விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 21, 2015

ஒபிசிட்டி உடல் எடை கூடுவதற்கான காரணங்களும் – சிகிச்சையும் - Obesity Weight Gain Reasons and Obesity Treatment Clinic Chennai



 Obesity clinic velachery, chennai, ஒபேசிட்டி மருத்துவம் சென்னை வேளச்சேரி




உடல் எடை கூடுவதற்கான காரணங்களும்சிகிச்சையும்

அதிகமான கொழுப்பானது உடலில் தங்கி விடுவதால் சாதாரண அளவில் இருக்க வேண்டிய எடையைவிட 20 சதவீதம் உடல் எடை அதிகரித்துக் காணப்படும் நிலை உடல் பருமன் என்று அழைக்கப்படுகிறது.

உடல் பருமன் நிலையினால் ஏற்படும் பாதிப்புகள்
Ø  பருமனான உடல் நிலை மோசமான உடல் விளைவுகளுக்கும் இளவயது மரணத்திற்கும் காரணமாகின்றது.
Ø  பருமனான உடல் நிலை, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பின் அளுவு அதிகரித்தல், இதய நோய், நீரிழிவு, சிறுநீரகக் கல் மற்றும் ஒரு வகையான புற்று நோய்க்கும் வழிவகுக்கிறது.
Ø  அளவிற்கு அதிகமாக உண்பது மற்றும் குறைந்த உடல் உழைப்பு போன்றவைகளாலும் சில சமயங்களில் பரம்பரை காரணங்களாலும் பருமனான உடல் நிலை குறைபாடு ஏற்படுகின்றது.


உடல் பருமன் நிலைக்குக் காரணங்கள்
ü  சாப்பிடும் அளவிற்குத் தகுந்த சக்தியானது உடலில் செலவிடப்படாத நிலை
ü  அதிக அளவில் கொழுப்பு பொருட்களை உட்கொள்வது
ü  குறைவான உடல்பயிற்சி மற்றும் இலகுவான வாழ்க்கை முறை
ü  மனநிலை சம்பந்தமான காரணிகளினால் அதிகமான உணவை உட்கொள்வது
ü  உடலுக்குத் தேவையான சக்தயை உடல் சரியாக செலவழிக்கத் தவறும் போது
ü  குழந்தைபருவத்தில் இருக்கும் பருமனான உடல் பின்னர் வளர்ந்த பின்பு பருமனான உடல் நிலைக்கு வழிவகுக்கிறது.


சரிவிகித உடல் எடை அளவு
சரிவிகித உடல் எடையினை கணக்கிடுவதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் கணக்கீடுமுறை "பாடி மாஸ் இன்டக்ஸ்" (உடல் எடை குறி) ஆகும். இதன்மூலம் சரிவிகித உடல் எடையினைக் கணக்கிட இயலும்.

 உடல் எடை குறி = உடல் எடை (கிலோகிராம்)/[உயரம் (மீட்டர்)]2
உடல் எடை குறி
¬  18.5 ஐவிட குறைவாக இருந்தால் - குறைந்த எடை
¬  18.5 - 25 வரை இருந்தால் - சரியான எடை
¬  25 - 30 வரை இருந்தால் - அதிக எடை
¬  30 ஐவிட அதிகமாக இருந்தால் - மிக அதிக எடை


உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்
ü  எண்ணையில் பொரித்த உணவு வகைகளை மிகவும் குறைந்த அளவில் உண்ண வேண்டும்.
ü  அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ü  நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுவகைகளான முழுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் முளைகட்டிய பயறுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ü  தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ü  மெதுவாக மற்றும் சீராக உடல்எடை குறைய வேண்டும்.
ü  அதிக அளவில் பட்டினி இருப்பது உடல்நலக்குறைவிற்கு வழிவகுக்கக்கூடும்.
ü  நமது உடல் இயக்கத்திற்கு ஏற்ற அளவில் தேவையான உணவினை தாராளமாக உட்கொள்ளலாம்.
ü  குறைந்த அளவு உணவினை அதிக இடைவேளைகளில் உண்ண வேண்டும்.
ü  சர்க்கரை, கொழுப்பு மற்றும் மது போன்றவற்றை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும்.
ü  ஆடைநீக்கிய பாலை உபயோகிக்க வேண்டும்.
ü  மாவுச்சத்து உணவுகளை குறைத்து, புரதச்சத்து உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.



ஒபிசிட்டி உடல் இளைக்க ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Obesity, Over weight, Weight gaining  பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 –ஒபிசிட்டி, உடல் இளைக்க, எடை குறைய – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




==--==



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்