மற்றும் குரங்குக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மிருகங்களின் கடி எனும்போது ராபிஸ் எனும் வெறிநாய்கடி மிக முக்கியமானது. பெரும்பாலும் நாய்கள் கடிப்பதினாலே ராபிஸ் தோன்றுகிறது.

அறிகுறிகள்
மிருகங்கள் கடிக்கும் போது மேல் தோல் கிழியாவிட்டாலும் மேல் தோலுக்கு கீழாக காணப்படும் தசை, டெண்டான் (தசைநார்), லிகாமெண்ட் (தசையை எலும்புகளோடு இணைக்கும் தசைநார்), எலும்புகள் மற்றும் நரம்புகள் போன்ற உறுப்புகள் நசுங்குதல் மற்றும் கிழியக்கூடிய நிலைமைகள் ஏற்படலாம். ஒருவேளை கடியின் போது மேல் தோல் கிழியும் போது மேற்கூறிய நிலைமைகளுடன் நோய் தொற்றக்கூடிய கூடுதல் நிலைமை ஏற்படுகிறது.

நோய் தொற்றுவதற்கான அடையாளங்கள்
¬  காயத்தைச் சுற்றிலும் வெதுவெதுப்பாக இருத்தல்
¬  காயத்தைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுதல்
¬  வலி தோன்றுதல்
¬  சீழ் வெளியேறுதல்
¬  காயத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமாக காணப்படுதல்
¬  காயத்தை சுற்றியுள்ள தோலில் நோயின் தன்மை பரவுதல்
¬  நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் (நெறிகட்டுதல்)
ராபிஸ் மற்றும் பூனைக்கீறலினால் ஏற்படும் காய்ச்சல்
தசைநார் அல்லது நரம்புகள் சேதப்படும் போது காணப்படும் அடையாளங்கள்

Ø  விரல்களை நீட்டவோ அல்லது மடக்கவோ இயலாமை
Ø  விரல் நுணிகளில் உணர்வுகள் இழந்தல் காணப்படும்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மருத்துவ முதலுதவி
கடிபட்ட இடத்தை வாயில் வைக்கக்கூடாது. வாயில் காணப்படும் பாக்டீரியாக்கள் தொற்றக்கூடும்.

மேற்காயங்கள்
மேற் காயங்களை சோப்பைக் கொண்டோ அல்லது தண்ணீரைக் கொண்டோ நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது ஆல்கஹால் எனப்படும் கிருமி நாசினியைக் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து அல்லது பூசும் களிம்பினை வைத்து ஒட்டும் தன்மை இல்லாத கட்டுபோடும் துணியைக் கொண்டு காயத்தை மூடவேண்டும். காயம் பட்ட இடத்திலுள்ள நரம்புகள் மற்றும் தசை நார்களில் சிதைவு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளனவா என கவனமாய் பார்த்தறிய வேண்டும்சிலசமயம் உள்காயம் அல்லது ஊமைக் காயங்கள் ஏற்படும். கடிப்பட்ட இடம் அல்ல காயம் 10 நாட்களுக்குள் சுகமாக வேண்டும். அப்படி ஆறாத பட்சத்தில் அல்லது நோய் தொற்றுதலுக்கான அறிகுறியோ நரம்பு மற்றும் தசை நார் சிதைவோ காணப்படின் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

இரத்த கசிவு அல்லது இரத்தப் போக்கு இருப்பின்
இரத்தக்கசிவு இருந்தால் அந்த இடத்தை சுத்தமாக நன்கு உலர்ந்த துணியினைக் கொண்டு நேரடியான அழுத்தத்தை செலுத்தி அந்த இடம் மற்ற பகுதிகளைவிட உயர எழும்பச் செய்ய வேண்டும். அந்த இடத்தில் இரத்தக் கசிவு ஏற்படவில்லையெனில், அந்த இடத்தை சுத்தம் செய்ய தேவையில்லை காயத்தை நோய் தன்மையை உண்டுபண்ணாத பாதுகாப்பான சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மற்றும் மருத்துவ உதவியை நாடவேண்டும்.

பாம்புக் கடிகள்
பாம்புகள் குளிர்ரத்தப்பிராணிகள் ஆகும். இவைகளால் தங்கள் உடலின் தட்பவெட்பநிலையினை மாற்றிக்கொள்ள இயலாது. குளிர்ச்சியான தட்பவெட்பத்தில் இவைகள் இயல்பாக செயல்படும். இவைகள் 25 முதல் 32 டிகிரி  செல்ஷியஸ்  தட்பவெப்பநிலையில் மிகவும் சுருசுருப்பாக செயல்படும்.

பாம்புகள் கடிக்கும் போது தன்னுள் உள்ள விஷத்தை அல்லது நச்சை கடிக்கும் பகுதியில் உட் செலுத்தும். இந்த விஷமானது விஷத்தை சுரக்கும் சுரப்பியிலிருந்து நடு குழாய்  போன்ற அமைப்பின் வழியாய் பாம்பின் விஷப்பல்லுக்குச் செல்லும் பின்னர் தான் கடிக்கும் இறையின் உடலினுள் செலுத்தும். பாம்பின் விஷத்தில் பல விளைவுகளை உண்டாக்கும் பல பொருட்கள் கலவையாக காணப்படுகிறது.

