விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

மருந்துகளை உட்கொள்ளும்போது கவனிக்கவேண்டியவை - Points to be Noted During Medicine Intake



 மருந்துகளை உட்கொள்ளும்போது கவனிக்கவேண்டியவை - Points to be Noted During Medicine Intake  Dr.D.Senthil kumar sexologist chennai, velachery




மருந்துகளை உட்கொள்ளும்போது கவனிக்கவேண்டியவை

சில நோய்களுக்கான மருந்துகளை சாப்பிடும் காலகட்டத்தில் மிகுந்த ஆரோக்கியம் தருவதாக நம்பும் உணவு வகைகளைக் கூட சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் எதிர் விளைவுகள் ஏற்பட்டு விடும்.

v  தொற்றுநோயின் பாதிப்பிற்காக நீங்கள் `ஆன்டிபயாடிக்' மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் பாலையும், `யோகர்ட்' உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இறைச்சியையும் ஒதுக்கி விடலாம். இந்த உணவுகள், குடல் அமிலங்களுடன் கலந்து மருந்துகளைக் கிரகித்துக் கொள்ளும் உடலின் திறனைக் குறைக்கும். பழங்களையும், கொட்டை வகைகளையும் சாப்பிடுங்கள். அவை, தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். ஆனால் `ஆன்டிபயாட்டிக்' எடுத்துக் கொள்ளும் காலம் முடிவடைந்ததும், உங்கள் குடலின் நுண்ணுயிர்களை உயிர்ப்பிக்கும் விதமாக `லஸ்சி' சாப்பிடலாம். உங்கள் குடலில் உள்ள பாக்டீரியா (`புரோபிட்டியோக்ஸ்'), குடலின் இயற்கையான அமிலச் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த உதவும்.

v  வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறீர்களா? வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான மருந்துகளை வேறு எந்த மருந்துகளுடனும், குறிப்பாக `ஆன்டிபயாட்டிக்கு'களுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுப்போக்கை அவை மோசமாக்கவே செய்யும்.

v  ஒவ்வாமையால் அவதிப்பட்டு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் நெருப்பில் சுட்ட இறைச்சி, பசலைக் கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள். ஞாபகத்தில் கொள்ளுங்கள்- புரதங்கள், குறிப்பாக விலங்கு புரதங்கள் ஒவ்வாமையைத் தூண்டவே செய்யும்.

v  நீங்கள் தைராய்டு பிரச்சினைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், கால்சியம் நிறைந்த உணவுகள், முட்டைக் கோஸ், சோயாபீன்ஸ் போன்ற வற்றைத் தவிருங்கள். அப்படியே சாப்பிடுவதாக இருந்தாலும், தைராய்டு மருந்து சாப்பிட்டு பல மணி நேரம் கழித்து மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். தைராய்டு மருந்து வெறும் வயிற்றில், அதேநேரம் தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

v  நீங்கள் வலி நிவாரணி மருந்து (உதாரணம்: பாராசிட்டமால்) எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகமாக இலைக் காய்கறிகளை சாப்பிடாதீர்கள். அவை மருந்தின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

v  மாத்திரைகளை வெந்நீர் அல்லது சூடான பானத்துடன் சாப்பிடும் வழக்கமுள்ளவரா? அதைத் தவிர்த்திடுங்கள். சூடானது, மாத்திரைகளின் திறனைப் பாதிக்கலாம்.

v  மருந்தை சாப்பிடும் கஷ்டம் தெரியாமலிருக்க அதை உணவுடன் கலந்து சாப்பிட நினைக்கிறீர்களா? வேண்டாம். மருத்துவர் கூறினால் ஒழிய அவ்வாறு செய்ய வேண்டாம். அது, மருந்து செயல்படும் விதத்தை மாற்றலாம்.

v  மருந்து சாப்பிடும் அதே நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிடுகிறீர்களா? வேண்டாம். வைட்டமின்களும், தாதுக்களும் சில மருந்துகளின் செயல்வேகத்தை குறைத்து விடும்.




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்