விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, March 24, 2016

முதல் இரவு பயம் – First Night Fear Psychological Conseling in Chennai, Velachery, Tamil nadu


 first night fear psychological sexual counseling in chennai tamil nadu



முதல் இரவு பயம் – First Night Fear
முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.


அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான்.


குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும் போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம்.


மேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.


இன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்துவிடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.


அது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.


அதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.


செக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.


அதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.


அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால் சரிதான்.

முதலிரவை பற்றி உங்கள் இருவருக்கும் பயமோ பதற்றமோ இருந்தால் தயங்காமல் இருவரும் திருமணத்திற்கு முந்தைய உளவியல் Pre Marital Counseling ஆலோசனையை உளவியல் ஆலோசகரிடம் பெறவும்.

For Pre Marital and Post Marital Counseling
Feel free to contact us

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Pre Marital Counseling  – 20-12-2016 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்