விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, June 22, 2024

ஆர்கசத்தை அடைய சில எளிய வழிகள் Simple Tips to Reach Orgasm.


 

ஆர்கசத்தை அடைய சில எளிய வழிகள் – Simple Tips to Reach Orgasm.


  • ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், 


  • சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது.


  • பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். 


  • இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத்தை அனுபவிக்கவும் முடியும்.


  • ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய, செக்ஸ் உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பது எளிதாகிறது.


  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுபவிப்பது கூடுதலாகும்.


  • குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகும். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள்.


  • இதுதொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில் 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல பிரமிக்கத்தக மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.


  • 92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.


  • உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கியமாக இருப்பதில்லை மாறாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப்பாக, சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக துய்க்க அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது..


  • ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.


  • செக்ஸ் உறவின்போது நமக்கு அதாவது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து கணவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக்குறைவான பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.


  • உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து விடலாம்.


  • ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.


  • உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.


  • உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.


  • உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்கலாம், அவ்வளவுதான்.


  • உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அதை விட அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.



அப்படியும் உங்களால் ஆர்கசத்தை உணரமுடியவில்லை, எட்டமுடியவில்லை என்றால் தயங்காது மருத்துவ ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறவும்.


வாழ்த்துகள்




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 

பண்ருட்டி:- 9443054168 

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com 

For appointment please Call us or Mail Us



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்