விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, September 8, 2016

குடும்ப நல ஆலோசனை மையம் சென்னை, - Family Counseling Clinic Chennai, Tamil nadu

 chennai family counseling clinic velachery



ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தாம்பத்யம்:
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் மனைவிக்கிடையேயான தாம்பத்ய உறவுதான்.

வெவ்வேறு குணங்களையும் எண்ணங்களையும் கொண்ட இரு வேறு உடல்கள் சங்கமித்து மனம் மற்றும் உடலின் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தான் மகிழ்ச்சியான தாம்பத்யம்.    

உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட பல சிறப்பான பலன்களை அளிக்கிறது.

ஆண், பெண் இருவரின் சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் உடலுறவு அவசியமாகின்றது. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைந்து மனச்சோர்வு நீங்குகின்றது, சிந்தனை சீரடைகிறது.

உடலுறவு ஆண்களுக்கு உடல்உறவு களைப்பை போக்கி, இறுக்கத்தை தளர்த்தி, மனச்சோர்வை நீக்கி, மனதை மகிழ்ச்சியடையச்செய்யும் ஒரு மாமருந்து.

ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் ஈஸ்ட்ரஜனின்அளவு சீர் செய்யப்படும். மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் ஈஸ்ட்ரஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. இதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வது, பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும். ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது. மகிழ்ச்சியான உடலுறவினால் பெண்களின் அழகும் இளமையும் கூடுகிறது.

அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும், நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு நான்கு முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் பத்து வயது குறைந்தவர்களாக தோன்றுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும்.

அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு மூன்று முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே மிக சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது.


உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.

மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும். சோர்வு நீங்கும் உடலில் இம்மியூளோகுளோபுலின் ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் வேதி பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட உடலுறவு வழி வகுக்கும்.    

இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும். கணவன் மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும், வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.

நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Family Counseling, Sex Counseling, – 20-12-2016 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்