சுருங்கச் சொன்னால் விஷத்தில் உள்ள புரதங்களை 4 வகையாக பிரிக்கப்படலாம்.
Ø  சைட்டோடாக்சின் எனப்படும் உடற்செல்களை பாதிக்கும் விஷத்தன்மையுள்ள புரதம்
Ø  ஹிமோ டாக்சின் எனப்படும் இரத்தத்தை பாதிக்கும் விஷத் தன்மையுள்ள புரதங்கள்
Ø  நியூரோடாக்சின் எனப்படும் நரம்பு பகுதியை பாதிக்கும் விஷத் தன்மையுள்ள புரதங்கள்
Ø  கார்டியோ டாக்சின் எனப்படும் இதயத்தை பாதிக்கும் விஷத் தன்மையுள்ள புரதங்கள்

8000 வகையான விஷத்தன்மையுள்ள பாம்புகள் உள்ளன. இவற்றில் மனிதர்களில் ஆபத்தை ஏற்படுத்தும் இரண்டு முக்கிய குடும்பப்பிரிவுகளை சார்ந்த விஷத்தன்மையுள்ள பாம்புகள் உள்ளன. அவை நாகப்பாம்பு வகை மற்றும் விரியன் பாம்புவகை.

அறிகுறிகள்
விஷப்பாம்புகடி பல விளைவுகளை ஏற்படுத்தும் (சிறிய காயங்கள் முதல் வாழ்க்கையை அச்சுறுத்தும் வியாதி மற்றும் மரணம்.) விஷப்பாம்பு கடிக்குப்பின் ஏற்படும் அறிகுறிகள் சிலவேலைகளில் தவராக புரிந்து கொள்ளப்படும். விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் எந்த குறிப்பிட்ட அறிகுறியும் காணப்படாது. பின்னர் திடீரென சுவாசிப்பது கடினமாகி மயக்க நிலை ஏற்படும்.

பாம்புக் கடியால் ஏற்படும் சில முக்கிய வகை அடையாள அறிகுறிகள்
ü  கடிபட்ட இடத்தில் ஏற்படும் மாற்றங்கள், விரியன் மற்றும் சிலவகை நாகப்பாம்பு கடியினால் அந்தபகுதியில் வலி இருக்கும் மற்றும் அந்த இடம் தடித்து மிருதுவாய் காணப்படும். கடிப்பட்ட இடம் வீக்கம் கண்டு, இரத்த கசிவு மற்றும் கொப்புளங்கள் ஏற்படும். சில நாகப்பாம்பின் விஷம் கடிப்பட்ட இடத்தை சுற்றியுள்ள திசுக்களை, தசைபகுதியை கொன்றுவிடும்.
ü  இரத்தப்போக்கு, விரியன் பாம்பு கடியினால் உடல் உள்ளுறுப்புகளில் குறிப்பாக மூளை மற்றும் குடல் போன்ற பகுதிகளில் இரத்த கசிவு ஏற்படும். கடிப்பட்டவருக்கு கடிப்பட்ட இடத்திலிருந்து அல்லது வாய் மற்றும் பழய காயங்களிலிருந்தோ தானகவே இரத்தப்போக்கு ஏற்படும். சரியாக கவனிக்கவில்லையெனில் இரத்தப்போக்கின்மிகுதியால் மயக்க நிலை இன்னும் மரணமும் நேரிடலாம்.
ü  நரம்பு மண்டல பாதிப்புகள் : சில வகை பாம்புகளின் விஷமானது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கின்றன. விஷம் விரைவாக குறிப்பாக சுவாசதசைகளை பாதிப்பதினால் மருத்துவ உதவியின்றி மரிக்க நேரிடும். ஆரம்பத்தில் கடிப்பட்ட நபரின் கண்களில் பாதிப்பு ஏற்படும். பேச்சு குழறல் மற்றும் சுவாச பிரச்சனைகள், சுயநினைவிழக்கும் தன்மை பின்னர் மரணம்.
ü  தசை செயல் இழப்பு  சில குறிப்பிட்ட பாம்பு விஷம் நேரடியாக உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் உள்ள தசையை செயல்இழக்கச் செய்கிறது. செயல் இழந்து தசைகளிலிருந்து வெளிவரும் கழிவு சிறுநீரகங்களின் செயல்பாட்டை தடை செய்யும் மற்றும் இரத்தத்திலள்ள புரதங்களை சீறுநீரகங்கள் மூலம் வெளியேற்ற முயற்சிக்கும். இதன் விளைவாக சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்யும்.
ü  கண்கள்    விஷத்தை துப்பும் நாகங்கள் விஷத்தை குறிப்பாக மனதிர்களின் கண்களில் உமிழச்செய்யும். இதன் விளைவாக கண்களில் நேரடியாக வலி மற்றம் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எப்பொழுது மருத்துவமனையை அணுகவேண்டும்
ஒருவரை கடித்த விஷத்தன்மையற்றது என கண்டறியப் பட்டாலொழிய அனைத்து அல்லது எந்த வகை பாம்புகடிக்கான மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவின் உதவியினை அவசியம் நாட வேண்டும். நினைவில் கொள்ள வேண்டியது, பாம்பின் வகையை சரியாக இனம் காணாமல் போனால் இது மரணத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். தவறுதலாகிவிடும். விஷத்தன்மையில்லாத பாம்பு கடியின் காயத்தை நன்கு பராமரிக்க வேண்டும். பாம்பு கடியினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடைசி 5 ஆண்டுகளில் டெடான்ஸ் எனும் ரனஜன்னி கூடுதல் ஊசி போட தவறியிருப்பின் அவசியம் இந்த ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

ராபீஸ்  வெறிநாய் கடி வியாதி  வராமல் தடுப்பது உங்கள் கரங்களில் உள்ளது





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்