விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, August 18, 2016

மஞ்சள் காமாலையிலும் பலவகை உண்டு - Various Types of Jaundice in Tamil



 Types of jaundice manjal kamalai


சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரபலமானவர் மஞ்சள் காமாலையினால் இறந்தார் என்ற செய்தி அறிந்ததும் நமது இணையதள சுய மருத்துவர்கள் ஆளுக்கு ஆள், குடிப்பதனால் மட்டுமே மஞ்சள் காமாலை வருகிறது, அவன் அதிகம் குடித்துவிட்டான், மஞ்சள் காமாலைக்கு இது தான் மருந்து ஒரு நாளில் சரி ஆகிவிடும், இரண்டு நாளில் சரியாகி விடும், அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள், என இஷ்டம் போல ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

எப்படி சுரத்தில் (பீவர்) மலேரியா, டைபாய்ட், மூளைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், அம்மை காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என பலவகைகள் உண்டோ அதேபோல தான் மஞ்சள் காமாலையிலும் பலவகை உண்டு,

காய்ச்சலால் இறந்த ஒருவரை நாம் குறிப்பிட்ட இந்தவகை காய்ச்சலால் தான் இறந்தார் என்று அதிகம் குறிப்பிடுவதில்லை. ஆனால் மஞ்சள் காமாலையால் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவர் குடித்ததினால்தான் இறந்தார் என நா கூசாமல், விசயம் தெரியாமல் மேலதிகத்தனமாக கூறிவிடுகிறார்கள்.

மஞ்சள் காமாலையானது, குடிக்காதவர்கள், அசைவம் உண்ணாதவர்கள், பெண் தொடர்பு இல்லாதவர்களுக்கு கூட வரலாம்,

மஞ்சள் காமாலை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கான சிறிய தகவல் இது

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறி ஆகும். உடலில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றுகளையும், கல்லீரல் பாதிப்பையும் வெளிப்படுத்தும் அறிகுறிதான் மஞ்சள் காமாலை.

பல காரணங்களால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது,

மஞ்சள் காமாலையில் பல வகைகள் உள்ளனஅவற்றில் முக்கியமான காரணிகளை பார்ப்போம்,

பிறந்த குழந்தைகளுக்கு வரும் சாதாரன மஞ்சள் காமாலை
  • தாயிடம் இருந்து ஆக்ஸிசனை பெறும் கருவில் உள்ள குழந்தையானது பிறந்த உடனே தன் மூச்சுகாற்று மூலம் ஆக்சிஜனை பெறுவதில் ஏற்படும் உறுப்பு இயக்க சிக்கல்களினால் இது ஏற்படுகிறது, இந்த வகை மஞ்சள் காமாலையானது இன்குபேட்டரில் வைத்து பராமரித்தாலே சரியாகிவிடும்,

Hemolytic jaundice
  • இதை Hereditary Spherocytosis (HS) என்று அழைப்பார்கள், இது பிறவியிலேயே வரும் மஞ்சள் காமாலையாகும், இது மண்ணீரல் பாதிப்பு மற்றும் இரத்தில் உள்ள சிகப்பணுக்களில் ஏற்படும் பிரச்சனையால் வருவது, இதற்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.

ஹெப்பாடிக் ஜாண்டிஸ் – Hepatic Jaundice
இது கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் நோய் தொற்றுகள், வியாதிகளால் வரும் மஞ்சள் காமாலையாகும்.

இதில் பலவகைகள் உள்ளன,
Hepatitis A,
  • ஹெப்படைட்டிஸ் A வைரசினால் ஏற்படும் கல்லீரல் அழற்ச்சி (வீக்கம்)
Hepatitis B 
  • ஹெப்படைட்டிஸ் B வைரசினால் ஏற்படும் கல்லீரல் அழற்ச்சி (வீக்கம்)
Hepatitis C
  • ஹெப்படைட்டிஸ் C வைரசினால் ஏற்படும் கல்லீரல் அழற்ச்சி (வீக்கம்)

Alcoholic Liver Disease  
  • Where the liver is damaged as a result of drinking too much alcohol – ஆல்கஹால் (மது, சாராயம்) அதிகம் குடிப்பதால் வரும் மஞ்சள் காமாலை இதை ஆல்கஹாலிக் லிவர் சிரோசிஸ் என்பார்கள்.

