விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, February 13, 2019

அதிமதுரம் மருத்துவ பயன்கள் - Athimathuram Home Remedies








அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. 

அதிமதுரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில்  போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 40 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி  தொடங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும், காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு  கரைந்து விடும்.

அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் (தலை மண்டை) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும்.  கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை  குணமாக்குகிறது.

அதிமதுரம் மருத்துவ பயன்கள்  சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர்


அறிமுகம்

அதிமதுரம் 1.5 மீட்டர் உயரம் வரை வளரும் மூலிகைசெடி. நட்டபின் மூன்று (அ) ஐந்து வருடங்கள் விட்டு அறுவடை செய்யப்படும். இந்த வருடங்களில் அதன் வேர்கிழங்குகளும் வேர்களும் பரவலாக, முழுமையாக வளர்ந்திருக்கும். பயன்படும் பாகங்கள் - வேர்த்தண்டு கிழங்கு  மற்றும் வேர்கள். தண்டு கிழங்கு பூமியின் கீழ் 3-4 அடிகளில், பரவலாக கிடைக்கும்.

அதிமதுரத்தின் தாயகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்கள் எனப்படுகிறது. தென் ஐரோப்பிய பகுதிகள், சிரியா, இராத், துருக்கி, கிரீஸ் மற்றும் ரஷ்யாவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் தென்னிந்தியாவிலும் பயிரிடப்படுகிறது.

பழங்கால கிரேக்கர்களுக்கு அதிமதுரத்தைப் பற்றி தெரிந்திருந்தது. சீன வைத்தியத்தில் உடலை "புதுப்பிக்கும்" மருந்தாக பயன்பட்டது.


அதிமதுரம் மருத்துவ பயன்கள்

  • பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
  • தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
  • வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண்  குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.
  • காயங்களுக்கு அதிமதுரப்பொடி + நெய் கலந்து பூசலாம். அதிமதுரக் களிம்பு + வேப்பிலை இலை காயங்களை சுத்தம் செய்யும். அதிமதுர களிம்பு + நெய் கலவை காயங்களை ஆற்றும்.
  • அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.
  • காலாணிகள்  - அதிமதுரப் பொடியை கடுகெண்ணை (அ) நல்லெண்ணெயில் குழைத்து காலாணிகள் மேல் போட்டால், அவை உதிரும்.
  • மலச்சிக்கல் - அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்