சிறுநீரகக் கோளாறு வராமல் தடுப்பது எப்படி? How to Prevent Kidney Dysfunction
நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.
காரணங்கள்
Ø சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்
Ø வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்
Ø சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்
Ø நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
அறிகுறிகள்
ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன
¬ உடல் எடை இழப்பு
¬ குமட்டல் வாந்தி
¬ பொதுவான உடல்நலக்குறைவு
¬ சோர்வு
¬ தலைவலி
¬ அடிக்கடி ஏற்படும் விக்கல்
¬ உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன
¬ வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
¬ இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
¬ சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
¬ வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
¬ மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
¬ தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
¬ தோலில் வெள்ளைநிற படிகங்கள்
¬ கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல்
¬ நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
¬ அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
¬ அதிக தாகம் ஏற்படுதல்
¬ தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
¬ நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
¬ சுவாசம் நாற்றம் எடுத்தல்
¬ உயர் இரத்த அழுத்தம்
¬ பசியின்மை
எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகவேண்டும்
Ø தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே மருத்துவரை அணுகலாம்
தடுப்புமுறை
ü சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்து விலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்
==--==