Leptospirosis
  • A bacterial infection that's spread by animals, particularly rats – லெப்டோஸ்பைரோசிஸ்- விலங்குகளினால் பரவும் பாக்டீரியாவினால் வரும் மஞ்சள் காமாலை, முக்கியமாக எலியினால் வரலாம்,

Drug misuse
  • Leading causes are ecstasy and overdoses of paracetamol- மருந்துகளினால் வரும் மஞ்சள் காமாலை, அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்வதாலும் மஞ்சள் காமாலை வரலாம். ( பாராசிட்டமால் மாத்திரை அட்டையில் மிகவும் சிறியதாக அச்சிட்டிருப்பார்கள்- Over Dosage of Paracetamol may cause Liver Damage என்று)

Primary Biliary Cirrhosis
  • A rare condition that causes progressive liver damage – பிரைமரி பிலியரி சிரோசிஸ் மிகவும் அரிதாக வரும் நிலை இது, இந்த நிலையில் கல்லீரலானது மெதுவாக பழுதாகிக்கொண்டே வரும்,

Gilbert's syndrome
  • A common genetic syndrome where the liver has problems breaking down bilirubin at a normal rate. – கில்பெர்ட் சிண்ரோம் இது ஜெனிடிக் பிரச்சனையால் வரும் மஞ்சள் காமாலை ஆகும்.

Liver cancer
  • A rare and usually incurable cancer that develops inside the liver – கல்லீரல் புற்றுநோயிலும் மஞ்சள் காமாலை என்பது ஒரு அறிகுறியாகும்,

Autoimmune hepatitis
  • A rare condition where the immune system starts to attack the liver -  ஆட்டோ இம்யூன் ஹெப்படைடிஸ் இது நோய் எதிர்ப்புதன்மை குறைபாட்டால் வரும் கல்லீரல் வீக்கமாகும்,

Dubin-Johnson syndrome
  • A rare genetic syndrome where the liver is unable to move bilirubin out of the liver – டுபின் ஜான்சன் சின்ரோம் மிகவும் அரிதான நிலை இது, கல்லீரலிளிருந்து பித்தநீர் வெளியேற முடியாத நிலையில் இந்த நோய் ஏற்படுகிறது.

இதர காரணங்கள்
Ø  Gallstones – obstructing the bile duct system – பித்தப்பையில் ஏற்படும் கற்கள் மூலம் அடைப்பு ஏற்படுவதால் இந்த நிலை ஏற்படலாம்.
Ø  Pancreatic cancerகனைய புற்றுநோய் இருந்தாலும் மஞ்சள் காமாலை வரும்,
Ø  Gallbladder cancerபித்தப்பை புற்றுநோய் இருந்தாலும் மஞ்சள் காமாலை வரும்,
Ø  Pancreatitis – inflammation of the pancreas, கனையத்தில் ஏற்படும் வீக்கத்தினால் கூட மஞ்சள் காமாலை வரும்,

அறிகுறிகள்
ü  மஞ்சள் காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருத்தல். Jaundice, Yellowish Urination,
ü  குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுவலி, Nausea, Vomiting, Loss of appetite, Pain in stomach,
ü  தோலில் அரிப்பு, Itching in Skin
ü  கண் மஞ்சள் நிறமாவது – Yellowish Eye
ü  சோர்வு, உடல் நலம் குன்றுதல். Tiredness, body weakness,
ü  மூட்டுகளில் வலி மற்றும் குறைந்த அளவு காய்ச்சல், mild fever with joint pain,

முறையான ரத்த பரிசோதனை மூலம் நோயை கண்டறிவதுதான் சிறந்தது.


மஞ்சள் காமாலையின் அரசன் ஹெப்படைடிஸ் பி – Hepatitis B யை பற்றி இங்கு சற்று விரிவாக பார்ப்போம்,

ஹெப்படைடிஸ் பி – Hepatitis B
ஹெப்படைடிஸ் - பி என்ற வைரசால் உண்டாகும் நோய்த்தொற்று இது. கடுமையான கல்லீரல் வீக்கம், நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று ஆகியவற்றை உண்டாக்கும். வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கத்தில், இது மிகவும் அபாயகரமானது.

