விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

மூளை செயலிழப்பு - ஸ்ட்ரோக் அட்டாக் எப்படி தவிர்ப்பது - How to Prevent Brain Stroke Attack - A Guidance


 மூளை செயலிழப்பு  - ஸ்ட்ரோக் அட்டாக் எப்படி தவிர்ப்பது - How to Prevent Brain Stroke Attack - A Guidance



மூளை செயலிழப்பு  - ஸ்ட்ரோக்
மனித மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் (தமனி) ஏற்படுகின்ற அடைப்பினால்தான் ஸ்ட்ரோக் ஏற்படுகின்றன. மூளையின் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன் மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயல்களும்/பாகங்களும் கட்டுப்பாட்டை இழக்கின்றன.

உதாரணமாக, ஒரு கை/கால் செயல்படாமை அல்லது பேச இயலாமை. இந்த பாதிப்பு தற்காலிகமானதாகவோ, நிரந்தரமாகவோ, பகுதி அளவு பாதிப்பாகவோ அல்லது முழுமையான அளவிலோ இருக்கலாம். அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு உடனடி  மருத்துவ சிகிச்சையைப் பெற்றால், மூளைக்கு முறையாக ரத்தம் செலுத்த வழிவகை செய்யப்பட்டு, பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமென்று மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.

எனக்கு ஸ்ட்ரோக் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?
கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்குமேயானால், உடனடி அவசர கால சிகிச்சைப் பெற ஏற்பாடு செய்யவும். விரைவான உதவிகளை நீங்கள் பெற்றால் அது  இனி வரும் பாதிப்புகளில் இருந்தும் நிரந்தர பாதிப்பிலிருந்தும் உங்களைக் காப்பாற்ற மருத்துவருக்குப் பேருதவி புரியும்.
Ø  திடீரென்று  முகத்தின் ஒரு பகுதி , உடலின் ஒரு புறத்தில் உள்ள கை/கால்களில் மட்டும்  ஏற்படும் குறைபாடு (வலுவின்மை) அல்லது உணர்ச்சியற்ற நிலை.
Ø  திடீரென்று ஏற்படும் பார்வை மங்கல் அல்லது குறைபாடு, குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் ஏற்படுதல்.
Ø  பேச முடியாமை, பேசுவதில் தடுமாற்றம் அல்லது பிறர் சொல்லுவதைப் புரிந்து கொள்வதில் சிரமம்.
Ø  காரணமின்றி பயங்கரமாக வரும் திடீர் தலைவலி
Ø  காரணமின்றி கிறு கிறுவென வருதல், தடுமாற்றமான நடை அல்லது கீழே விழுதல், குறிப்பாக மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து வருதல்.
Ø  ஸ்ட்ரோக் வருவதைச் சுட்டிக்காட்டும் மற்றொரு அபாய அறிகுறிதான் சிறு அளவிலான தாற்காலிகத் தாக்குதல் [ட்ரான்ஸியென்ட் இஸ்சகிமிக்  அட்டாக்- டி   Transient Ischemic Attack TIA ]. டி என்பது 'சிறு அளவிலான தாக்குதல்'ஆகும். மாரடைப்பு வருவதற்கான ஒத்த அறிகுறிகளுடன் வந்தாலும், சில நிமிடங்களுக்கு மட்டுமே இது நீடிக்கும். ஆனாலும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. டி தாக்குதல் வந்துவிட்டால் அது பிற்காலத்தில்  மாரடைப்பு ஏற்பட கட்டாயம் வழி வகுக்கும். உங்களுக்கு டி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் ,உடனடியாக மருத்துவரை அணுகவும்.


 ஸ்ட்ரோக் வருவதற்கான காரணிகள்:
  • அர்திரோஸ்க்ளிரோசிஸ் – Arthrosclerosis (ரத்த நாளங்கள் சுருங்குதல்)
  • கட்டுப்படுத்தாத நீரிழிவு நோய் – Untreated Diabetes
  • உயர் ரத்த அழுத்தம் – Hypertension – High Blood Pressure,
  • அதிக அளவிலான கொலஸ்ட்ரால் – High Cholesterol level
  • புகை பிடித்தல் – Smoking,
  • ஏற்கனவே ஏற்பட்ட  சிறு அளவிலான தாற்காலிகத் தாக்குதல்[Transient Ischemic Attack]
  • இதய நோய்கள் – Heart Diseases
  • கரோடிட் ஆர்ட்டரி நோய்  Carotid Artery Diseases CAD (உங்கள் மூளைக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம்)



ஸ்ட்ரோக் வராமல் தடுப்பது எப்படி?
உங்கள் குடும்ப மருத்துவரிடம் இதற்கான காரணிகளையும் (காரணிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன) பாதிப்பைக் குறைப்பதற்கான வழிகளையும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்ட்ரோக் வராமல் தடுக்க சில ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
ü  உயர் ரத்த அழுத்தம் இருந்தால்,உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி அதைக் கட்டுப்படுத்துங்கள்
ü  ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதற்காக அதிக கொழுப்பும் கொலஸ்ட்ராலும் உடைய உணவு வகைகளைத் தவிர்த்தல் & உப்பு (சோடியம்) குறைவான உணவுகளை உண்ணுதல்.
ü  நீரிழிவு நோய் இருந்தால்,சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்தல்
ü  மது அருந்தும் பழக்கத்தை முடிந்த அளவு குறைத்து அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
ü  புகை பிடிக்காதீர். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால், புகைப்பிடிக்க ஆரம்பிக்காதீர்.

ஸ்ட்ரோக் வருவதற்கான  வாய்ப்புகள் அதிகரிக்காமல் இருக்க மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்து முறையாக அவ்வப்போது செய்து கொள்ளுதல் மிக அவசியம். ஆஸ்ப்ரின் மருந்தைக்  குறைந்த அளவு டோஸில் உட்கொள்ளுதல் மாரடைப்பினால் வரும் பாதிப்பினைக் குறைக்குமா என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைத் தடுக்க காரணமான  கட்டிகள் (அடைப்புகள்) உருவாதலைத் தடுக்க ஆஸ்ப்ரின் மருந்து உதவி செய்யும்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்