பொதுவாக கேட்கப்படும்
பாலியல் சம்பந்தமான கேள்விகள் & பதில்கள்
ஆண் இனப்பெருக்க
மண்டலம்.
வினா: விதைகளில் வீக்கம் ஏற்பட காரணம் என்ன?
விடை: இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்
Ø
Hydrocoel- விதையை சுற்றி நீர் கோர்த்தல்.
Ø
Hernia - ஹெர்னியா
Ø
யானைக்கால் நோயின் ஒர் பக்க விளைவு.
உடனடி சிகிச்சை அவசியம், தாமதிக்காமல்
மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.
வினா: இரவு நேரத்தில் விந்து வெளியேறுவது நல்லதா ? இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?
விடை: தூக்கத்தின் போது விந்து வெளியேறுவதே இரவுநேர வெளியேற்றம். இவ்வயதில் இது பொதுவானது என்பதால் பயப்படவேண்டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது. தூக்கத்தில்
ஆண்குறி விரைத்து விந்து வெளியேறலாம். ஆனால்
விரைப்புத்தன்மையின்றி விந்து வெளியேறக்கூடாது.
வினா: முன் தோல் பின்னோக்கி வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
விடை: இதற்கு சிகிச்சை அவசியம், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை
பெறவும்..அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.
வினா: முன் தோல் பின்னோக்கி வரவில்லை என்றால் தாம்பத்திய சுகம் குறையுமா?
விடை: முன் தோலை பிற்சொலுத்த முடியாவிடின், உடலுறவின் போது, அது வலியை ஏற்படுத்தலாம். இது தாம்பத்திய சுகத்தை குறைக்கலாம்.
வினா: ஆண்குறியில் புண்கள் ஏற்பட்டால் அது பயப்படவேண்டிய் விஷயமா?
விடை: இந்த புண்கள் பால்வினை நோயின் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, மருத்துவரை ஆலோசனை செய்வது
நல்லது.
வினா: சிறிய ஆண்குறி தாம்பத்திய சுகத்தை குறைக்குமா?
விடை: இது ஆண்களாலும் பெண்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு மூடநம்பிக்கை. ஆண்குறியின் நீளத்தினால் இன்பம் பெறுவதில் பிரச்சினை ஏற்படுவதில்லை.
சில மூலிகை எண்ணைகள் பலன் தரும். மேலும் விபரங்களுக்கு மருத்துவரை நேரில்
சந்திக்கவும்.
வினா: ஆண்குறி விரைக்காததற்கு – விரைப்புதண்மை குறைபாடு ஏற்பட காரணங்கள் என்ன?
விடை: இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினையாகும். எனினும் நீரிழிவு நோய், அதிகம் மது குடித்தல், மற்றும் புகைத்தல் இப்பிரச்சினையை தரலாம். சரியான
சிகிச்சை நல்ல விரைப்புத்தன்மை பெற உதவும். மேலும் விபரங்களுக்கு மருத்துவரை
நேரில் சந்திக்கவும்.
வினா: முஸ்லிம் ஆண்களால் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயமான ‘முன்தோல் அகற்றல்’ – தொடர்பான விஞ்ஞான விளக்கம் என்ன?
விடை: ஆண்குறி முன்தோல் அகற்றல், ஒரு சிறிய அறுவை சிகிச்சை
மூலம் செய்யப்படும். இது ஒரு ஆணுறுப்பு பகுதியில் சுத்தத்தை ஏற்படுத்தும். இது மிகவும் நல்லது. இது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒர் மத சம்பிரதாயமாகும்.
வினா: விந்து முன் வெளியேற்றம் (
pre mature ejaculation) என்றால் என்ன?
விடை: உடலுறவின் போது, விந்து நீரானது, எதிர்பார்த்த நேரத்திற்கு முன் வெளியாகுமெனின் அது விந்து முன் வெளியேற்றம் என அழைக்கப்படும். இது பொதுவாக மனோதத்துவ ரீதியான ஒரு பிரச்சினை ஆகும். ஆனாலும் சில வேலைகளில் . இது வேறு காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, இவ்வாறான பிரச்சினைக்கு, சரியான சிகிச்சை பெற்றால் நீண்ட நேரம் விரைப்புத்தன்மை, விந்து
முந்துதலை கட்டுப்படுத்தலாம்.. மேலும் விபரங்களுக்கு மருத்துவரை நேரில்
சந்திக்கவும்.
