விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 21, 2015

நீரழிவு நோய் - டையாபடீஸ் பற்றி பயமா? கவலைப்பட ஒன்றுமில்லை - தகவல்கள் ஆலோசனைகள் - Diabetes, Nothing to Worry - Proper Treatment Helps You




 diabetes homeo dr chennai - டயாபெடிஸ் ஓமியோ சிகிச்சை சென்னை



நீரழிவு நோய்  - டையாபடீஸ்
ஆரோக்கியமான ஒரு நபர் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்.

உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் -ஆக மாறுகிறது. நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்தில் கலந்து பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடல்செல்களுக்கு எடுத்துச்செல்கிறது.அதனால் உடல் இயக்கம் சீராக செயல்படுகிறது.

குளுகோஸ் செல்களுக்குள் செல்லுதல் - கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றது. செல்களானது இன்சுலினை தங்களுக்குள் எடுத்துக் கொள்கிறது.

செல்கள் குளுக்கோஸ்- சக்தியாக மாற்றுகிறது - குளுக்கோஸ்- செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியாக உற்பத்தி செய்து தருகிறது.

சர்க்கரை நோய் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்கள்:.
குளுக்கோஸ்- சக்தியாக மாற்றி சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.

உணவு குளுக்கோஸ்-ஆக மாறுகிறது - வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாற்றுகிறது. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை

ஏனெனில்
Ø  இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி ஆகாமல் இருத்தல்.
Ø  இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்- உட்கொள்ள முடியாத நிலை
Ø  எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.

செல்களினால் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாது -எல்லா இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருக்கும். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.

நீரழிவு நோயின் அறிகுறிகள்
நீரழிவு நோய் உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம். அவற்றில் சில
ü  அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவு நேரத்திலும்)
ü  தோலில் அரிப்பு ஏற்படுதல்.
ü  கண் பார்வை மங்கலடைதல்.
ü  சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.
ü  பாதம் மறத்துப்போதல்
ü  அதிகமான தாகம்.
ü  காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.
ü  எப்பொழுதும் பசியோடு இருத்தல்.
ü  எடைகுறைதல்.
ü  தோல் வியாதிகள் ஏற்படுதல்.
ü  சிந்திக்க முடியாத அளவு தலைபாரம்.


இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்
v  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்த நிலையிலிருப்பது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும்.
v  நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்புகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.
v  நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, பக்கவாதம்(ஸ்ட்ரோக்) மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.
v  கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் (வெண்புள்ளி)தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.
v  சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படும்.
v  ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
v  சத்து குறைவு ஏற்பட்டு அது தொடர்பான நோய்கள் உருவாகும்.
v  சைலண்ட் டெத் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
v  கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.


நீரழிவு நோயினைக் கையாளுதல்
¬  உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனிப்பட்ட நபர் சுத்தம் சுகாதாரம் மற்றும் இன்சுலினை ஊசியாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ (மருத்துவரின் அறிவுரைப்படி) எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுத்து நிறுத்தும் சில எளிய வழிமுறைகள் ஆகும்.
¬  உடற்பயிற்சி - உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள செல்கள் குளுக்கோஸ்-யை உபயோகிப்பதனை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் போது 135 கலோரிகள் சக்தியானது பயன்படுத்தப்படுகிறது. அதுவே 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது 200 கலோரிகள் சக்தியினை எரித்து பயன்படுத்தப்படுகிறது.
¬  சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி திசரி காலை 1 மணி நேரம் செய்திடும் போது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.


நீரழிவு நோய் ஏற்பட்ட பின் தோலினை பராமரிக்கும் முறை
சர்க்கரை நோய் கண்ட நபர் தோலினை பராமரிப்பது அவசியம். இரத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சான்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைந்து காணப்படுவதால், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை. அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.

உடலை தவறாமல் ஒழுங்காக சோதித்து, கீழ்க்காண்பவை இருப்பின் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
v  தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.
v  தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.
v  பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்
v  ஆறாத காயங்கள்


தோலை()சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்
ü  தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ü  வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
ü  குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு சுத்தமான துணியால் துடைத்து சுத்தம் செய்தல் வேண்டும்.
ü  வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்
ü  தோலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்


காயங்களை பராமரித்தல்
Ø  நீரழிவு நோய் கண்ட நபர்கள் உடலில் ஏற்படும் சிறு காயங்களை உடனுக்குடன் தொடர்ந்து கவனிப்பது-மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
Ø  சுத்தமான வெண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிபட்ட காயங்களைக் கழுவ வேண்டும்.
Ø  ஆல்கஹால்/அயோடின் கொண்ட மருந்துகளை காயத்தின் மேல் பூச வேண்டாம். இத்தகைய மருந்துகள் எரிச்சலை உண்டாக்கும். மருத்துவரின் ஆலோசனையின் படி தான் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
Ø  சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்.
Ø  முழுமையான சிகிச்சை இன்மையால் உடல் உறுப்புகள் இழப்போ()உயிர் இழப்போ ஏற்படுவதனை தடுத்திட சிறிய காயத்தை கூட அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரிடம்தான் சிகிச்சை எடுக்க வேண்டும்.


