விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

பித்தப்பை கற்கள் Gallstone சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, Gall Stones Treatment Clinic, Velachery, Chennai, Tamil nadu
 பித்தப்பை கற்கள் Gallstone சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, Gall Stones Treatment Clinic, Velachery, Chennai, Tamil naduபித்தப்பை கற்கள் (Gallstone)
பித்தப் பை (Gall Bladder) எனப்படுவது நமது உடலில் பித்தத்தை(Bile) தற்காலிகமாக சேகரிக்கும் பை போன்ற ஒரு உறுப்பாகும்.

இவ்வாறு பித்தப்பையிலே சேகரிக்கப்படும் பித்தமானது ஒரு குழாய் மூலம் சிறுகுடலை வந்தடைந்து உணவு செறிமானத்திற்கு உதவுகிறது.

பித்தப்பையின் அமைப்பு
பித்தப்பை, ஈரலின் கீழே ஒட்டிக் கொண்டு இருக்கும் ஒரு உறுப்பு. பிரதான பித்தப் பாதையுடன் (Common Bile Duct –CBD) ஒரு சிறிய இணைப்பு குழாய் வழியே (Cystic Duct) சேருகிறது


பித்தப்பை கற்கள் ஏன் வருகிறது?
 • பித்தப்பை தனது சுருங்கி விரியும் தன்மையை இழக்கும் போது தங்கி விடும் பித்தம் கற்களாக உருமாறுகிறது.

 • பித்தத்தில் உள்ள சில அடர்திரவங்களின் சேர்க்கையால் கற்கள் உருவாகலாம். இவை பொதுவாக பித்தப் பைக் கற்கள் எனப்படும்.

 • இந்த கற்கள் பித்தப்பையிலும் இருக்கலாம் அல்லது பித்தத்தை பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்கு கொண்டு சேர்க்கும் குழாயினுள்ளேயும் இருக்கலாம்.


பித்தப்பை கற்களின் வகைகள்
1-   கொலஸ்டிரால் பித்தப்பை கற்கள் – Cholesterol Stones
2-   நிறமி பித்தப்பை கற்கள் – Pigment Stones

யாருக்கு பித்தப்பை கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
 1. பெண்கள்
 2. உடற் பருமனானவர்கள்
 3. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்
 4. பரம்பரை பரம்பரையாக கூட வரலாம்.
 5. சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
 6. இரத்தக்கொழுப்பிற்கான மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.

பித்தப் பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள்...
 • வலது பக்க வயிறு வலி
 • பசியில்லாமல் இருப்பது
 • ஏப்பம், அஜீரணம், வயிறு உப்புசம்
 • குமட்டல்
 • வாந்தி,
 • நெஞ்சு எரிச்சல்,
 • வாயுத்தொந்தரவு,
 • பித்தப்பைக் கிருமித் தோற்று
 • பித்தக் குழாய் அடைப்பு
 • தோலில் அலர்ஜி
 • சில நேரங்களில் தொல்லையே இல்லாமலும் இருக்கலாம் — (Silent gallstones – Asymptomatic Gall Stones)

பித்தப் பைக் கற்கள் உள்ள அனைவருக்கும் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதாவது பித்தப் பைக் கற்கள் உள்ளவர்களில் சில பேருக்கு மட்டுமே அது பாதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்களுக்கு வாழ்நாள் முழுக்க எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்தக் கற்கள் ஏற்படுத்தும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களும் வேறுபடலாம்.

பித்தப்பை கற்களினால் ஏற்படும் வலியானது வயிற்றின் வலது பக்க மேல் மூலையில் வரும். இந்த வலியானது தோற்பகுதிக்கு பரவிச் செல்லுவது போன்ற உணர்வினையும் ஏற்படுத்தும்.

பித்தப்பை கிருமித் தோற்று உள்ளவர்களுக்கு காய்ச்சலும் ஏற்படலாம்.

பித்தப்பை குழாயில் முழு அடைப்பு உள்ளவர்களுக்கு பித்தப் நீரான பிலிரூபின் (Bilirubin) அதிகரித்து ஜாண்டிஸ் (Jaundice) மஞ்சள் காமாலை, (கண் மற்றும் உடல் மஞ்சள் ஆகும் என்ற நிலையும்) ஏற்படலாம்.

சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள்
 • மஞ்சள் காமாலைஅடைப்பினால் வருவது—Obstructive jaundice
 • திடீர் கணைய வீக்கம்—Acute pancreatitis
 • பித்தப்பை சீழ்பிடித்தல்—Empyema Gallbladder
 • சீழ்பிடித்து வெடித்தல்—Perforation

மேற்கூறிய அனைத்தும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்


பித்தப்பை கற்களை கண்டறிவது எப்படி – Investigations?
 • USG Abdomen
 • Endoscopic Retrograde Cholangio Pancreatography (ERCP)
 • Liver Function tests


மருத்துவம்
Ø  பித்தப்பை கற்கள் உள்ள எல்லோருக்கும் மருத்துவம் தேவைப்படுவதில்லை.

Ø  வலி அல்லது வேறு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவர்களுக்கு எந்தவிதமான மருத்துவமும் தேவை இல்லை.

Ø  பித்தப்பை கிருமித்தொற்று, அல்லது மீண்டும் மீண்டும் வலி ஏற்படுபவர்களுக்கு பித்தப்பைக் கற்கள் அகற்றப்பட வேண்டும்இதற்கான அறுவை சிகிச்சையின் போது கற்களோடு சேர்த்து பித்தப்பையும் அகற்றப்படும்.

பித்தப்பை கற்கள் கறைய ஹோமியோபதி மருத்துவம்
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனலிக்கும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – பித்தப்பை கற்கள், Pithappai kal, Gall bladder Stones – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 ==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்