செலவு
இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துங்கள்
மனைவியை
ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த
உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க சில யோசனைகள்.
ü நாம் செய்யும் சில சின்ன சின்ன காரியங்கள் மனைவியின் கவனத்தையும்
அன்பையும் பெறுகச் செய்வதோடு அவர்களை நாம் ஸ்பெஷலாக நடத்துவதையும் நினைப்பதையும்
உணர்த்த செய்யும்.)
ü ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிறிய புன்னகையுடன் மென்மையாக
கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தாருங்கள். அது அவர்களுக்கு அந்த நாளை சிறப்பாக
தொடங்குவதற்க்கு ஒரு உற்ச்சாகம் கொடுத்தது போல இருக்கும். அது கணவர் தன்னை
உணர்வுபூர்வமாக நேசிப்பதை உணர்த்தும்
ü முடிந்த போது வார இறுதியில் அவர்களுக்கு முன்பாக எழுந்து
காலை உணவு செய்து கொடுத்து உதவுங்கள். வாரம் முழுவதும் அவர்கள் அதிகாலையில்
எழுந்திருந்து நமக்காக உழைப்பவருக்கு நாம் செய்யும் இந்த காரியம் அவர்களூக்கு நல்ல
சந்தோஷத்தை அளிப்பதோடில்லாமல் நாம் அவர்களை சிறப்பாக நடத்துவதையும் உணர்வார்கள்.
ü நண்பர்கள், உறவினர் மற்றும் குடும்பதினர் முன்பு உங்கள் மனைவியின்
செயல்களை பாராட்டி பேசுங்கள் அதன் பயன் உங்களுக்கு நன்றாக தெரியும்.
ü அதுபோல உங்கள் மனைவி இல்லாத போது மனைவியின் உறவினர்களையோ
நண்பர்களையோ சந்தித்தால் அப்போது மிகவும்
புகழ்ந்து பேசுங்கள். அது அவர்களுக்கு தெரிய வரும் போது அவர்கள் அளவற்ற
சந்தோஷமடைவார்கள்.
ü செலவு இல்லாத சிறிய பரிசுப் பொருட்களை வாங்கி தரவும்.
உதாரணத்திற்கு கைப்பைகள், தலையில் வைக்கும் கிளிப்புகள்., கண்ணாடி வளையல்கள்....... இது
அவர்களை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதை உணர்த்தும்
ü அவர்களின் கைப்பையில் அல்லது அவர்கள் தினமும் திறந்து
பார்க்கும் இடங்களில் சாக்லேட் ஒன்றை வைத்து ஒரு சிறிய வாசகம் (ஐ லவ் யூ, கிஸ் பார் யூ) என்று எழுதி
அவர்களுக்கு தெரியாமல் வைக்கவும்.
ü இரவில் படுக்க செல்லும் போது மென்மையாக கட்டி அணைத்து
நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து அவர்களின் தலையை கோதிவிடவும். இதை விட
அவர்களுக்கு சந்தோஷம் ஏதும் கிடையாது. இது நமது மீதான அன்பையும் அவர்களுக்கு
சிறந்த பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும்.
பலன்
நன்றாகவே இருக்கும்
வாழ்த்துகள்
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:-
9786901830
பண்ருட்டி:-
9443054168
புதுச்சேரி:-
9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:
உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26,
90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.