வினா: தாடி சரியாக வளராததற்கு காரணம் என்ன?
விடை: தாடி ஆண்களின் சிறப்பு அடையாளம் ஆகும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் எனவே, இதை பற்றி கவலைப்படவேண்டாம். தேவைப்படின் மருத்துவரை நேரில் ஆலோசனை செய்வது
நல்லது.
பெண் இனப்பெருக்க மண்டலம் (Female Reproduction system)
வினா: பெண்குறியிலிருந்து திரவ வெளியேற்றம் – வெள்ளைப்படுதல், எப்போதும் ஒரு நோயின் அறிகுறியா?
விடை: இல்லை. இது பொதுவாக, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதனால் பூப்படையும் காலத்தின் பின் பெண்களில் ஏற்படலாம். அது நிறமோ, மணமோ அற்ற ஒரு திரவமாக, இருந்தால் யோனி
பெண்ணுறுப்பில் அரிப்பும் இருக்காது. இது ஒரு நோயல்ல. மற்றும் இது உடல் பருமனில் மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஆனால் பெண்குறியிலிருந்து திரவ வெளியேற்றம் யோனி வெளியேற்றம்- கெட்ட வாடை கொண்டதாகவோ, நிறமாற்றாமடைந்தாகவோ, பெண்குறியில் அரிப்புடனும்
இருந்தால் ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
வினா: கருப்பை கழுத்தில் புற்றுநோயை முற்கூட்டி அறியலாமா?
விடை: ஆம், இதற்கு PAP ஸ்மியர் பரிசோதனை ஒன்று செய்யப்படும். சரியான சிகிச்சை மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
வினா: உடல் பருமன் அதிகாமாயிருந்தால் குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா?
விடை: ஆம், உடல் பருமன் அதிகமாயிருந்தால் குழந்தை பேற்றை பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவரை ஆலோசனை செய்வது
நல்லது.
வினா: இரண்டு மாதவிடாய் சுழற்ச்சிகளுக்கு இடையில் வயிற்று வலி வர காரணம் என்ன?
விடை: பொதுவாக மாதவிடாய் சுழற்ச்சியின் 14 ம் நாள் முட்டை வெளியேற்றம் எற்படும். இது சில வேளைகளில் வலி எற்படுத்தும்.
வினா: பூப்படையும் வயதில் வேறுபாடு காணப்படுவது ஏன்?
விடை: இது பிறப்புரிமை தனித்தன்மை ரீதியான ஒரு விஷயமாகும். உடலிலுள்ள செக்ஸ் ஹார்மோன்களின் அளவு இதனை தீர்மானிக்கும். எனவே, இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் தாமதம் எற்பட்டால் பூப்படையும் வயதும் பின் தள்ளப்படும். பொதுவாக ஒரு பெண் பூப்படையும் வயது 11-13 . சிலருக்கு 17 வயதிலும்
வரலாம். மேலும் தாமதித்தால் மருத்துவரை உடனடியாக ஆலோசனை செய்வது
நல்லது.
வினா: மார்பகங்களின் பருமன் பெரிதாக அதிகரிக்க சிகிச்சை முறைகள் உண்டா?
விடை:மார்பகங்களின் அளவு பிறப்பின் போது தீர்மனிக்கப்படுவது ஆகும். மார்பகங்களின் அளவு தாம்பத்திய வாழ்க்கையையோ, பாலுட்டலையோ பாதிக்காது. சில மூலிகை
எண்ணைகள் பலன் தரும். மேலும் விபரங்களுக்கு மருத்துவரை நேரில் சந்திக்கவும்.
வினா: பூப்படைந்த பின், அடுத்த மாதவிடாய் தாமதாமாக காரணம் என்ன?
விடை: பூப்படைந்த பின், முட்டை வெளியேற்றம் சீரடைய ஒரு சிறிய காலம் தேவைப்படும். மிகவும்
தாமதித்தால் மருத்துவரை நேரில் சந்திக்கவும்.
வினா: ஒழுங்கற்ற மாதவிடாய்கான காரணங்கள் என்ன?
விடை: ஒழுங்கற்ற மாதவிடாய் செக்ஸ் ஹார்மோன்களில் எற்படும் மாற்றங்களால் ஏற்படலாம்.. மேலும்
Ø
மன உளைச்சல்
Ø
நீண்ட கால நோய்.
