விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, March 24, 2016

Why do Indian brides enter the bedroom with a glass of milk? முதல் இரவில் பால் கொடுத்து அனுப்புவது ஏன்?


 முதலிரவிற்கு தயாராவது எப்படி உளவியல் ஆலோசனை


முதல் இரவில் புதுப்பெண்ணிடம் பால் கொடுத்து அனுப்புவது ஏன்?
உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.

பாலில் பல வகைகள் உண்டு.ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.

v  தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப் பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது. எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப் பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது.

v  நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

v  ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப்பால் சுரக்கும்.

v  இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.

v  வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும் பால் சாப்பிட்டால் பேதி அதிகமாகப் போகும். ஆனால் ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்!

v  சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச் சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப் படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும் பால் மருந்தாக உள்ளது.

v  தூக்கம்வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து.

v  ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதனால் தான் நம் பெரியவர்கள் முதல் இரவில் பால் கொடுத்து அனுப்புகிறார்கள்.

v  வெள்ளை மனதுடன் வெள்ளை நிறப் பாலை பகிர்ந்து கொள்ளும்போது அன்னோன்யத்தின் ஆரம்பம் !

v  பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். முதல் இரவிற்கான பலத்தையும் பெறலாம்.

v  தூக்கம் வராமல் தவிப்பர்களுக்குத்தான் பால் நல்ல தூக்க மருந்து.ஆகையால் தூக்கம் வரும் என பயப்பட வேண்டியதில்லை!

==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்