குறுகிய கால நோய் தொற்றினை அக்யூட் ஹெபடைடிஸ் பி (Acute Hepatitis B) என்பர்.

ஹெபடைடிஸ் தொற்று கண்ட தோராயமாக 10 சதம் மக்களில் இவ்வகை நோய் நீண்ட நாட்கள் பாதிப்பு இருக்கும்.

ஹெபடைடிஸ் பி நோய் கண்டவர்களில் பலருக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கலாம் (Symptomatic Hepatitis B). ஆனால் சிலருக்கு இந்நோயின் அறிகுறிகள் தெரிவது இல்லை (Asymptomatic Hepatitis B)

இவ்வகை அறிகுறிகள் இல்லாத நோயாளிகள், இந்நோயினை சுமந்து (Hepatitis B Carrier)  பிறருக்கு பரவச்செய்கின்றனர்.

ஹெப்படைடிஸ் பி  நோய் தாக்கிய நபருக்கு, கல்லீரல் நிரந்தரமாக சேதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. லிவர் சிரோஸிஸ் (Liver Cirrhosis) கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) வர வாய்ப்புண்டு.

ஹெப்படைடிஸ் பி   நோய் தொற்ற காரணங்கள்
ஹெபடைடிஸ் பி இரத்தத்தின் மூலமும் மற்றும் உடல் திரவங்கள் மூலமும் பரவுகிறது. கீழ்காணும் முறையிலும் நோய் தொற்று ஏற்படும்.

Ø  சுகாதார மையங்களிலும்  மருத்துவ தொழில் சார்ந்தவர்களும், நோய்கண்ட நபரின் இரத்தத்தை அல்லது உடல் திரவங்களை (உமிழ்நீர், விந்து, யோனி சுரப்பு) தொடுவதன் மூலமும், ஊசி குத்திய காயத்தாலும் மருத்துவர்கள், செவிலியர்கள் இவ்வகையான பாதிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள்.- Infections to the Doctors and medical staffs due to mishandling of infected  materials, including body secretions like, semen, vaginal discharge, saliva
Ø  நோய் கண்ட நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்வதால். Un protected sex with infected person,
Ø  நோய்வாய்ப்பட்ட நபரின் இரத்தத்தினை பிரறுக்கு செலுத்துவதின் மூலம், infected  blood transfusion
Ø  ஒரே ஊசியினை பலர் பகிர்ந்து கொள்ளும்போது, (போதை மருந்து பழக்கமுள்ளவர்கள், பாதுகாப்பற்ற முறையில் ஊசி பரிமாறி கொள்ளுதல்) Sharing of Needles and Injections,
Ø  நோய் கிருமிகளை கொண்ட சுத்தமில்லாத உபகரணங்களை கொண்டு பச்சை குத்திக்கொள்ளுதல் மூலமாகவும்.- Infected Tattoo needles,
Ø  நோய் கண்ட தாய்மூலம் குழந்தை பிறக்கும்போது, பிறக்கும் குழந்தைக்கு தொற்றுகிறது அல்லது குழந்தை பிறந்த குறுகிய காலத்தில் பிள்ளைக்கு தொற்றுகிறது. During or after child birth,
Ø  மருத்துவமனைகளில் சரிவர கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை, மறுமுறை பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகளுக்கிடையில் பரவுகிறது. Un sterilized needles in hospitals


ஹெப்படைடிஸ் - பி தொற்று யாருக்கு வரலாம்
Ø  யாருக்கு வேண்டுமானாலும் ஹெப்படைடிஸ் பி வரலாம்.
Ø  ஆனால் கீழ்கண்ட நபர்களுக்கு, நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாகும்.
Ø  ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடைய ஒருவருடன் உடலுறவு கொள்பவர்.
Ø  ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் உடலுறவு கொள்பவர்.
Ø  ஓரினச் சேர்க்கை கொள்பவர்.
Ø  ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடையவருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்.
Ø  ஹெப்படைடிஸ் - பி அதிகமாக உள்ள இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவர்.
Ø  மருத்துவ சம்பந்தமான மற்றும் ரத்த ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் (Lab Technicians) பணியில் ஈடுபடுபவர்.
Ø  போதை மருந்திற்கு அடிமையானவர் Drug Addicts.
                                           
