விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, March 24, 2016

Fever in Childrens - குழந்தைக்கு சுரமா



 chronic fever in children treatment in chennai




ஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா:
ஜுரம் என்பது  ஒரு அறிகுறி  மட்டுமே, அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் சிறு குழந்தைக்களுக்கு  ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் இருக்கும். இது உடலில் உள்ள  நீர் சத்தை குறைத்துவிடும். இது மேலும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

எனவே ஜுரம் வந்தால் செய்யவேண்டியது என்ன?
அதிகமான திரவ உணவினை கொடுத்து கொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழசாறு

எளிதில் காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும். முடிந்தால் டயபரை கூட கழட்டிவிடுவது நல்லது.

ஸ்வட்டர் கண்டிப்பாக போடகூடாது. ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே கண்டிப்பா  கூடாது. இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு.

ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும்

சரி ஸ்வட்டர் எப்போது போடலாம்:
ü  எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தலாம்.
ü  பயணம் செய்யும்போது, குளிர்ப்ரதேசங்களுக்கு செல்லும்போது.

ü  இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது.



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்