விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

குளிர்காலத்தில் உடலையும் சருமத்தையும் பராமரிக்கும் வழிகள் - How to Manage Cold Season - Skin and Body care




 குளிர்காலத்தில் உடலையும்  சருமத்தையும் பராமரிக்கும் வழிகள் - How to Manage Cold Season - Skin and Body care




குளிர்காலத்தில் உடலையும்  சருமத்தையும் பராமரிக்கும் வழிகள்

மார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. சூரிய ஒளி குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்றுக் குறைவாகவே இருக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக 'வைரஸ்' நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும்.

இந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொண்டையில் டான்ஸில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. இன்னும் இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா ஜூரம், ஒற்றைத் தலைவலி ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. அதோடு இந்த மாதிரியான பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகி விடுகிறது.

காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் ஜூரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன.

நம் உடலை எப்படி பாதுகாப்பது
Ø  நல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள்.
Ø  வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிக்கவும்.
Ø  பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளுங்கள்.
Ø  மூக்கை கைகுட்டையால் மூடிக் கொள்ளுங்கள்.
Ø  இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
Ø  இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாயைத் திறந்து பேசிக்கொண்டே வண்டி ஓட்டாதீர்கள்.
Ø  தும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், மூக்கிலிருந்து வடியும் நீரிலும் அதிக அளவு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவை உடனே அருகில் இருக்கும் நபர்களைத் தாக்கி பரவும். மற்றவர்கள் நலன் கருதி, கைகுட்டை, கைதுண்டு இல்லாமல் இருக்காதீர்கள்.
Ø  பொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
Ø  கம்பளியினாலான கையுறை அணியுங்கள். மாலை ஆனதும் காலுறை அணியுங்கள். சற்று இறுக்கமான ஆடைகள் அணிந்துக் கொள்ளுங்கள்.
Ø  மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள்.
Ø  பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்¬ணீரைப் பயன்படுத்துங்கள்.
Ø  பன், பிரெட் போன்ற பேக்கரி ஐட்டங்களையும், சுவீட்களையும் வாங்கிய அன்றே உண்ண வேண்டும். இல்லையெனில் அதன் மேல் உருவாகும் பூஞ்சக்காளான்களால் வாந்தி, பேதி உண்டாகும்.
Ø  பொதுவாக பனிக்காலத்தில் தோல் வறண்டு விடும்.
Ø  உதடுகள் வெடிக்காமலிருக்க வெண்ணெய், நெய், கிளிசரின், பாலேடு, லிப்கார்டு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.
Ø  பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தப்படுத்திக் கொள்ள பழக்குங்கள்.


மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 45 நிமிடங்கள் ஒதுக்குங்கள்




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்