விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, September 17, 2015

ஆண்களும் வயதுக்கு வருவார்கள் - Male also attain the Puberty


 male and female sexual changes problem treatment in chennai


ஆண்கள் வயசுக்கு வருவது எப்போது?
பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. சமிபத்தில் அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம்.

6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம்.

இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வெள்ளை இனத்தவரிடையே பூப்பெய்தும் வயது சராசரியாக 10 ஆக உள்ளதாம். அதேசமயம், கருப்பர் இனத்தவர்களிடையே 9 வயதாக பூப்பெய்தும் வயது இருக்கிறதாம்.

இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் கூட கிட்டத்தட்ட இதே வயதில்தான் ஆண்கள் பூப்பெய்துகிறார்களாம்.

வெள்ளை இன சிறார்களிடையே 6 வயதிலேயே கூட சிலருக்கு பூப்பெய்தும் அறிகுறிகள் தெரிகிறதாம். இந்த எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது. அதேசமயம், கருப்பர் இனத்தவரிடையே 6 வயதில் பூப்பெய்துவது என்பது 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

9 சதவீத வெள்ளை இன ஆண்களைப் பொறுத்தவரை சராசரியாக 6 வயதிலேயே அவர்களுக்கு விதைப் பை வளர்ச்சி நன்கு வந்து விடுகிறதாம். கருப்பர் இனத்தவர்களில் இது 20 சதவீதமாக உள்ளது.

அந்தரங்க உறுப்பு உள்ள பகுதியில் முடி வளருவது, விதைப் பை விரிவடைந்த அடுத்த ஆண்டிலேயே ஏற்படுகிறதாம். இது பொதுவாக அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியாக உள்ளதாம்.

பெண்களைப் பொறுத்தவரை மார்பக வளர்ச்சிதான் அவர்கள் பூப்பெய்தப் போவதற்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. 10 சதவீத வெள்ளை இனப் பெண்களில் 7 வயதில் இது நடைபெறுகிறதாம்.

கருப்பர் இனப் பெண்களில் இது 23 சதவீதமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் வயது சராசரியாக 12 ஆக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, 90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்