Ø
காலநிலை மாற்றம்
Ø
ஹார்மோன் மாற்றங்கள் ( செக்ஸ் ஹார்மோன்கள், தைராய்டு ஹார்மோன்கள்)
Ø
உடல் பருமனில் ஏற்படும் மாற்றாங்கள்( அதிகரிப்பு அல்லது குறைவு)
மேலும் விபரங்களுக்கும் சிகிச்சைக்கும் மருத்துவரை
நேரில் சந்திக்கவும்.
வினா: மாதாவிடாய் ஏற்படும் மூன்று நாளும் அவசியம் தலைக்கு
குளிக்க வேண்டுமா/
விடை: தலைக்கு குளிக்க வேண்டிய அவசியத்திற்கு எந்த விஞ்ஞான ரீதியாலன ஆதரமும் இல்லை. உடலை சுத்தமாக
வைத்திருத்தல் முக்கியமாகும்,
வினா: மாதவிடாயின் போது, உடலுறவு கொள்ளுவது நல்லதா?
விடை:இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் வெறுப்பை தராவிடின் எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும்
நோய் தொற்றை தவிர்க்க காண்டம் அணிவது மிக அவசியம்.
வினா: அன்னாசி, பீட்ருட் போன்ற உணவுகளை மாதவிடாய் காலங்களில் தவிர்த்துக்கொள்ள வேண்டுமா?
விடை: இல்லை, உணவுகளில் எந்த கட்டுபாடும் இல்லை.
வினா: மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி மற்று இடுப்பு வலி இருந்தால் என்ன செய்யலாம்?
விடை: இது பயப்பட வேண்டிய விஷயம் அல்ல, சுடுநீர் ஒத்தடம் அல்லது வலிநிவாரனி சாப்பிடுவதால் இவ்வலி குறையும்.
தொடர்ந்து வலி இருந்தாலோ தாங்கமுடியாத வலி இருந்தாலோ அவசியம் மருத்துவரை அணுகி
ஆலோசனை பெறவேண்டும்.
வினா: முதல் உடலுறவின் போது கட்டாயமாக ரத்த பெருக்கு ஏற்படவேண்டுமா?
விடை: இல்லை
வினா: முதல் உடலுறவின் போது ஒரு பெண்ணுக்கு ரத்தப்பெருக்கு ஏற்படவில்லை எனில் அவள் கன்னி இல்லை எனப்து ஊர்ஜிதமாகுமா?
விடை: இல்லை, சில பெண்களுக்கு கன்னித்திரை எனப்படும் மென்சவ்வு இல்லாமல் கூட
இருக்கலாம். சிலருக்கு அது தடிப்பானதாக கூட இருக்கும். எனவே, எனவே கன்னித்தன்மையை ஊர்ஜிதமாக்க ரத்தப்பெருக்கு பார்ப்பது அவ்வளவு நம்பிக்கையான ஒரு விஷயம் அல்ல.
வினா: இனப்பெருக்க உறுப்பு பகுதியில் புண்கள் வர காரணம் என்ன?
விடை: உறுப்பை சுற்றி அதிகளவு முடி இருப்பது ஒரு காரணமாகும். மற்றும் இப்பகுதியில் வியர்வை அதிகம் என்பதால், நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். எனவே தற்சுத்தம் முக்கியமாகும்
வினா: தற்சுகம் சுய இன்பம் Masturbation தீங்கானதா?
விடை: இல்ல, இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு விஷயமாகும். ஆனால் அதிகப்படியாக சுயஇன்பம் செய்தாலோ, அடிமையானாலோ மன ரீதியாகவும்,
உடல் ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் வரலாம். எனவே கட்டுபாடுடன் செய்தல் நல்லது.
வினா: தற்சுகம் உடல் பருமனை குறைக்குமா? உடல் பலனை குறைக்குமா? தாம்பத்திய சுகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?
விடை : இல்லை. ஆனால் அதிகப்படியாக சுயஇன்பம் செய்தாலோ, அடிமையானாலோ மன
ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் வரலாம். எனவே கட்டுபாடுடன்
செய்தல் நல்லது.
வினா: எயிட்ஸ் நோய் வருவதை தடுக்க தடுப்பு முறை மருந்துகள், தடுப்பூசி உண்டா?
விடை: இல்லை
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி, வெள்ளைப்படுதல் – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==