ஹெப்படைடிஸ் பி  தடுப்பு முறைகள்
ü  இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை பரிசோதித்தபின்னர் இரத்தம் தேவைப்படுபவருக்கு தானம் செய்தல்
ü  தடுப்பு ஊசியினை முழுமையான நோய் எதிர்ப்பு தன்மையை அடைய ஒரு நபர் ஆறுமாத காலத்திற்குள் மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவேண்டும்
ü  குறைந்த நாள்பட்ட அல்லது நாள்பட்ட ஹெபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் கொண்டவரோடு பாலுறவு கொள்வதினை தவிர்த்திடல் வேண்டும்.
ü  ரத்தம் இருக்க வாய்ப்புடைய, தனிப்பட்ட முறையில் கையாளும் பொருட்களான  சவரகத்தி Shaving Blade, Razar,, பல்துலக்கும் பிரஷ் –Tooth Brush, துண்டு Towel ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள கூடாது.
ü  முடிதிருத்தம் செய்தல் Hair Cut, பச்சைகுத்துதல் Tattoo, ஊசி போடுதல் Injections, இவைகளை செய்துகொள்ளும் முன் நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும்.
ü  பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளுதல்.
ü  போதை மருந்துக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொள்ளுதல்.

ü  முன்கூட்டியே ஹெப்படைடிஸ் - பி' தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், மிக சிறந்த தடுப்பு முறையாகும்.

ஹெப்படைடிஸ் - பி  ஆய்வக பரிசோதனைகள் - Hepatitis B virus (HBV) testing
  • Hepatitis B surface antigen (HBsAg)
  • Hepatitis B surface antibody (HBsAb) .
  • Hepatitis B e-antigen (HBeAg)
  • HBV DNA testing
  • Liver Function Test,


இதர ஹெப்படைட்டிஸ் வகைகள்,
ஹெப்படைட்டிஸ் வைரஸ் எ, சி, , - Hepatitis A,C,E.,


ஹெப்படைட்டிஸ் மருத்துவம்.
சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. ஆங்கில மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கான மருந்துகள் மிக்க்குறைவு. தகுதியான மருத்துவரின் பரிந்துரையின் பேரிலே ஆய்வக பரிசோதனைக்கு பிறகு சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.


மஞ்சள் காமாலை, சில கேள்வி பதில்கள்

கேள்வி- மஞ்சள் காமாலை ஆரம்பித்த உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா,
பதில்- சில நேரங்களில் அதிகமான எண்ணை பண்டங்கள், ஹோட்டல் உணவு வகைகள் அதிக மாமிச உணவுகள் உட்கொள்வதன் மூலமும் மஞ்சள் காமாலை வரலாம், இவர்கள் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் மருந்துகளின்றி தானாகவே சரியாகிவிடும்.

கேள்வி- மஞ்சள் காமாலை உள்ளவர்கள் நாட்டுமருந்துகளை சாப்பிடலாமா,
பதில்- கண்டிப்பாக சாப்பிடலாம், நாட்டு மருந்துகளை விட அவர்கள் சொல்லும் உணவுக்கட்டுப்பாடானது மிக அவசியம். அதே சமயம் ஆய்வக பரிசோதனை மேற்கொள்வது மிக அவசியம்.

கேள்வி- அனைத்து வகை மஞ்சள் காமாலைகளுக்கும் நாட்டு மருந்து பயன்படுமா?
பதில்- கண்டிப்பாக பயன்படாது,

கேள்வி- மஞ்சள் காமாலைக்கு எளிமையான வீட்டுமுறை வைத்தியம் சொல்லுங்கள்
பதில்- கீழாநெல்லி அரைத்து காலையிலும் மாலையிலும் கொடுக்க வேண்டும், மேலும் இத்துடன் வில்வ இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து அதன் சாறு, எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வர மஞ்சள் காமாலை நோய் தீரும்.

நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை போய்விடும்.

இப்படி செய்தும் மஞ்சள் காமாலை குணமாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். 
மருத்துவர். செந்தில் குமார் தண்டபானி,
பட்டதாரி ஹோமியோபதி மருத்துவர்,

பாரம்பரிய சித்த மருத்துவ ஆலோசகர்,



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்