விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

சில மூடநம்பிக்கை மருத்துவங்களும் அதன் பின்விளைவுகளும் - Side Effects of Unproved Medical Beliefs



 சில மூடநம்பிக்கை மருத்துவங்களும் அதன் பின்விளைவுகளும் - Side Effects of Unproved Medical Beliefs



சில மூடநம்பிக்கை மருத்துவங்களும் அதன் பின்விளைவுகளும்

மஞ்சள் காமாலைக்கு உரிய மருத்துவம் பார்க்காமல் சூடு வைப்பது; அதனால் ஏற்படுகின்ற விபரீதங்கள், வலிப்பு நோய் வரும்போது அதை நிறுத்த இரும்புத்துண்டு, சாவி, கத்தி போன்ற பொருட்களைக் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் இன்றுவரை தொடர்கிறது.

இதுபோன்ற தவறான சிகிச்சை கொடுப்பதும், காலம் தாழ்த்துவதும் உயிருக்கே ஆபத்து.

Ø  குழந்தைகளின் குடலைச் சுத்தம் செய்வதற்காக அடிக்கடி பேதிமருந்து, விளக்கெண்ணை போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. இதனால், குடல்நலக்கேடு உண்டாகி விடும்.

Ø  குழந்தைகளுக்கு சூடு இருப்பதாக நினைத்து அதைத் தணிப்பதற்காக தேவைக்கு அதிகமாக எண்ணையை தேய்த்துக் குளிப்பாட்டுதல், மூக்கு நாசியிலும், காதுத் துவாரத்திலும், கண்ணிலும் எண்ணை விடுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுத்தும்போது நுரையீரல் அழற்சி ஏற்படும்.

Ø  சாம்பிராணி கொண்டு புகை போடக்கூடாது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம் என்கிற நிலையில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இதில் இருக்கலாம்.

Ø  முட்டை, பயறு மாவு போன்ற தேவையற்ற பொருட்களைக் கொண்டு உடம்பில் தேய்த்துக் குளிப்பாட்டும்போது, ஒவ்வாமையால் தோலில் அரிப்பும், தடிப்பும் ஏற்படலாம். தேய்த்துக் கொள்ளும் போது பிற்காலத்தில் ஒவ்வாமையின் அறிகுறிகள் தோன்றிடும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Ø  கண்நோய்க்கு, தாய்ப்பால், இலைச்சாறு போன்றவற்றை அறியாமையால் விடுவதால் நோய் தீர்வதில்லை. மாறாக, கண் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்யும்.

Ø  குடல் புழுக்களை அகற்றுவதற்காக, வேப்பெண்ணையைக் குழந்தைகளுக்கு கொடுப்பதால், நுரையீரலில் இறங்கி, ரத்தத்தின் மூலமாக மூளையைப் பாதிக்கும். அதனால், கை, கால்கள் செயலிழத்தல், நினைவிழத்தல் மட்டுமின்றி உயிருக்கே ஆபத்தாகவும் முடியும்.

Ø  அம்மை நோய் கண்டால், அம்மனுக்கு குற்றம் எனக்கூறி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது.

Ø  அம்மைநோய் மற்றும் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்னும் ஆரம்பக்கட்ட காசநோயை அடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைந்து விடும். அதனால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Ø  உடல்நலம் பாதிக்கப்படும் போது சீதபேதியும், வயிற்றுப்போக்கும் தொடர்ச்சியாக ஏற்படுவதுண்டு. அதனால் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Ø  அக்கி' எனப்படும் வைரஸ் தொற்றுநோயால், தோலில் கொப்புளங்கள் உண்டாகும்போது, செம்மண் கொண்டு எழுதுவதும், கரும்புள்ளி, செம்புள்ளிகளைப் பதிப்பதும் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டங்கள். இதனால் நோயின் கடுமை அதிகமாகி, வில்வாத குதிரை வலிப்பு நோய்க்கிருமிகள், பிற கிருமிகள் போன்றவை தொற்றும் அபாயம் ஏற்படும்.

Ø  சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளின் முகம், கை, கால், உடல் வீங்கி விடும். அதைப்பார்த்து ஊதுகாமாலை, சுரைக்காய்அம்மை ஏற்பட்டு விட்டதென்று எந்த வகையான சிகிச்சையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தக்கூடாது. உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Ø  குழந்தைகளின் உடல் நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போனால், அதற்கான காரணங்களை மருத்துவர் மூலம் அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

Ø  காசநோயின் ஆரம்பக்கட்ட நிலை, வலிப்பு நோய், இதயநோய்கள் போன்றவற்றிற்கு நீண்ட நாளைய சிகிச்சை தேவைப்படும்.

Ø  சிகிச்சையின் போது நோயின் அறிகுறிகள் தென்படவில்லை எனில், நோயின் அறிகுறிகள் கட்டுக்குள் இருப்பினும் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. மருத்துவரின் ஆலோசனையைக் கொண்டே சிகிச்சைÛயை தொடர்வதா, வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.

Ø  போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உடல்நலம் கெடுவதோடு மட்டுமல்லாமல், அதிக செலவும் ஏற்படும்.




 ==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்