விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

வெயில் காலமும் சரும நோய்களும் அதன் சிகிச்சை முறைகளும் - Skin Diseases and Its Treatment During Summer Season



 வெயில் காலமும் சரும நோய்களும் அதன் சிகிச்சை முறைகளும் - Skin Diseases and Its Treatment During  Summer  Season



வெயில் காலமும் சரும நோய்களும் அதன் சிகிச்சை முறைகளும் -

v  வெயில் காலத்தில் வியர்வையால் அரிப்பு, உடல்நாற்றம், படர்தாமரை, கொப்புளங்கள் போன்றவை வருவது இயல்பு. அதனால் உடல்சுத்தம் ரொம்ப அவசியம்.

v  வெயில் காலத்தில் உடலை இறுக்கும் ஜீன்ஸ் மாதிரி அனிவதை தவிர்த்து, காற்றோட்டமான, வியர்வை உறிஞ்சும் காட்டன் டிரஸ் போட்டுக்கொள்வது நல்லது.

v  அதிக வெப்பத்தால் சருமம் கறுத்தும், சுருங்கியும் போவதற்க்கு வாய்ப்பு அதிகம் எனவே சன் ஸ்கிரீன் லோஷன் போடலாம்.

v  சோரியாசிஸ் என்ற தோல் உதிர்வு நோய் வந்தால் கை, கால், உள்ளங்கைமுட்டி போன்ற இடங்கள்ல கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தோல் வளர்ச்சி இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஓமியோபதி மருத்துவ சிகிச்சை உதவும்.

v  வெண் புள்ளி மாதிரியான நோய்களுக்கு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை உதவும்.

v  சிக்கன் பாக்ஸூக்குத் தடுப்பூசியும், மாத்திரைகளும் இருக்கு. இதன்மூலமா அம்மைத் தழும்புகளைத் தடுக்கலாம்.

v  குழந்தைகளுக்கு வரும் சொரி, சிரங்குக்கு சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால், அவர்கள் வளர்ந்த பின்பும் அந்தத் தழும்புகள் அசிங்கமாக தெரியும்.

v  அலர்ஜி பற்றி நாம் கொஞ்சம் அலார்ட்டாக இருக்க வேண்டும்.


v  அலர்ஜிக்கு சாப்பாடு, சருமத்தில் அழுத்தும் ஆபரணங்கள், ஒத்துவராத சில மாத்திரைகள், பூச்சிக் கடிகள் என்று நிறைய காரணங்கள் இருக்கிறது. பார்த்தீனியம் செடியால் பல பேருக்கு அலர்ஜி வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த "ஒவ்வாமை"கள் பற்றி ஒரு கவலையும் வேண்டாம்.

v  டீன் ஏஜ் பருவத்தில் வரும் பரு, ஒரு சாதாரண விஷயம். ஆனால், சரியான கவனிப்பு இல்லையென்றால் முகத்தின் அழகைக் கெடுத்துவிடும்.

v  பரு 13 வயது முதல் 26 வயது வரைக்கும் வரலாம்.

v  வளர்பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால்தான் பரு வருகிறது. முகம் மட்டுமல்லாது மார்பு, முதுகுப் பகுதிகளிலும் பரு வரலாம். இதற்கு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை உதவும்.


v  நிறைய பேருக்கு பருவுக்கும் மருவுக்கும் வித்தியாசம் தெரிவதில்லே.

v  மரு, வைரஸ்களால் வருகிறது. இதற்கு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை உதவும்.

v  முடி கொட்டுவதும் தோல் சம்பந்தப்பட்டதுதான். முடிகொட்டுவதற்கு மருத்துவரிடம் வரும் மக்களைவிட விளம்பரங்களை பார்த்து கண்ட கண்ட எண்ணெயை உபயோகப்படுத்தும் மக்கள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். முடி உதிர்வைத் தடுக்க மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் சிறந்த வழி.

v  தலைமுடி கொட்டுவதற்கு பொடுகு ஒரு முக்கிய பிரச்சினை.


v  முடி நன்றாக வளரவேண்டுமென சிலர் முட்டையை உடைத்து தலைக்குத் தடவுவார்கள். அதற்குப் பதிலாக அந்த முட்டையைச் சாப்பிட்டார்களென்றால் முட்டையின் முழு பலனும் உடலுக்கு கிடைக்கும்.

v  சிவப்பழகு கிரீம்கள், தோலுக்கு உண்டான நார்மல் கலர் என்னவோ அதைத்தான் தரமுடியும். கறுப்பாக இருப்பவர்கள் சிகப்பாக மாறலாம் என்பது வடிகட்டிய பொய். மேலும் அது போன்ற அழகு கிரீம்களை நான்கைந்து மாதத்திற்கு மேலே தொடர்ந்து உபயோகப்படுத்துவதும் அவ்வளவு நல்லது இல்லை.

v  மங்கு, தேமல் பற்றியும் நம்மிடம் சில மூடநம்பிக்கைகள் இருக்கிரது. குடும்பத்துக்கு ஆகாதென்று சொல்வார்கள். அதெல்லாம் அறிவீனம். தரமான சன் ஸ்க்ரீன் உபயோத்தாலே தேமல், மங்கு எல்லாம் மறைந்துவிடும்.

v  உடம்பை சுத்தமாக வைத்துக்கொள்வதும் வெயிலில் அதிகம் வெளியே செல்வதை தவிர்ப்பதும், பேரீச்சை, கீரை, தக்காளி, கேரட் மற்றும் பழச்சாறுகள் போன்றவை சாப்பிடுவதும் சருமப் பாதுகாப்புக்குச் சிறந்த வழிகள்.





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மருக்கள், பருக்கள், Acne, Warts – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்