விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 31, 2018

கசந்துபோகும் செக்ஸ் உணர்வுகள் - Bitter sex with husband

 sex counseling clinic in chennai




அந்த நேரத்தில் என்ன நினைப்போ
ஒவ்வொருவருக்கும் ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.  இது செக்ஸ் உறவின்போது கூடநிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கலாம்.



குறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம்.  இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பீர்கள் என்று பெண்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்துள்ளன.  34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம்.

சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்துக் கொண்டிருப்பார்களாம். இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம்.  சில பெண்களுக்கு மனதில் தாங்கள் வரித்து வைத்துள்ள ஆண்களின் நினைவுகள் வந்து போகுமாம். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும் உறவின்போது அவரைத் தவிர வேறு சில ஆண்களும் கூட எனது மனதில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவர்கள் நான் சிறு வயது முதல் பார்த்து, நேசித்தவர்கள். இதனால் அவர்கள் எனது மனதில் வந்து போகிறார்கள். இருந்தாலும் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது என்றார்.  51 வயதான ஒரு பெண் கூறுகையில், எனக்கு இரண்டு முறை கல்யாணமாகியுள்ளது. நிறைய காதலர்களும் இருந்தார்கள். நான் படுக்கையில் இருக்கும்போது அந்தக் காதலர்களின் நினைவு வருவது வழக்கம்.

அதேபோல டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குப் போவது குறித்தும் நான் அந்த சமயத்தில் திட்டமிடுவது வழக்கம். மேலும் எனது வீட்டில் எத்தனை ஷூக்கள் உள்ளது என்பதையும் நான் மனதுக்குள்ளாகவே கணக்கிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளேன் என்கிறார்.  சில பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்த சினிமா ஸ்டார்களின் நினைவு வருமாம்.  இது இங்கிலாந்துக் கணக்காக இருக்கலாம்.

இருப்பினும் செக்ஸ் உறவின்போது வேறு சில சிந்தனைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுவது சாதாரணம்தான். சில நேரங்களில் கணவர்களுடனான உறவு பெண்களுக்குக் கசந்து போக இத்தகைய மாறுபட்ட சிந்தனைகளும் காரணமாகி விடுகிறது.

மனதொத்த உறவின் மூலம்தான் ஆணும், பெண்ணும் முழுமையான அன்பையும், இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். மாறாக இதுபோன்ற வேறு பாதைகளில் சிந்தனைகள் திரும்பும்போது அது கசப்பான விளைவுகளுக்கான ஆரம்ப கட்டமாகவே கருதப்பட வேண்டும்.  





மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்