ஆபாச படங்களுக்கு அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்.
நாங்க ஆறு பேரும், சில மாதங்களுக்கு முன்னால, கோவா
போய் "ஜாலியா' இருந்துட்டு
வந்தோம்; இப்போ, எங்களுக்குப்
பயமா இருக்கு டாக்டர், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட்
பண்ணணும். '' வார்த்தையை முடிப்பதற்குள் அவர்களின்
மேல் எரிச்சலாக வந்தது;
காரணம், அவர்கள் ஒரு கல்லூரியில்
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்.
இதற்கு மேல்தான்
காத்திருக்கிறது அதிர்ச்சி.
மாணவர்கள் ஏதோ பயத்தில்
வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை
ஆய்வக பரிசோதனைக்கு பரிந்துரைத்துப்
பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு
எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று
தெரியவந்தது.
தனியார் கல்லூரிகளில்
படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி
நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை. இந்த வாழ்க்கை முறைதான், இந்த
மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.
கலாசாரத்தின் ஆணிவேர்களில்
அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின்
வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த
தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப்
போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு
ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.
விளையாட்டாக "வீடியோ
கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி பார்க்க ஆரம்பிக்கின்றனர்.
கல்வி, விளையாட்டு, பொது
அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப்
போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, கல்வி நிறுவன வளாகம்; இறுதியாக வெளிச்சூழல். பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், கல்வி
நிர்வாகங்களின் பண வேட்டை, ‘டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும்
ஒரு காரணம்.
குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை.
விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது
சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய
இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே
முடியாது. ஆபாச
படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு
அடிமையாவதுடன் ஆண், பெண்
நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக
இருக்கும்.
எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ்
கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என
கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
பிஞ்சிலே பழுக்கும் அவலம்:
தற்போது 15 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும்
முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது
அதிகரித்து வருகிறது; பயம்
மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு
உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர்.. இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது..
தொழில்நுட்ப வளர்ச்சி
காரணமாக நேரிடையாக பார்க்கும் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது
என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும்
வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்சனை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை.
ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின்
பெயர் - வயது – அலைபேசி எண்
– பிரச்சனை (ஒரு வரியில்) தேதி
– கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல்
மூலம் அனுப்பவும். உதாரணம்:
ரம்யா - 26 – 99******00 – போர்னோ கிராபி
பார்த்தல், Addicted to Pornography, Mobile sex. internet sex addict,phone sex addiction, porn
videos, – 20-12-2016 – சனிக்கிழமை
– சென்னை,
மருத்துவர்
உங்களின் முன்பதிவை குறுந்தகவல்
மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==