நுரையீரலை தாக்கும் நோய்களும் அதன் தடுப்பு முறைகளும்
இலட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் பரிசோதிக்கப்படும் போது அவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பலரும் பரிசோதிக்காமல் இருப்பதால், அவர்களுக்கு இதுபோன்ற நோய் இருப்பது தெரியாமலே போகிறது. நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு என்று குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கின்றன. அது குறித்த விபரங்களைப் பார்ப்போம்.
நுரையீரல் தொடர்பான நோய் அறிகுறிகள்:
இருமல் - Cough
v இருமுவது என்பது ஒரு தடுப்புபணி-எதற்கு?. காற்று செல்லும் பாதியிலுள்ள சளிபோன்றவற்றை சுத்தம் செய்ய, நச்சுப்பொருள் உள்ளே செல்வதைத் தடுக்க! இருமல் நமக்கு நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். அது எப்படி இருமுகிறோம் என்பதைப் பொறுத்தது. தொடர் அல்லது மோசமான இருமலைத் தொடர்ந்து ஜுரம், மூச்சு வாங்குதல் அல்லது ரத்தம் கலந்த சளி வெளியானால், உடனே மருத்துவ சிசிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இருமல், நுரையீரல் வியாதியின் மிகச் சாதாரணமான ஒரு அறிகுறியாகும்.
மூச்சுவாங்குதல் – Breathlessness –
v இது நுரையீரலில் ஏற்படும் தொந்தரவு காரமாணக் கூட ஏற்படும். இதயநோய், கோபம், அவசரம் காரணமாகவும் இருக்கும். திடீரென வரும் ஜுரம், ஜுரம் தொடர்ந்து இருப்பது, மற்ற தொந்தரவுகளுடன் சேர்ந்து வரும்போது, நோயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உடன் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். வயதாகுதல் காரணமாக மூச்சு வாங்குதல் ஏற்படாது. எனவே மூச்சு வாங்கினால், உடனடி சிகிச்சை தேவை. கவனமாக இருக்க வேண்டும்.
மூச்சு இழுப்பு - Wheezing
v இது ஒரு வகை சத்தம். மூச்சு இழுக்கும்போதோ, வெளியிடும் போதோ வெளிவரும். காற்று போகும் பகுதியில் ஏற்படும் அடைப்பு, சில திசுக்களின் அடைப்பால் இழுப்பு உண்டாகும். அதிகமான நீர் அல்லது சளி வெளியாகுதல், வெளியிடத்து பொருள் ஒன்று உள்ளிழுக்கப்பட்டு அது காற்று போகும் பகுதியை அடைப்பதனால் இழுப்பு ஏற்படுகிறது. நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மோசமாகும்போது இழுப்புதான் முதல் அறிகுறியாக இருக்கும்.
நெஞ்சுவலி – Chest pain
v நுரையீரலில் தொந்தரவு, இதயத்திலுள்ள சதை மற்றும் எலும்பிலுள்ள பிரச்சனை காரணமாக இவ்வலி ஏற்படும். இவ்வலி சாதரணமாகவும் இருக்கலாம். மோசமாகவும் இருக்கலாம். உயிருக்கே கூட ஆபத்தாக அமையும். மூச்சு இருக்கும்போது நெஞ்சு வலி ஏற்படும். நெஞ்சில் வலி என்பது தொற்று காரணமாக ஏற்படும். மேலும் இருமல், ஜுரமும் இருக்கும். நெஞ்சுவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிக்ச்சைக்கு தயாராக வேண்டும்.
ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியாகுதல்)
Hemoptysis
v இருமும்போது கருஞ்சிவப்பு நிற நுறை, ரத்தம் கலந்த சளி, கட்டி ரத்தம் அல்லது சுத்தமான ரத்தம்கூட வெளியாகும். தொடர் இருமல் காரணமாக இதுபோல் நிகழும் அல்லது மோசமான நுரையீரல் நோய் காரணமாக ரத்தம் வெளியாகும். இருமும்போது ரத்தம் வெளியாகுதல் மூச்சுக்குழல் வியாதியின் ஒரு வகை அறிகுறியாகும்.
சையனோசிஸ் - Cyanosis
v தோல் நீலமாக அல்லது கருநீலமாகும்போது இது உண்டாகும். குறிப்பாக உதடுகள், நகக்கண்களில் நிறமாற்றம் ஏற்படும்போது, சையனோசிஸ் ஏற்படும். ஏன் இப்படி நிறமாற்றம் ஏற்படுகிறது? ரத்தத்தில் போதியளவு பிராணவாயு கலக்காமல் போவதால் உண்டாகிறது. மோசமான நுரையீரல் வியாதியினால் சையனோசிஸ் ஏற்படுகிறது.
வீக்கம் – Swelling
v கை, கால் மற்றும் கணுக்காலில் வீக்கம் ஏற்படுவது நுரையீரல் வியாதியினால்தான். வீக்கம், இதயநோய், மூச்சுவாங்குதல் ஆகியவற்றோடு சேர்ந்து உண்டாகும். பல நேரங்களில் இதயம் நுரையீரல் இவ்விரண்டும் ஒரேமாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தும். காரணம் பல பிரச்சனைகள் இதயத்தையும் நுரையீரலையும் தாக்குகின்றன.
மூச்சுப்பிரச்சனை – Breathing problem
v மூச்சுப்பிரச்சனைதான் நுரையீரல் பாதிப்பின் மிக முக்கிய அறிகுறி. பெரிய அளவிலான தொற்று, நுரையீரலின் வீக்கம், இதயத்துடிப்பு நின்றுபோகுதல், நுரையீரலில் கடுமையான வியாதி தாக்குதல் ஆகியவற்றால் மூச்சு விடுவதே நின்றுபோகக் கூடும். நுரையீரல், ரத்தத்திற்கு பிராணவாயுவை சேர்த்தல் அல்லது ரத்தத்தில் உள்ள கார்பன்டை-ஆக்சைடை வெளியேற்றுதல்- இவ்விரண்டு வேலைகளை செய்யாததே மூச்சுப்பிரச்சனையாகும்.
நுரையீரல் வியாதிகளுக்கான காரணங்கள்
v நுரையீரல் வியாதி பெரியவர்கள் - வயதானவர்கள் முதல் சிறுகுழந்தைகள் வரை அனைவருக்கும் வரும். சிறு குழந்தைகளை கொல்லக்கூடியது நுரையீரல் வியாதிதான்.
புகைபிடிக்காதீர் – Don’t Smoke
ü நமது உடலை மோசமாக பாதிக்கக்கூடியது புகை பிடிப்பதுதான். நுரையீரல் வியாதிகளான எம்பைசீமா, சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை மட்டுமல்ல, நமது உடலில் மற்ற உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கக்கூடியது புகை பிடித்தல் பழக்கம்.
எனவே புகையை தவிர்ப்போமே!.
==--==