ஆணின்
பிறப்பு உறுப்பு மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆணின்
பிறப்பு உறுப்பு அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும்
உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. பிறப்பு உறுப்பானது விரைப்புத்தன்மை
அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து
மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
இந்த மூன்று
உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள்
செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி பிறப்பு
உறுப்பு விரைக்கிறது. பிறப்பு உறுப்புகள் முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும்
விதத்தில் அமைந்துள்ளது.
ஆண் பிறப்பு
உறுப்பின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள்
உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி. ஆண் பிறப்பு உறுப்பின் நடுப்பகுதியை விட தலையில் தான்
உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின்
வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு
நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.
ஆண் பிறப்பு
உறுப்பின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக
இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள். தலைப்பகுதி நேரடியாகத்
தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: Ramesh - 28 – 99******00 – Erection Problem – 20-12-2016
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==