விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, April 7, 2016

Sexual Problems in family Counseling Clinic in Chennai Tamil nadu - பாலுறவு பிரச்சனைகளுக்கான மன நல ஆலோசனை மையம் சென்னை தமிழ் நாடு


 செக்சில் பிரச்சனை கவுன்சிலிங் தமிழ் problems in family wife sex in tamil



பாலுறவு சிக்கல்
பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் ஆலோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த பெண்மணி கூறினார். காரணத்தை ஆராய்ந்த போது, அவள் மீது ஒரு வகை துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த நாற்றம் உடல் உறவின் போது அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தன்னுடைய உறுப்பு விறைப்பினை பெறுவதில்லை என்றும் காரணம் சொன்னார் அந்த இளைஞன். வேறு ஒரு ரகசியத்தையும் அவர் கூறினார். வேறு பெண்களோடு மிகவும் திருப்தியான உறவைக் கொள்ள முடிவதையும், அவனிடம் பெறும் அனுபவத்திற்காகவே சில குடும்ப பெண்கள் கூட தன்னிடம் வருவதாக சொன்னார்.

இதைப்போலவே மனம் சார்ந்த பிரச்சனைகளில், பாலியல் சிக்கல்களும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. பாலியல் பிரச்சனைகள் பற்றி முக்கியமாக அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது இரண்டு அம்சங்கள். ஒன்று இந்தப் பிரச்சனைகள் பொதுவானவை. மற்றொன்று தற்காலிகமானவை. எல்லோருடைய வாழ்விலும் பாலினப் பிரச்சனைகள், சிக்கல்கள் வந்து பின்பு மறைந்து போய் இருக்கும்.
இரு பாலினரிடமும் சிக்கல்கள் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவதற்கு இது ஒரு காரணம்.

குடும்ப நல மன நல ஆலோசனையின் போது மற்றவர்களுக்கு கேட்காத, இடையூறு இல்லாத தனிமையான இடமாக இருப்பது அவசியம். குடும்ப பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாலின்ப சிக்கல் இருக்கிறதா என அறிவது அவசியம். எனவே அனுபவமிக்க மன நல ஆலோசகரின் ஆலோசனை பெறுவது நல்ல பலனலிக்கும்,

உடல் உறவு திருப்தியாக உள்ளதா என்பதை அறிய குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? கடைசியாக உறவு கொண்டது எப்போது என்பது போன்ற விபரங்களைக் தெரிவிப்பது அவசியம். கேள்விகளுக்கான பதில்களை சொல்லும் போது ஏனோ தானோ என பதில் சொல்லாமல் ஈடுபாட்டுடன், உண்மையா பதில் சொல்வது நல்லது. பாலியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் நேரடியாக பிரச்சனையை சொல்லலாம்.

ஒரு பெண்மணி, தனது வயதுக்கு வந்த மகள்களின் முன்பாகவே, “எனது கணவர் தினந்தோறும் உடல் உறவு கொள்ள முயற்சிக்கிறார். இவர்கள் திருமணமாகாமல் வீட்டிற்குள் இருக்கும்போது, இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார். முடியாது என்றால் அன்று ஒரு ரணகளமாகவே வீடு மாறி விடுகிறது. என்ன செய்வது?” என்று கேட்டார்.

பாலுறவு சிக்கல் பற்றி, முழுமையாக, அதன் வகை, தன்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனை எப்போது ஏற்பட்டது? எல்லா நாட்களிலும் உள்ளதா? எப்போது கூடுதலாக உள்ளது? முன்பு எப்படி இருந்தது? இது பற்றி துணைவியின் அபிப்ராயம் என்ன? என்பது பற்றி மன நல ஆலோசகரிடம் தெரிவிப்பது மிக அவசியம்.

மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கு தன்னால் முன்பு போல உடல் உறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றும், விறைப்பில்லாமையுடன், பெண் உறுப்புக்குள் செலுத்த இயலாமையும் உள்ளது என்றும் வேதனைப்பட்டார். இதற்கான காரணத்தை அறிய அவரது மனைவியிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான தெளிவு கிடைத்தது. வீட்டில் ஒரு பிரச்சனை காரணமாக அவர்கள் வெளியேறி, வேறு ஒரு வீட்டிற்கு சென்றனர். அங்கு பூரணமான தனிமையான இட வசதி இல்லை. பல குடுத்தனங்கள் உள்ள வீடு. அங்கே உடல் உறவு கொள்ள போதுமான பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு பயம் அவருக்கு ஏற்பட்டது. யாராவது பார்ப்பார்களோ, வந்து விடுவார்களோ என்கிற பயம் வாட்டியது. பக்கத்து வீட்டுகார்ர்கள் வெளியே சென்றிருந்தாலும் கூட, அவர்கள் எப்போது திரும்பி வந்து கதவைத் தட்டுவார்களோ என்கிற பதைபதைப்பு வாட்டும். இதனால் ஏற்பட்ட மனத்தடை, திரும்பவும் தனது சொந்த வீட்டிற்கு சென்ற பிறகும் தொடர்ந்தது.

அவருக்கு மன அமைதிப் பயிற்சியை அளிக்கப்பட்டு தற்போது பிரச்சனையின்றி பாலியல் வாழ்க்கையை அனுபவிக்கமுடிகிறது.

ஓரினச்சேர்க்கை, சுய பாலின்பச் செயல், இரவில் விந்து வெளியேறுவது போன்ற பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இச்செயல்களால் ஏற்படும் மனப் போராட்டங்கள், குற்ற உணர்வுகள் களையப்பட முறையான சிகிச்சையும்  சைக்கோதெரபியும் தேவை.



மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குடும்ப பிரச்சனைகள், தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்