பாதங்களைப் பராமரித்தல்
நீரழிவு நோய் காணப்பட்டால், நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதத்தில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களைப் பராமரிக்க சில வழிமுறைகள்
ü  புண், வெட்டு காயங்கள், தடித்திருத்தல், கொப்புளங்கள், கீறல்கள் போன்றவை உள்ளனவா என்று பாதங்களை அவ்வப்போது பரிசோதித்து பார்த்தல் வேண்டும்.
ü  கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
ü  நகங்களை அவ்வப்போது வெட்டவும்
ü  முடிந்த வரை கால் தோலினை அழுத்தாத,காயமேற்படுத்தாத காலணிகளைப் பயன்படுத்தி, பாதங்களை பாதுகாத்தல் வேண்டும்.


பற்களைப் பராமரித்தல்
v  முறையான பராமரிப்பின் மூலம் பற்களை நீண்ட நாட்கள் வலிமையோடு வைத்துக்கொள்ளலாம்பல் துலக்குதல் :
v  மிருதுவான இழைகளைக் கொண்ட ப்ரஷ்களைப் பயன்படுத்தவும்.
v  ஒரு நாளுக்கு, இரண்டு முறை காலை,மாலை பல் துலக்கவும்.
v  பல் துலக்கும் போது, ப்ரஷ்-ன் இழைகளை, பல் மற்றும் ஈறுகளின் மத்தியில் வைத்து, லேசான அசைவினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதின் மூலம், இவ்விடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் () உணவுத்துகள்கள் அகற்றப்படுகின்றன.
v  நாக்கு, கன்னத்தின் உட்புறம் மற்றும் பற்களின் உணவு அறைக்கும் பகுதிகளை லேசான அசைவினால் சுத்தம் செய்யவும்.
v  பல் துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஷ்-ன் இழை நுனியில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. சர்க்கரை நோயாளிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ப்ரஷ்-யை மாற்ற வேண்டும்.
v  ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் பற்களில் படியும் அழுக்கினை சுத்தம் செய்வது (பல் இடுக்குகளில்) பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் பல்மருத்துவரை அணுகவும்.
¬  சாப்பிடும்போது அல்லது பல்துலக்கும் போது பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால்.
¬  பல் ஈறுகள் சிவப்பாக மாறினால், வீக்கம் கண்டால், அல்லது மிருதுவாக காணப்பட்டால்.
¬  பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படும் போது .
¬  பல் ஈறுகளை தொடும்போது பல் ஈறுகளிலிருந்தும் பற்சந்துகளிலிருந்தும் சீழ் வெளிப்பட்டால்.
¬  பல் அமைப்பில் மாற்றம் எற்பட்டால்.
¬  துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால்.உடனடியாக பல் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது அவசியம்.

கண்கள் பராமரிப்பு:
நீரழிவு நோய் கண்ட நபருக்கு கேட்டராக்ட் மற்றும் குளுக்கோமா ஏற்படும் வாய்ப்பு மாற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் உண்டு. நீண்டகாலமாக அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருந்தால், கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களில் பாதிப்பினை ஏற்படுத்தி, ரெடினோபதி என்னும் நோயினை ஏற்படுத்தலாம். உண்மையில், இந்த ரெடினோபதி சர்க்கரை நோயாளிகளில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை நோய் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் கண்களை முழுமையாக பரிசோதிப்பது அவசியம். கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பின் கண் மருத்துவரை உடனடியாக பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ü  புள்ளிகள், அலசலான பார்வை, மங்கலான பார்வை சிலந்தி வலை போன்று பார்வை சிதைவு, பார்வையின் போது கரும்புள்ளிகள், கண் வலித்தல் மற்றும் கண்கள் தொடர்ந்து சிவந்திருத்தல் போன்ற கண் பார்வை கோளாறுகள்.
ü  நன்கு அறிந்த பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை, சாலை சிக்னலை சரியாக பார்க்க முடியாத நிலை மற்றும் படிக்க முடியாத பிரச்சினை மற்றும் வேறு வகையான கண்பார்வை கோளாறுகள் ஏற்படலாம்.சுய வைத்தியம் செய்து கொள்வது,மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்